மம்மூத் குகைகள்: மனித சரித்திரமும் இயற்கையின் அற்புதமும்!

Mammoth Caves
Mammoth Caves
Published on

லக பாரம்பரிய சின்னங்கள் பல உலக நாடுகள் பலவற்றில் உள்ள பொழுதும் நம்மில் பெரும்பாலானவர் களுக்கு சில பிரபலமான சின்னங்கள் மட்டுமே தெரியும். உலக கவனம் பெறாத நிறைய பேர் அறியாத பல சின்னங்கள் இன்னும் உள்ளன. அவற்றில் முக்கியமானது அமெரிக்காவின் மம்மூத்து குகைகள் (Mammoth Cave). அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தின் மத்திய மேற்கு பகுதியில் 53 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள உலகின் மிக நீண்ட தொடர் குகை இந்த மம்மூத் குகைகளாகும். இந்த குகைகள், கற்கால மனிதர்கள் பாறைகளைக் குடைந்து வசிப்பிடங்களை உருவாக்கியதன் ஒரு பகுதியாகும்.

இன்றுவரை 426 மைல்களுக்கும் (689 கிலோமீட்டர்) அதிகமான குகைப் பாதைகள் ஆராயப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் புதிய பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த குகை அமைப்பு 10 மில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு, நிலத்தடி ஆறுகள் சுண்ணாம்பு பாறைகளை அரித்ததன் மூலம் உருவானது.

இந்த குகைகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளன. 5,000 ஆண்டுகளுக்கும் பழமையான பூர்வீக அமெரிக்க கலைப்பொருட்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மம்மூத்து குகைகளுக்குள் பிரம்மாண்டமான சுவர்கள், உயரமான விட்டம் கொண்டுள்ளது. 689 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த குகையின் பல பிரம்மாண்டமான அறைகளுக்கு சுற்றுலா பயணிகளால் நடந்து செல்ல முடியும். குழந்தைகள், வயதானவர்களுக்கு ரோப் கார் வசதியும் உள்ளது. கரடு முரடான பாதையில் நடப்பதற்கு மரபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாவுக்கு பெயர்போன இந்த இடத்தில் மின்சார மற்றும் குடிநீர் வசதியும் கெண்டகி மாகாண அரசால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட இந்த மம்மூத் குகைகளை ஒட்டி மம்முத் தேசிய பூங்காவும்(Mammoth Cave National Park) உள்ளது. இங்கு மலையேற்றம், முகாமிடுதல் மற்றும் படகு சவாரி போன்ற பல வெளிப்புற நடவடிக்கைகளும், குகைச் சுற்றுப்பயணங்களும் நடைபெறுகின்றன.

இதையும் படியுங்கள்:
அலையாத்தி காடுகளின் நடுவே ஒரு மறக்க முடியாத படகுப் பயணம்!
Mammoth Caves

மிசிசிப்பி கால லைம்ஸ்டோன் கற்களால் ஆன இந்த குகை சுவர்கள் மிகவும் கடினமானவை. எப்பேர்பட்ட கால சூழ்நிலையும் தாங்கும் தன்மை கொண்டவை. இந்த குகையை ஒட்டி அருவியும் ஒன்றுள்ளது. மம்மூத் குகைகள் அதன் பிரம்மாண்டமான அளவு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாபயணிகளுக்கு ஒரு சிறந்த இடமாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com