

Payanam Articles:
மொராக்கோ (Morocco) வட ஆப்பிரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது அட்லாண்டிக் மற்றும் மத்திய தரைக்கடல் ஆகிய இரண்டிலும் கடற்கரையைக்கொண்ட ஒரே ஆப்பிரிக்க நாடாகும். மொராக்கோ சுற்றுலா தலங்களில் மிகவும் பிரபலமானது. இது பண்டைய மரபுகளை நவீன ஆடம்பரத்துடன் கலக்கும் ஒரு நாடாகும். மொராக்கோ அதன் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்காக அறியப்படுகிறது.
அரபு, பெர்பர் மற்றும் ஐரோப்பிய தாக்கங்களைக் கலந்து, அதன் உணவு வகைகள், கலை மற்றும் கட்டிடக்கலையில் பிரதிபலிக்கிறது. இது சுற்றுலாப் பயணிகளை கலாச்சார ரீதியாக மிகவும் பிரமிக்க வைக்கும் அனுபவத்தை வழங்குகின்றது.
ரபாத் (Rabat):
மொராக்கோவின் தலைநகரம் ரபாத். இது நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக மையமாக செயல்படுகிறது. இதன் சுத்தமான தெருக்கள், வரலாற்று அடையாளங்கள், கடலோர வசீகரம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது.
மொராக்கோவின் மிகப்பெரிய நகரம் காசாபிளாங்கா (Casablanca):
மக்கள் தொகை அடிப்படையில் மொராக்கோவின் மிகப்பெரிய நகரம் காசாபிளாங்கா ஆகும். இது நாட்டின் பொருளாதார மற்றும் வணிக மையமாகும். இதன் நவீன உள்கட்டமைப்பு, கடலோர வசீகரம் மற்றும் உலகின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான ஹாசன் II மசூதி போன்ற அடையாளங்களுக்கு பெயர் பெற்றது.
மரகேச் (Marrakesh):
மொராக்கோவில் அதிகம் பார்வையிடப்படும் இடமாக மராகேஷ் உள்ளது. அதன் டெரகோட்டா நிற கட்டிடங்கள் காரணமாக "சிவப்பு நகரம்" என அழைக்கப்படும். மராகேசில் உள்ள முக்கிய இடங்கள் சில.
a) ஜேமா-எல்-ஃபெனா சதுக்கத்தில்(Jemaa el-Fnaa) உணவு ஸ்டால்கள், தெருக்கலைஞர்கள் மற்றும் சந்தைகள் நிறைந்திருக்கும் இடம். இது ஒரு பரபரப்பான பகுதியாகும்.
b) குடூபியா மசூதி(Koutoubia Mosque):
இது மராகேஷில் உள்ள மிகப்பெரிய மசூதியாகும். நகரத்தின் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அழகான மசூதி.
c) பஹியா அரண்மனை (Bahia Palace):
19ஆம் நூற்றாண்டின் பிரம்மாண்டமான அரண்மனை. அற்புதமான ஓடு வேலைப்பாடுகள், பிரமிக்க வைக்கும் முற்றங்கள் மற்றும் தோட்டங்களுக்கு பெயர் பெற்ற மொராக்கோ கட்டிடக்கலையின் தலைசிறந்த படைப்பாகும்.
d) மதீனா (Medina) மற்றும் ஜார்டின் மஜோரெல் (Jardin Majorelle) என்பது பிரெஞ்சு ஓவியர் ஜாக் மஜோரெல்லேவால் உருவாக்கப்பட்ட ஒரு அமைதியான, அழகிய தோட்டப் பகுதியாகும்.போன்ற இடங்களைக் காணலாம்.
இயற்கை மற்றும் சாகச இடங்கள்:
4) சஹாரா பாலைவனம்:
மொராக்கோ பயணத்தின் மிக முக்கியமான அனுபவங்களில் ஒன்று உலகின் மிகப்பெரிய வெப்பமான பாலைவனத்தில் ஒரு இரவு தங்குவது. இங்கு ஒட்டக சவாரி, மணல் குன்றுகளில் சூரிய அஸ்தமனம் மற்றும் பாரம்பரிய பெர்பர் முகாம்களில் இரவைக் கழிப்பது போன்ற அழகான அனுபவங்கள் கிடைக்கும் இடம். சஹாரா பாலைவனத்தில் ஒரு இரவு தங்குவது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
5) Ouzoud நீர்வீழ்ச்சிகள் (Ouzoud Waterfalls):
மொராக்கோவின் அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்று. அட்லஸ் மலைகளில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான இயற்கை நீர்வீழ்ச்சிகள், சுற்றியுள்ள பசுமையான நிலப்பரப்புகளுக்கு மத்தியில் ஒரு புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தை வழங்குகின்றது.
6) அட்லஸ் மலைகள்:
மொராக்கோவில் பனி மூடிய சிகரங்கள் முதல் பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் தொலைதூர பெர்பர் கிராமங்கள் வரை அட்லஸ் மலைகள் மிகவும் அற்புதமான காட்சிகளை வழங்குகின்றன. டிரெக்கிங் மற்றும் வெளிப்புற சாகசங்களுக்கு ஏற்றது. இம்லில் (Imlil) போன்ற இடங்கள் பிரபலமானது.
7) எஸௌய்ரா (Essaouira):
கடலோர நகரம், கடற்கரை, கலை மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்றது. அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ள இந்த நகரம், கடற்கரை மற்றும் நகர விடுமுறைகளுக்கு ஏற்ற ஒரு சிறந்த இடமாகும். இங்கு காற்று சறுக்கு (kite surfing) போன்ற நீர் விளையாட்டுகளும் பிரபலம்.
பார்வையிட சிறந்த நேரம்:
மார்ச் முதல் மே மாதம் வரையிலும், செப்டம்பர் நவம்பர் மாதங்களும் இனிமையான காலநிலையில் இருப்பதால் பார்வையிட சிறந்த நேரம் ஆகும். இங்கு அரபு மற்றும் பெர்பர் அதிகாரப்பூர்வ மொழிகள். ஆனால் பிரெஞ்சு பரவலாக பேசப்படுகிறது. சுற்றுலா பகுதிகளில் ஆங்கிலம் பொதுவானது.