
சிலர் சுற்றுலா பயணம் செய்யும்போது எனக்கு டிராவல்ல வாந்தி மயக்கம் வருமே? என புலம்புவார்கள். சிலர் எவ்வளவு குதூகலமான பயணமாக இருந்தாலும் சரி, இவர்களின் பயணம் உடல் நிலை பிரச்னை அவர்களை சங்கடப்படுத்தி சுற்றுலாவை அனுபவிக்க முடியாது.
இதற்கான காரணம் என்ன? இதை எப்படி தடுக்கலாம்? என்பதை அறியலாம்.
வாந்தி வரக்காரணம்…
பயணத்தின்போது நமது உள் காது உணர்வது ஒன்றாகவும் பார்க்கும் காட்சிகள் வேறொன்றாகவும், இருப்பதால் வாந்தி குமட்டல் மயக்கம் போன்றவை ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக நாம் பயணம் செய்யும்போது அதை நம்கண்கள் பதிவு செய்து நாம் நகரும் செய்தியை மூளைக்கு அனுப்புகிறது. அதேபோல் நாம் அசையாமல் அமர்ந்திருப்பது உணர்ந்து இந்த செய்தியையும் மூளைக்கு அனுப்புகிறது. இப்போது இரண்டு செயல்களால் வரும் முரண்பாட்டை மூளை சரியாக செயல்படுத்த முடியாததால் வாந்தி, தலை சுற்றல், குமட்டல் ஏற்படுகின்றன.
கையில் எடுத்துச் செல்லவேண்டிய பொருட்கள்…
இஞ்சி
பயணத்தின்போது வாந்தி, குமட்டல், தலை சுற்றல் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் ஒரு சிறு துண்டு இஞ்சி அல்லது இஞ்சி மிட்டாய் எடுத்துக்கொள்வது சிறந்தது. பொதுவாகவே இஞ்சி டீ குடிப்பதால் தலை சுற்றல் பிரச்னையும் குறையும்.
ஏலக்காய்
பயணத்தின்போது ஏலக்காயை நின்று சாப்பிடும்போது வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகள் வராது.
துளசி
பயணத்தின்போது வாந்தி வரும் என நினைப்பவர்கள் துளசி இலைகளை கையில் வைத்துக்கொண்டால் சிறந்த தீர்வு அளிக்கும். இரண்டு அல்லது மூன்று துளசி இலைகள் மெல்லுவதால் இந்த பிரச்னை நீங்கும்.
பயண டிப்ஸ்கள்
பயணத்தின்போது வாந்தி எடுப்பவர்கள் பயணத்தில் ஒருமணி நேரத்திற்கு முன்னதாக எண்ணெய் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
கார் அல்லது பேருந்தின் முன்புறத்தில் அமரலாம். ஜன்னல் இருக்கும் பக்கத்தில் உட்காரவேண்டும். கையில் ஒரு பிளாஸ்டிக் பை வைத்துக் கொண்டால் வாந்தி வரும்போது எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு பிடித்த இசையை கண்கள் மூடி கேளுங்கள். தூங்கலாம்.
பயணத்திற்கு முன் அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. பயணத்தின்போது அளவான உணவை சாப்பிடலாம். அவ்வப்போது ரெஸ்ட் எடுக்கலாம்.
இஞ்சி, புளிப்பு மிட்டாய்களை வைத்துக்கொள்ளலாம். இதனை கருத்தில்கொண்டு பயணம் செய்யும்போது கடைப்பிடித்தால் சுற்றுலாவை அனுபவிக்கலாம்.