நேபாளம் என்பது இந்து நாடு என்பதுதான் பெரும்பாலானோருக்கு தெரியும். உண்மையில் இயற்கை வளங்கள், ஆன்மீக பூமி, யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் நிறைந்த இடங்கள் உள்ளன என்பது எத்தனை பேருக்கு தெரியும்? நேபாளம் சுமார் 56,000 சதுர மைல்பரப்பு கொண்டது. இங்கு 80 சதவீத மக்கள் இந்துக்கள். இங்கு இயற்கை வளங்கள், பணிபடர்ந்த மலைகள், ஆன்மீக கோயில்கள் நிறைந்த பூமி ஆகும்.
உலகில் உயரமான 14 சிகரங்களில் எட்டு சிகரங்கள் இங்கு உள்ளன. இதில் எவரெஸ்ட் சிகரமும் அடங்கியுள்ளது. எவரெஸ்ட் சிகரம் 8848 மீட்டர் உயரம் கொண்டது. நேபாள மக்கள் இதனை சாகர் மாதா என்று அழைக்கின்றனர். இந்த நாட்டின் கொடி இரண்டு முக்கோண வடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் சூரியன் சந்திரன் மற்றும் தேசிய மலர் இடம்பெற்று உள்ளது. தேவி குமாரி என்ற பெண் குழந்தையை இங்குள்ள மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். அந்த தெய்வ குழந்தைக்கு காட்மாண்டுவில் தனி அரண்மனை உள்ளது.
வெளியே எங்கு செல்ல வேண்டும் என்றாலும் நான்கு சக்கர வாகனத்தில் தான் தேவி குமாரி செல்வார். உடலில் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ ரத்தக்கசிவு ஏற்பட்டால் அந்த குழந்தை தெய்வத்தன்மையை இழந்து விடும் என்பது ஐதீகம்.
பசுவை தெய்வமாக வணங்குகிறார்கள். பசுவை கொன்று கறி சாப்பிடுவதும் குற்றமாக கருதப்படுகிறது.
இந்துக்கள் திகார் பண்டிகையின் போது பசுக்களை லட்சுமியாக நினைத்து வழிபாடு செய்கின்றனர். காத்மாண்டுவில் இருந்து 15 கிலோமீட்டர் சுற்றளவில் ஏழு பாரம்பரிய கலாச்சார மையங்கள் உள்ளன. பத்து தேசிய பூங்காக்கள், மூன்று வனவிலங்கு சரணாலயங்கள், ஒரு வேட்டை காப்பகம் போன்றவை பிரமிப்பூட்டுகின்றன. சித்துவான் என பழமையான தேசிய பூங்கா மிகவும் பிரசித்தமானது. பனிப்பாறைகள் நிறைய உள்ள புலிச்சோ ஏரி மிகவும் உயரமானதாகும். போக் சுண்டா ஏரி மிகவும் ஆழமானதாக உள்ளது.
இங்கு பல இனங்களைச் சேர்ந்த பல மொழிகளைப் பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சரணாலயத்தில் வங்காளப்புலி, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், சிவப்பு பாண்டா, முயல் என எண்ணற்ற மிருகங்கள் உள்ளன. கௌதம புத்தர் பிறந்த லும்பினி என்ற இடம் மிகவும் புனித தன்மை வாய்ந்த இடமாக கருதப்படுகிறது.
இங்குள்ள மக்கள், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, இரு கை கூப்பி நமஸ்தே என்று சொல்கிறார்கள். மோமோ என்ற உணவு சுவையானதாக இருக்கும். இந்த உணவு இங்குள்ள மக்களின் துரித உணவாகும். டால் பட் என்பது எளிய கடை உணவு. எல்லோரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். சுவையான மாவில் இறைச்சியை வேகவைத்து துரித உணவு தயார் செய்கின்றனர். இங்குள்ள மலை பகுதிகள், இமயமலை பகுதி, மலைப்பகுதி, டிராய் பகுதி என மூன்று பிரிவாக உள்ளது.
யுனெஸ்கோ பாரம்பரிய இடங்களான காத்மாண்டு தர்பார் சதுக்கம், பத்தாப்பூர் தர்பார் சதுக்கம், பதான் தர்பார் சதுக்கம், சாங்கு நாராயணன் கோவில், சுயம்பு நாத் ஸ்தூபி, பௌத்த நாத் ஸ்தூபி, பசுபதிநாத் கோவில், லும்பினி சிட்வான் பூங்கா, சாகர் மாதா பூங்கா, ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள் ஆகும்.
பெண் குழந்தை தெய்வத்தை காட்மாண்டுவில் தனி அரண்மனை தங்க இடம் கொடுத்து அந்த தெய்வ குழந்தைக்கு சிவப்பு நிற உடையும் தலையில் கிரீடம் தினசரி அணிவிக்கப்படுகிறது. மக்கள் அனைவரும் அந்த குழந்தையை தெய்வமாக வழிபடுகின்றனர்.
2008இல் நேபாளம் தனிக்குடி அரசு நாடக மாறியது. இங்கு உள்ள கூர்க்காக்கள் மிகவும் திறமைசாலிகள், பயம் என்பது கிடையாது. கோழைத்தனமும் இவர்களிடம் கிடையாது, பெரும்பாலான கூர்காக்கள் ராணுவத்திலும் எல்லை பாதுகாப்பு படையிலும் உள்ளனர்.
கஞ்சா இங்கு பரவலாக காணப்படுகிறது. தடை ஏதும் இல்லை. எட்டி என்ற பனி மனிதன் இங்கு உள்ள பனி மலைகளில் காணப்படுகிறான். பிராந்திய மொழி நேபாளி. இங்கு இந்துக்கள் புத்த மதத்தை சார்ந்தவர்கள் மற்றும் பல மதங்களைச் சார்ந்தவர்களும் வசித்து வருகிறார்கள்.
பல வகையான இயற்கை வளங்களும் பணிபடர்ந்த மலைகளும் நீரோடைகளும் அமைதியான மக்களும் நிறைந்த ஆன்மீக பூமியாக நேபாளம் உள்ளது. இங்கு உள்ள மக்கள் அனைவருக்கும் சொர்க்க பூமியாக திகழ்கிறது.