

க்ஷிப்ரா நதி:
மத்திய பிரதேசத்தில் பாயும் க்ஷிப்ரா நதி இந்து மதத்தின் மிகவும் புனிதமான நதிகளில் ஒன்றாகக் கருதப்படு கின்றது. இது "மால்வாவின் கங்கா" என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பிறப்பிடம் இந்தூர் அருகே விந்தியா மலைத்தொடரில் உள்ள காக்ரி பர்டி (Kakri Bardi) மலைப்பகுதி ஆகும். 195 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இது இறுதியில் மந்த்சூர் மாவட்டத்தில் சம்பல் நதியுடன் கலக்கிறது.
புகழ்பெற்ற உஜ்ஜயினி நகரம் க்ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது. 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான மகா காளேஷ்வரர் கோவில் இதன் அருகில் உள்ளது. இங்கு ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புகழ்பெற்ற சிம்ஸ்தா கும்பமேளா (Simhastha Kumbh Mela) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மகாவிஷ்ணுவின் வராக அவதாரத்தின் இதயத்தில் இருந்து க்ஷிப்ரா நதி தோன்றியதாக நம்பப்படுகிறது. மேலும் கிருஷ்ணர் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் கல்வி பயின்றதும் இக்கரையில்தான்.
மகாகாளேஷ்வர் ஜோதிர்லிங்கம்:
இங்கு செல்போன் அனுமதி இல்லை. வாங்கி வைத்து விடுகிறார்கள். எனவே போட்டோக்கள் எடுக்க முடிவதில்லை.