மத்தியப் பிரதேச ஆன்மிக சுற்றுலா - 4: உஜ்ஜயினி கால பைரவர் & மங்கள்நாத் கோயில்

மத்திய பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஷ்வர், மகாகாளேஸ்வரர் ஜோதிர்லிங்க தரிசனம் மற்றும் பஸ்ம ஆரத்தி வழிகாட்டி.
Mangalnath Temple | மத்தியப் பிரதேச ஆன்மிக சுற்றுலா
Mangalnath Temple | மத்தியப் பிரதேச ஆன்மிக சுற்றுலாImage Credit: Mangalnath Mandir Ujjain
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

கால பைரவர் கோவில்:

உஜ்ஜைனி நகரில் க்ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது காலபைரவர் கோவில். இவர் உஜ்ஜயினி நகரின் காவல் தெய்வமாக போற்றப்படுகிறார். மூலவர் காலபைரவர். அம்மன் பாதாள பைரவி அம்மன். ஆலமரம் தல விருட்சம்.

மதுபான பிரசாதம்:

இக்கோவிலில் மூலவருக்கு மதுபானம் பிரசாதமாக மற்றும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தெய்வம் மதுவைக் குடிக்கும் வினோதமான மற்றும் வியக்கத்தக்க வழக்கம் இங்குள்ளது. இங்கு நிறைய பேர் மது பாட்டிலை வாங்கி வருவதும், பூசாரி அந்த பாட்டிலைத் திறந்து மதுவை தட்டில் ஊற்றி கால பைரவரிடம் காட்ட மதுவை உறிஞ்சிக் கொள்கிறார் காலபைரவர்.

இரண்டு மூன்று முறை மது உறிஞ்சப்பட்டதும் மீதமுள்ள மது பிரசாதமாக அதைத் தந்த பக்தருக்கே வழங்கப்படுகிறது. பைரவர் மதுவைக் குடிப்பதும், மீதியை பிரசாதமாக பக்தர்களுக்கு தருவதும் பார்க்க வித்தியாசமாக இருந்தது. இத்தலம் ஸ்கந்த புராணத்தின் அவந்தி கண்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது முற்காலத்தில் காபாலிகா மற்றும் அகோரி போன்ற பிரிவினரின் வழிபாட்டுத் தலமாக விளங்கியது. இக்கோவில் தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்தே இருக்கும்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com