லீவ் விட்டா எங்க போறதுனு தெரியலையா? சென்னை அருகே குதூகலிக்க அட்டகாசமான அருவி!

நாகலாபுரம் அருவி
நாகலாபுரம் அருவிIntel

சென்னை அருகே உள்ள நாகலாபுரம் அருவி குடும்பத்துடன் குதூகலிக்க ஒரு நல்ல இடமாக இருக்கும்.

சென்னையில் இருந்து 70கிமீ தொலைவில் ஆந்திர பகுதியில் அடர்ந்த காடுகள், தெளிந்த நீரோடை, அள்ளித்தெளிக்கும் நீர்வீழ்ச்சி என்று இயற்கையின் மடியில் சுகமாக உலாவர ஏற்ற இடமாக இந்த நாகலாபுரம் உள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த இடத்தில அழகிய நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

நாகலாபுரம் பகுதியில் மொத்தம் 3 நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ஒவ்வொரு மலையை கடந்து கடந்து தான் ஒவ்வொரு நீர்வீழ்ச்சிக்கு சென்று குளிக்க முடியும். நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் ஒரே குறை என்னவென்றால் இந்த இடத்திற்கு பொதுப் போக்குவரத்து வசதி எதுவும் இல்லை. தனியார் வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். பைக், கார் பார்க்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு வாகனத்துக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை அனுமதி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அது போக நுழைவுக்கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது. ஆனால் காலை முதல் மாலை வரை குடும்பத்துடன் கொண்டாட ஏற்ற ஸ்பாட்டாக இது இருக்கும்.

பல அருவிகளில் குழந்தைகளை தண்ணீருக்குள் இறக்க பயப்படுவோம். ஆனால் இங்கே அந்த பயம் தேவையில்லை, ஏனென்றால் பொதுமக்கள் பாதுகாப்பாக குளிப்பதற்கு இங்கே லஃப் ஜாக்கெட் வழங்கப்படுகிறது. இங்கே ஒரு லைஃப் ஜாக்கெட்டிற்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இந்த லைஃப் ஜாக்கெட்டுடன் நீங்கள் இஷ்டப்பட்ட இடம் வரை மகிழ்ச்சியாக நீந்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com