பெங்களூருவில் இரண்டு நாட்களில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்!

பெங்களூரு...
பெங்களூரு...

பெங்களூரு வரலாற்று சிறப்புமிக்க இடம் மட்டுமல்ல. இயற்கை மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கி வரும் இடமும் கூட. அந்த வகையில் நீங்கள் பெங்களூருக்கு பயணம் செய்ய விரும்புகிறீர்கள் என்றால், கட்டாயம் அனைத்து முக்கியமான இடங்களுக்கு சென்று விட வேண்டும். ஏனெனில் பெங்களூரு ஒரு பெரிய நகரம். ஆகையால் எந்த இடத்திற்கு செல்லலாம் என்ற சந்தேகம் நிச்சயம் வரும். ஆகையால் இரண்டு நாட்கள் பயணத்தில் நீங்கள் செல்ல வேண்டிய இடங்களைப் பற்றிப் பார்ப்போம்.

1. பெங்களூரு பேலஸ்

பெங்களூரு பேலஸ்
பெங்களூரு பேலஸ்

து ஒரு இங்கிலாந்து பிரபு ரெவ்.கார்ரட் என்பவரின் வீடாக இருந்தது. பின்னர் 1873ம் ஆண்டு மகாராஜா சமரஞ்செந்திரா இந்த பேலஸை வாங்கிக்கொண்டார். இது பார்ப்பதற்கும் இந்தியன் பேலஸ் போல் இருக்காது. இங்கிலாந்து பேலஸ் போல்தான் இருக்கும். இந்த கட்டடம் டூடோர் கட்டடக் கலையில் கட்டப்பட்டது. அதேபோல் சுவர்களிலும் ஓவியங்கள் அதிகம் பார்க்கலாம். இங்குள்ள ஓவியங்களை வரைந்தது பிரபல ஓவியர்  ராஜா ரவி வர்மா. இந்த பேலஸ் காலை 10 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும். நுழைவுக்கட்டணம் ரூ.250. பெங்களூர், வசந்த் நகர், பேலஸ் ரோட் 560052 என்பது விலாசம்.

2. செயின்ட் மேரி பஸிலிக்கா

செயின்ட் மேரி பஸிலிக்கா
செயின்ட் மேரி பஸிலிக்கா

து பெங்களூர் பேலஸிலிருந்து 3 கீலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது கர்நாடகாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த சர்ச். இது 17ம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டது. மேலும் இது கோத்திக் கட்டட கலையால் கட்டப்பட்டது. இந்த சர்ச் காலை 6 மணியிலிருந்து மாலை 7 மணி வரை திறந்திருக்கும்.

3. பெங்களூர் கோட்டை

பெங்களூர் கோட்டை
பெங்களூர் கோட்டை

ஸிலிக்கா சர்சிலிருந்து 6 கிமீ தொலைவில் பெங்களூர் கோட்டை உள்ளது. கெம்பே கவுடா என்பவரால் 1537ம் ஆண்டு களிமண்ணால் கட்டப்பட்ட கோட்டை. பின்னர் ஹைதர் அலியால் கற்களால் மறுக்கட்டுமானம் செய்யப்பட்டது. இந்த கோட்டை நிறைய கேட்டுகளுடன் இருக்கும். குறிப்பாக வடக்கு பக்கம் டெல்லி கேட்டும் தெற்கு பக்கம் மைசூர் கேட்டும் உள்ளது. இங்கு ஒரு மணி நேரம் சுற்றிப்பார்க்கலாம். காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை கோட்டை திறந்திருக்கும். இங்கு இந்தியர்களுக்கு ரூ5 நுழைவுக்கட்டணம், வெளிநாட்டினருக்கு 100ரூ கட்டணம்.

4. திப்பு சுல்தான் கோட்டை

திப்பு சுல்தான் கோட்டை
திப்பு சுல்தான் கோட்டை

ந்த திப்பு சுல்தான் கோட்டை பெங்களூர் கோட்டைக்குள் இருப்பதுதான். இந்த கோட்டை பாதி இந்தியன் வடிவமைப்பிலும் பாதி முஸ்லீம் கட்டட வடிவமைப்பிலும் இருக்கும். இது 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோட்டையில் நான்கு அறை அருங்காட்சியகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஓவியங்கள், புகைப்படங்கள், படங்கள், சிற்பங்கள் ஆகிவை இருக்கும். திப்பு சுல்தான் கோட்டை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை திறந்திருக்கும். இங்கு நுழைவுக்கட்டணம் 15 ரூபாய்.

5. லால் பாக்

லால் பாக்
லால் பாக்

ந்தியாவிலேயே மிகவும் அழகு வாய்ந்த பூங்கா இது. மொத்தம் 240 ஏக்கர்களில் 1800 வகையான தாவரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. லால் பாக் பூங்கா 1760ம் ஆண்டு ஹைதர் அலியால் நிறுவப்பட்டது. இங்கு காலை 6 மணியிலிருந்து மாலை 7 மணி வரை சுற்றிப்பார்க்கலாம். நுழைவுக்கட்டணம் ரூ20.

6. தொட்டா கனேஷனா குடி:

ந்த கோவிலை நந்தி கோவில் என்றும் அழைப்பார்கள். இதுதான் உலகிலேயே மிகப்பெரிய நந்தி கோவில். விஜயநகர கட்டட கலையால் 1537ம் ஆண்டு கட்டப்பட்டது . இங்குள்ள நந்தி 15மீட்டர் உயரம் மற்றும் 20 அகலம் கொண்டவையாக இருக்கும். இங்கு காலை 6 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 5.30 மணியிலிருந்து 9 மணி வரை திறந்திருக்கும்.

7. பெங்களூரு அக்வாரியம்

பெங்களூரு அக்வாரியம்
பெங்களூரு அக்வாரியம்

து 1983ம் ஆண்டு கட்டப்பட்டது. இதுதான் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய அக்வாரியம். இங்கு நீங்கள் பல வகையான மீன் வகைகளைப் பார்க்கலாம். இங்கு காலை 10 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை சுற்றிப்பார்க்கலாம். நுழைவுக் கட்டணம் 10ரூ.

8. இந்திரா காந்தி இசை பூங்கா

இந்திரா காந்தி இசை பூங்கா
இந்திரா காந்தி இசை பூங்கா

து 1996ம் ஆண்டு  நிறுவப்ப்பட்டது. இந்த பூங்காவில் தாவரங்களும் வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தினமும் இரவு 7 மணிக்கு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும். இங்கு நீங்கள் காலை 10 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை இருக்கலாம். நடுவில் 4 முதல் 5 வரை மட்டும் மூடப்படும்.

9. கப்பன் பூங்கா

கப்பன் பூங்கா
கப்பன் பூங்கா

து அக்வாரியம் அருகிலேயேதான் உள்ளது. இங்கு பலவகையான தாவரங்கள் மற்றும் 6000 மரங்களைப் பார்க்கலாம். இங்கு காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை சுற்றிப் பார்க்கலாம்.

இரண்டாவது நாள் நீங்கள் இந்த இடத்திற்கெல்லாம் சென்று சுற்றிப் பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com