நியூயார்க் கனவு: டைம்ஸ் சதுக்கம் முதல் சுதந்திர தேவி வரை!

அமெரிக்கப் பயணத்தில் நீங்கள் தவறவிடக்கூடாத பிரம்மாண்டமான இடங்களின் தொகுப்பு இதோ.
நியூயார்க் பயணம்
நியூயார்க் பயணம்AI image
Updated on

சுற்றுலா என்றாலே நமக்குள் பல பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறக்கத் தொடங்கிவிடும். ஒவ்வொரு இடத்தை காணும் பொழுதும் உற்சாகத்துள்ளல் ஏற்படும். அமெரிக்கா என்றால் வளர்ந்த நாடு அங்கே எல்லாம் பிச்சைக்காரர்கள் இருக்க மாட்டார்கள் என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அங்கேயும் இருக்கிறார்கள் என்பதை அறிந்து ஆச்சரியமடைந்தோம். டைம்ஸ் சதுக்கத்தில் மதிய உணவருந்தி, அதிக நேரம் செலவிட்டு, ஒவ்வொன்றையும் ஆழ்ந்து ரசித்தது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருந்தது. கண்டுகளித்ததை பற்றிய பகிர்வு இதோ.

நியூயார்க் பயணம் செய்யும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்.

1. சுதந்திர தேவி சிலை (Statue of Liberty): இது நியூயார்க்கின் அடையாளச் சின்னமாகும். சுதந்திரத்தின் சின்னமாக விளங்கும் இந்த பிரம்மாண்டமான சிலையைத் தரிசிக்க படகு மூலம் லிபர்ட்டி தீவிற்குச் செல்ல வேண்டும். இது உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும்.

நியூயார்க் பயணம்
நியூயார்க் பயணம்AI image

2. சென்ட்ரல் பார்க் (Central Park): மேன்காட்டனின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான பூங்கா, நியூயார்க்கின் இரைச்சலுக்கு மத்தியில் ஒரு அமைதியான இடமாகும். இங்கு நடைப்பயிற்சி மேற்கொள்வது, படகு சவாரி செய்வது மற்றும் பூங்காவின் இயற்கையை ரசிப்பது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.

3. டைம்ஸ் சதுக்கம் (Times Square): 'உலகின் குறுக்குச் சாலை' என்று அழைக்கப்படும் இந்த இடம், அதன் மின்னொளிகள், பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள் மற்றும் துடிப்பான சூழலுக்குப் பெயர் பெற்றது. நியூயார்க்கின் இரவு வாழ்க்கையை உணர சிறந்த இடம் இது.

பெயர்க் காரணம்: முன்பு இது 'லாங்காக்ரே சதுக்கம்' (Longacre Square) என்று அழைக்கப்பட்டது. 1904-ஆம் ஆண்டில், புகழ்பெற்ற 'தி நியூயார்க் டைம்ஸ்' (The New York Times) நாளிதழின் தலைமையகம் இந்தச் சதுக்கத்தில் உள்ள ஒரு புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பிறகே, இந்த இடத்திற்கு 'டைம்ஸ் சதுக்கம்' (Times Square) என்ற பெயர் வந்தது.

4. உலகின் சந்திப்பு மையம் (Crossroads of the World): உலகெங்கிலும் இருந்து நியூயார்க் வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் கூடும் இடம் இதுவாகும். தினசரி சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்தச் சதுக்கத்தைக் கடந்து செல்கிறார்கள். ஆண்டுதோறும் 5 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.

5. பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள் (Digital Billboards): டைம்ஸ் சதுக்கத்தின் மிக முக்கிய அடையாளமே அங்குள்ள வானளாவிய கட்டிடங்களில் ஒளிரும் பிரம்மாண்டமான டிஜிட்டல் விளம்பரப் பலகைகள் ஆகும். இரவு நேரத்திலும் பகல் போல ஒளிரும் இந்த விளக்குகள், அந்த இடத்திற்கு ஒரு தனித்துவமான துடிப்பான ஆற்றலைத் தருகின்றன. இங்கு விளம்பரம் செய்வது உலகளவில் மிகப்பெரிய கௌரவமாகக் கருதப்படுகிறது.

6. பிராட்வே தியேட்டர்கள் (Broadway Theatre): நாடகக் கலை மற்றும் கலைத்துறையின் மையமாக இது திகழ்கிறது. உலகப் புகழ்பெற்ற பல 'மியூசிக்கல்' (Musical) நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இங்குள்ள பிராட்வே தியேட்டர்களில் தினசரி நடத்தப்படுகின்றன.

7. புத்தாண்டு கொண்டாட்டம் (New Year's Eve Ball Drop): உலகிலேயே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மிகவும் புகழ்பெற்ற இடம் இதுதான். டிசம்பர் 31 இரவு 11:59 மணிக்கு, 'ஒன் டைம்ஸ் ஸ்கொயர்' கட்டிடத்தின் உச்சியிலிருந்து ஒரு பெரிய படிகப் பந்து (Crystal Ball) மெதுவாகக் கீழே இறக்கப்படும்.

சரியாக 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும்போது, லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி, காகிதத் தூவல்களுடன் (Confetti) கொண்டாடுவது உலகளவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இந்நிகழ்ச்சியை காண கண் கோடி வேண்டும்.

இதையும் படியுங்கள்:
NRI குடும்பங்களின் சாய்ஸ்: ஊட்டியில் சொகுசா? வால்பாறையில் அமைதியா?
நியூயார்க் பயணம்

சுவாரசியமான தகவல்: இங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், இது ஒரு முழுமையான 'பாதசாரிகள் மட்டும் செல்லும் பகுதியாக' (Pedestrian Plaza) மாற்றப்பட்டுள்ளது. மக்கள் அமர்ந்து வேடிக்கை பார்க்கவும், காபி குடிக்கவும் ஏதுவாகச் சிவப்பு நிறப் படிக்கட்டுகளும், நாற்காலிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

8. எம்பயர் ஸ்டேட் கட்டிடம் (Empire State Building): இது நியூயார்க் நகரின் புகழ்பெற்ற வானளாவிய கட்டிடங்களில் ஒன்றாகும். இதன் மேல்தளத்தில் இருந்து நியூயார்க் மாநகரம் முழுவதையும் கண்டுகளித்து அழகாக ரசிக்க முடிந்தது .

9. மெட்ரோபாலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட் (The Metropolitan Museum of Art - The Met): இது அமெரிக்காவின் மிகப்பெரிய கலை அருங்காட்சியகம். உலகெங்கிலும் உள்ள 5,000 ஆண்டுகால கலைப் படைப்புகள் மற்றும் வரலாற்றுப் பொருட்களைக் காண விரும்பும் கலை ஆர்வலர்களுக்கு இது ஒரு சொர்க்கம் போன்ற இடமாகும்.

இதையும் படியுங்கள்:
தேநீர் கோப்பையின் பின்னால் மறைந்திருக்கும் 100 ஆண்டுகால மூணாறு ரகசியங்கள்!
நியூயார்க் பயணம்

நீங்கள் நியூயார்க் பயணத்திற்குத் திட்டமிடுகிறீர்கள் என்றால், இந்த இடங்கள் உங்கள் பயணப் பட்டியலில் கட்டாயம் இடம் பெற வேண்டும். அதற்கு தகுந்த மாதிரி ஏற்பாடு செய்து கண்டுகளித்து திரும்புங்கள்.

இந்தக் கட்டுரையைப் படிப்பதன் மூலம், நியூயார்க்கின் கலாச்சாரம் மற்றும் அடையாளங்களை முன்கூட்டியே அறிந்து, உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி ஒரு முழுமையான மற்றும் உற்சாகமான பயணத் திட்டத்தை மிகச்சரியாக வகுக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com