

இந்தியாவில் உள்ள திகில் ஊட்டும் அமானுஷ்ய இடங்களைப் பற்றி பார்க்கலாம். ராஜஸ்தானில் உள்ள பங்கார் கோட்டை குல்தாரா கிராமம். டெல்லி கண்ட்டோ மென்ட். லோதியன் கல்லறை, கர்நாடகா லேக் வியூ, மகாராஷ்டிரா சனிவார் வாடா, குஜராத் குமாஷ் கடற்கரை, டார்ஜிலிங் லவ் ஹில், ஊட்டி பெர்ன் ஹில், போன்றவை முக்கிய இடங்களாகும்.
பங்கார் கோட்டை
இது ராஜஸ்தானில் உள்ளது தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை தடை செய்யப்பட்ட பகுதி ஆகும் இந்தியாவில் மிகவும் அதிக அளவில் பேய் நடமாடும் இடம் என கூறப்படுகிறது.
குல்தாரா கிராமம்
இதுவும் ராஜஸ்தானில் உள்ள ஒரு கைவிடப்பட்ட கிராமமாகும். பேய்கள் நடமாட்டம் காரணமாக ஒரே இரவில் மக்கள் அனைவரும் ஊரே காலி செய்து வேறு இடங்களுக்கு சென்றுவிட்டார்கள். அன்றிலிருந்து இன்று வரை இந்தப்பகுதி முழுவதும் பேய் நடமாடும் பகுதியாக அழைக்கப்படுகிறது
டுமாஸ் கடற்கரை குஜராத்
இங்குள்ள கடற்கரை முழுவதும் கருப்பு மணலால் சூழ்ந்த பகுதியாகவும் இரவு நேரத்தில் விசித்திரமான சத்தங்கள் அழுகுரல்கள் கேட்கும். இங்கு இரவில் தங்குவதை தவிர்க்க வேண்டும். இரவில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிவார் வாடா கோட்டை புனே
இந்தப் பகுதியை முன்னர் ஆண்டு வந்த இளம் இளவரசர் பேய் பௌர்ணமி இரவுகளில் அலறுவதாக. கூறப் படுகிறது. எனவே இந்த கோட்டைக்கு மக்கள் செல்ல அச்சப்படுவார்கள்.
லோதியின் கல்லறை டெல்லி
200 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கல்லறைப் பகுதியாகும் மிகவும் பழமையான கல்லறை நிறைந்த இடம். அதிக அளவில் பேய் நடமாட்டம் உள்ள மர்ம பிரதேசம் என அழைக்கப்படுகிறது.
டவ் ஹில்ஸ் மேற்கு வங்கம்
இந்த மலைப்பகுதியில் தலை இல்லாத பையன் நடமாடுவதாக கூறப்படுகிறது. இங்கு செல்லவே மக்கள் அஞ்சுவார்கள் இந்த இடம் மரணச்சாலை என அழைக்கப்படுகிறது.
ராமோஜி ஃபிலிம் சிட்டி ஹைதராபாத்
இங்கு நடைபெறும் படப்பிடிப்பு தளங்களில் அடிக்கடி அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். எனவே, இங்கு படப்பிடிப்பு நடத்துவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பெர்ன் ஹில் பேலஸ் ஊட்டி
அதிக அளவு பேய் நடமாட்டம் காரணமாக இந்த இடம் மூடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அதிக அளவில் பேய்கள் நடமாடுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த இடம் தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ளது.
மூன்று அரசர்கள் தேவாலயம் கோவா
மூன்று அரசர்கள் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக மூவரும் இறந்துவிட்டார்கள். அந்த மூவரின் ஆவியும் இந்த தேவாலயத்தில் நடமாடுவதாக கூறப்படுகிறது.
லம்பா தேகர் சுரங்கம் முசோரி
இந்த சுரங்கப் பகுதிகளில் அடிக்கடி மர்மமான முறையில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அடிக்கடி அமானுஷ்யம் நடப்பதால் இந்த சுரங்கம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ்கோடி தமிழ்நாடு
தனுஷ்கோடி ராமாயணத்தோடு தொடர்புடையது. புயல் காரணமாக எண்ணற்ற உயிரிழப்பு ஏற்பட்டது. பகலில் மட்டும் சுற்றி பார்க்க அனுமதி உண்டு இரவில் யாரும் தங்குவதில்லை. இரவில் பல அமானுஷ்ய அனுபவங்கள் நடப்பதாக கூறப்படுகிறது. எனவே இரவு நேரம் தடை செய்யப்பட்டுள்ளது.
ரோஸ் தீவுகள் அந்தமான்
1941 பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின்போது ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு இந்த தீவு கைவிடப்பட்டது. இந்த தீவிலும் அதிக அளவில் பேய் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே மக்கள் யாரும் இங்கு தங்குவதில்லை.
பதேபூர் சிக்ரி ஆக்ரா
1858 முதல் முதல் இந்த கோட்டை தனித்து விடப்பட்டுள்ளது. அக்பர் ஆட்சி காலத்தில் தலை நகரமாக விளங்கியது. இந்தக் கோட்டையில் அக்பரின் ஆவி நடமாடுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த கோட்டைக்கு மக்கள் செல்லபயப்படுவார்கள்.
சிக்தன் லடாக்
இது ஒரு மலைப்பகுதியாகும். இந்த இடத்தில் பேய் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மனிதர்கள் யாரும் செல்வதில்லை. அமானுஷ்யங்கள் நிறைந்த இடமாக கருதப்படுகிறது.
சாவின் கிராமம் ராஜஸ்தான்
இந்த ஊரில் ஒருவன் இரவில் தங்கினால் மறுநாள் அவன் பிணத்தைத்தான் பார்க்க முடியும். அந்த அளவுக்கு புரியாத புதிராக இந்த கிராமம் உள்ளது. அதனால் இங்கு யாரும் குடியிருப்பதில்லை தனித்து விடப்பட்டுள்ளது.
லக்பத் குஜராத்
மிகவும் பாழடைந்த நகரமாகும். யாரும் வசிக்காத பகுதி இந்தப் பகுதியில் இந்து முஸ்லிம் சீக்கியர்கள் மூன்று மதங்களை சார்ந்தவர்களின் ஆவிகள் நடமாடுவதாக கூறப்படுகிறது. இங்கு யாரும் செல்வதுமில்லை. தங்குவதும் இல்லை.
இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இதுபோன்று நம்பிக்கைகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இச்சம்பவங்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ளது என்பது வியப்பாக உள்ளது.