மத்தியப் பிரதேச ஆன்மிக சுற்றுலா - 2: மமலேஷ்வர் ஜோதிர்லிங்கம் & ஆதிசங்கரர் குகை

மத்திய பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஷ்வர், மகாகாளேஸ்வரர் ஜோதிர்லிங்க தரிசனம் மற்றும் பஸ்ம ஆரத்தி வழிகாட்டி.
Mamaleshwar Temple |  மத்தியப் பிரதேச ஆன்மிக சுற்றுலா
Mamaleshwar Temple | மத்தியப் பிரதேச ஆன்மிக சுற்றுலா
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

மமலேஷ்வர் ஆலயம் 24.08.2026:

ஓம்காரேஷ்வர் தரிசனம் முடிந்து அடுத்ததாக மமலேஷ்வர் (Mamaleshwar) ஜோதிர் லிங்கம் தரிசனம் காணச் சென்றோம். சிவபுரி தீவில் உள்ள புகழ்பெற்ற ஓம்காரேஷ்வர் ஜோதிர் லிங்கத்தின் மறுபாதியாக இது கருதப்படுகிறது. இந்த மமலேஷ்வர் (அமரேஷ்வர்) ஆலய தரிசனத்திற்குப் பிறகே ஜோதிர் லிங்க தரிசனம் முழுமை அடைகிறது என்பது ஆன்மீக நம்பிக்கையாகும். அத்துடன் இவை இரண்டும் சேர்ந்து ஒரே ஜோதிர் லிங்கக் கோயிலாக கருதப்படுகிறது.

நர்மதை நதியின் தென்கரையில் அமைந்துள்ள இக்கோவில் பழங்காலத்தில் அமரேஷ்வரர் கோவில் என்று அழைக்கப்பட்டது. ஓம்காரேஷ்வர் கோவில் நர்மதை நதியின் நடுவே 'ஓம்' வடிவத் தீவில் இருக்க, அதற்கு நேர் எதிரே நதிக்கரையில் மமலேஷ்வர் கோவில் அமைந்துள்ளது.

இந்த இரண்டு கோயில்களும் சேர்ந்து ஒரே ஜோதிர் லிங்கமாக வழிபடப்படுகின்றது. இக்கோவில் ஓம்காரேஷ்வர் ஜோதிர் லிங்க கோவிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இக்கோவில் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் பின்புற சுவரில் அம்பாள் ஸ்ரீபார்வதி தேவி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com