எங்காவது ஒரு மலை வாசஸ்தலம் சென்று உடலையும் மனதையும் குளிர்ச்சியாக்கிக்கொண்டு வரலாமா என்ற ஆசை வருகிறதா? உடனே ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஊர்கள் நினைவுக்கு வருமே… அவற்றைத் தவிர்த்து, இந்தியாவில் உலக பாரம்பரியத்தளமான மேற்குத் தொடர்ச்சி மலை மீது வேறு பல கோடை வாசஸ்தலங்கள் அமைந்திருப்பது பல பேருக்குத் தெரிவதில்லை.
மூடுபனி நிறைந்திருக்கும் காலைப்பொழுது, நெருங்க முடியாத வனங்கள், அமைதியாய் காட்சி தரும் கிராமத்துக் கவர்ச்சி போன்றவற்றை ரசிக்க விரும்புவோருக்கு இந்த ஊர்கள் ரம்மியமானதாகத் தோன்றும். அந்த ஊர்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.
"தென் இந்தியாவின் சிரபுஞ்சி" என்று அழைக்கப்படும் மழைக்காடுகள் நிறைந்த சொர்க்கம்போல் காட்சி தரும் இந்த ஊர் சூரிய அஸ்தமனம் பார்க்க விரும்புவோர் மற்றும் இயற்கையை நேசிப்போருக்கு ஏற்ற இடமாகும்.
கேரளா: பைன் மரக்காடுகள்,பனி சூழ்ந்த மலைகள் மற்றும் ரோலிங் புல்வெளிகள் நிறைந்த அமைதியான ஊர் இது.
கர்நாடகா: பசுமை நிறைந்த மலை உச்சிகள் மற்றும் மலையேற்ற பயணங்களை மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கு உதவும் சிறப்பான அமைப்புகள் கொண்ட ஊர். சாகசம் புரிய விரும்பும் நபர்களுக்கு சரியான தேர்வாகும் குட்ரமுக்.
அடர்ந்த பசுமை நிறக் காடுகளுடன் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகள் கொட்டும் ஆழ்ந்த அமைதிகொண்ட மலை வாசஸ்தலம் இது. பருவ மழைக்காலங்களில் இங்கு செல்வது கூடுதல் சிறப்பாகும்.
திருவனந்தபுரத்திலிருந்து சிறிது நேர பயணத்திலேயே பொன்முடி சென்றுவிடலாம். பொன்முடி செல்லும் பாதைகள் காற்றோட்டம் நிறைந்தும், கண்களைக் கவரும் டீ எஸ்டேட்களுடனும் ரம்மியமாக காட்சி தரும்.
பிரசித்தி பெற்ற ஆர்தர் ஏரி மற்றும் ரந்தா (Randha) நீர்வீழ்ச்சி இங்கு உள்ளன. அமைதியான இந்த இடங்களில் முகாம் அமைத்து, ஓய்வாக அமர்ந்து வானில் ஒளிரும் நட்சத்திரங்களை ரசிப்பது சுகானுபவம் தரும்.
யானாவிலுள்ள மலைகளில்,பாறைகளின் அமைப்பு தனித்துவம் கொண்டதாக இருக்கும். சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பை மாசு படுத்தாமல், இயற்கை சூழலைப் பற்றி அறிந்து கொள்ளவும், அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளவும் வரும் ஈக்கோ ட்ராவெலர்களுக்கு (Eco traveller) உகந்த இடம் யானா.
மேற்குத் தொடர்ச்சி மலை மீதுள்ள இரண்டாவது உயரமான சிகரம் இது. மூச்சு முட்ட வைக்கும் அழகுடன் தோற்றமளிக்கும் இயற்கைக் காட்சிகள் மற்றும் சீரான மலையேற்றப் பாதைகள் கொண்ட அழகான மலை இது.
அடுத்த முறை சுற்றுலா செல்ல நினைக்கையில் மேற்கூறிய இடங்களையும் மனதிற்கொண்டு திட்டமிடுங்கள்.