
குடும்பத்தோடு விடுமுறையைக் கொண்டாட சுவிட்சர்லாந்து போக ஆசையா? சுவிட்சர்லாந்து சென்று வரும் செலவில் பத்தில் ஒரு பங்கு மட்டும் செலவழித்து அதே அனுபவங்களைப் பெற்று வர இந்தியாவின் வடக்குப் பகுதியில், இமயமலைச் சரிவுகளின் அருகிலேயே பல கிராமங்கள் உள்ளன. அவற்றைச் சுற்றிலும் பரந்து விரிந்த பசுமைப் புல்வெளிகள், ஆழமான பள்ளத்தாக்குகள், அடர்ந்த காடுகள், பனி படர்ந்த மலை முகடுகள் என அனைத்தும் உள்ளன. கிராமத்து வீடுகள், ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் காணப்படும் பாரம்பரிய மர வீடுகளை நினைவு படுத்தும் விதத்தில் யூரோப்பியன் சலே (chalet) ஸ்டைல் கலை நயத்துடன் அமைந்துள்ளன.
புல்வெளிகள் நிறைந்தது. பின்னணியில் அடர்ந்த பைன் மரக்காடுகள். ஆல்ப்ஸ் மலையில் உள்ளது போன்ற, மரங்கள் வளர முடியாத மிக உயரமான, செங்குத்தான, பனி சூழ்ந்த 'அல்பைன் லாண்ட்ஸ்கேப்' என்னும் மலைத் தொடர்கள் இந்த கிராமத்திற்கு மிக அருகில் உள்ளன. இந்த கிராமத்தில் தங்கி, புல்வெளிகளில் காலார நடக்கலாம். சுமார் 800 மீட்டர் தூரத்தில் உள்ள காஜ்ஜி நாக் என்னும் மந்திருக்கு சென்று வரலாம். பாரா க்ளைடிங் சென்று மலைகளை சுற்றிப் பார்க்கலாம்.
மரத்தாலான வீடுகளைக் கொண்ட அமைதியான ஊர். எழில் கொஞ்சும் கின்னாவூர் கைலாஷ் ரேஞ்ச் இதன் பின்னணியில் உள்ளது. இம் மலைகளுக்கிடையே இருந்து சூரியன் உதிப்பதைப் பார்ப்பது கண்ணுக்கினிய காட்சி. இங்குள்ள மடாலயங்களுக்கு சென்று அங்கு வாழ்ந்து வரும் துறவிகளின் வாழ்வியல் முறைகளைக் கண்டும் கேட்டும் தெரிந்து கொள்ளலாம். கிராமத்தை சுற்றி வந்து அங்குள்ளவர்களின் பாரம்பரிய வழக்கங்கள் மற்றும் கலாச்சாரத்தை அறிந்து வரலாம்.
பசுமை நிறைந்த மலைச்சரிவுகள் மற்றும் அறவே மனிதர்களின் குறுக்கீடில்லாத இயற்கை அழகு நிறைந்த இடத்தில் அமைந்துள்ளது இந்த கிராமம். இங்கு செல்ல விரும்புபவர்கள், அமைதியான சூழலில் துங்நாத் மந்திருக்கு ட்ரெக்கிங் செல்லலாம். இயற்கையோடு இணைந்து நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். பறவை ஆர்வலர்கள் மலைச் சரிவுகளுக்கு சென்று, பிடித்தமான முறையில் நாளைக்கழிக்கலாம். கேம்ப் அமைத்து நிர்மலமான ஆகாயத்தில் மின்னும் நட்சத்திரக் கூட்டங்களைக் கண்டு களிக்கலாம்.
பூப் படுக்கை போல், வண்ண வண்ண மலர் செடிகள் நிறைந்த பள்ளத்தாக்குகள் மற்றும் பனி சூழ்ந்த மலை உச்சிகள் நிறைந்த அழகிய பள்ளத்தாக்கு இது. சுற்றுலா பயணிகள் பூக்களின் அழகை கண்டு மகிழலாம். வெப்ப நீரூற்றுகளைக் காணச்செல்லலாம். காரில் நீண்ட தூரப்பயணம் சென்று இயற்கையை ரசிக்கலாம். குறைந்த பட்ஜெட்டில் தங்குவதற்கு அருகிலுள்ள லாச்சுங் (Lachung) என்ற இடத்தை தேர்ந்தெடுத்க்கலாம்.
இயற்கை அழகிற்கு பங்கம் ஏற்படாத வகையில் பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வரும் அழகிய இடம். மரத்தாலான வீடுகள், ஆல்ப்ஸ் மலையின் அமைதி, ஆறோடும் பள்ளத்தாக்கு இவைகளே இந்த இடத்திற்கு சுவிட்சர்லாந்திற்கு இணையான அந்தஸ்து பெற உதவியுள்ளன என்று கூறலாம்.
பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் ஆல்ப்ஸ் மலையின் அழகிய இயற்கை காட்சிகள் இரண்டும் கலந்ததோர் தனித்துவம் கொண்ட இடம் இது. இங்குள்ள ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் மரத்தாலான வீடுகள் இங்கு செல்பவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் இருப்பது போன்ற உணர்வை தரும். இங்கு தங்கும்போது சாம்டென் யோங்ச்சா மடாலயத்திற்கு சென்று வரலாம். சைக்கிளில் சென்று உள்ளூர் மக்களை சந்திக்கவும் இயற்கையை ரசிக்கவும் செய்யலாம்.
சுத்தமான நிலப்பரப்புடைய, பர பரப்பில்லாத அமைதியான கிராமம். குருடாங்மர் ஏரி மற்றும் அருகில் உள்ள பள்ளத்தாக்குகள் பார்த்து ரசிக்க ஏற்றவை. உள்ளூர் உணவு வகைகளை ஒரு பிடி பிடிக்கலாம். Rs. 2,000/-க்கும் குறைவான ஒரு நாள் வாடகையில் தங்குமிடம் கிடைக்கும். மேலே குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று வர மார்ச்-ஜூன் மற்றும் செப்டம்பர்-நவம்பர் மாதங்களை தேர்ந்தெடுப்பது நல்லது.