புதுக்கோட்டையில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டம்

சுற்றுலா செல்வதென்பது, மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் விஷயம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் எந்தெந்த ஊருக்கு செல்கின்றோமோ, அங்குள்ள சிறப்பான இடங்களைப் பார்த்துவிட்டு வருவது மனதிற்கு இன்பம் அளிக்கும். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்திருக்கும் சுற்றுலாத் தலங்களைப் பற்றிய சிறப்பான தகவல்கள் இந்தப் பதிவில். 

புதுக்கோட்டை மாவட்டம் 1974 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 14ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இன்றைய புதுக்கோட்டை பகுதி தமிழகத்தின் தொன்மையான பகுதிகளில் ஒன்றாகும்.  புதுக்கோட்டையின் சிறப்பு என்னவென்றால் அழகழகான சாலைகள்தான். இங்கு சுற்றிப் பார்ப்பதற்கான சுற்றுலாத் தலங்களைப் பற்றி  பார்ப்போம். 

1. கொடும்பாளூர்

கொடும்பாளூர்
கொடும்பாளூர்

புதுக்கோட்டையிலிருந்து மேற்கே சுமார் 34 கிலோ மீட்டர் தொலைவில் மணப்பாறை சாலையில் உள்ளது. சங்க காலத்திலும் சோழர் காலத்திலும் சிறந்து விளங்கியது. சுற்றுலாப் பயணிகளுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் கவனத்தை ஈர்ப்பது ஐவர் கோவில். பிற்காலச் சோழர்களின்  கலைக்குச் சான்றாய் விளங்குகின்றன இந்த ஐவர் கோயில் . முக்கியமாக கருதப்படும் கல்வெட்டுகள் இங்கே காணக் கிடைக்கின்றன. 

2. பேரையூர்

பேரையூர்
பேரையூர்

புதுக்கோட்டையில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் பொன்னமராவதி வழித்தடத்தில் அமைந்துள்ளது பேரையூர். பங்குனி மாதம் மீன லக்னத்தில் இங்கு எழுந்துள்ள சுனையில் இருந்து பேரநாதம் (மிருதங்க முழக்கம்) எழுவதால் பேரேஸ்வரம் என்று வழங்கப்பட்டது. இதுவே பேரையூர் என்று மருவியுள்ளது. இத்தல இறைவன் நாகநாதர் சுவாமி இறைவி பிரகதாம்பாள். 

3. காட்டு பாவா

காட்டு பாவா
காட்டு பாவா

ள்ளிவாசல் புதுக்கோட்டை மாவட்டம். காட்டுப்பாளையம் பள்ளிவாசல் திருமயத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் திருப்பத்தூர் சாலையில் உள்ளது. இங்குள்ள தர்காவில் அடக்கமாயிருக்கும் பாவா பக்ருதீன் 'அவ்லியார் காட்டுபாவா என அழைக்கப்பட்டதால் எந்த ஊருக்கு மேற்கண்ட பெயர் ஏற்பட்டது. இங்குள்ள தர்காவிற்கு இந்துக்களும் முஸ்லிம்களும் பெரும் அளவில் வந்து வழிபடுகின்றார்கள். 

4. திருகோகர்ணம்

திருகோகர்ணம்
திருகோகர்ணம்

ரசு அருங்காட்சியகம் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் அரசு அருங்காட்சியகம் 1910 ஆம் ஆண்டு மன்னர் மார்த்தாண்ட பைரவர் தொண்டைமானால் தொடங்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் 200 வகையான பறவைகளும் அவைகளின் முட்டைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

புதுக்கோட்டை அரண்மனை தொண்டைமான் பரம்பரையில் ரகுநாதா என்பவரால் 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் புதிய கோட்டை ஒன்று கட்டப்பட்டு புதுக்கோட்டை என பெயரிடப்பட்டது. நகரின் மத்தியில் உள்ள கோட்டைக்கு நடுவே புதுக்கோட்டை அரண்மனை உள்ளது. 

5. சித்தன்னவாசல்

சித்தன்னவாசல்
சித்தன்னவாசல்

புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை செல்லும் வழியில் சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டின் பண்டைய ஓவியக்கலைக்குச் சான்று கூறும் இடங்களில் ஒன்றாக சித்தன்னவாசல் விளங்குகிறது. புதுக்கோட்டைக்கு வருபவர்களின் கவனத்தை கவரும் வகையில் இந்த ஓவியங்கள் சிறந்து விளங்குவது தனிச்சிறப்பு. இந்த தன்னிகரில்லா ஓவியத்தை காண்பதற்காகவே நாட்டின் பல்வேறு மூலைகளில் இருந்தும் வந்து போகிறார்கள். 

6. ஆவுடையார் கோவில்

ஆவுடையார் கோவில்
ஆவுடையார் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் ஆவுடையார்கோவில் அமைந்துள்ளது. அறந்தாங்கி ரயில் நிலையத்தில் இருந்தும் இவ்வூருக்குச் செல்லலாம். இது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் ஆகும். 

7. குடுமியான் மலை

குடுமியான் மலை
குடுமியான் மலை

புதுக்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள சைவ ஆலயத்தில் உள்ள இறைவனின் பெயர் சிகநாதர் அல்லது குடுமியுடையான். இக்கோயிலில் கணபதி ,சுப்ரமணியர் , அனுமான், மன்மதன், ரதி போன்ற சிற்பங்கள் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன. 

8. நார்த்தாமலை

நார்த்தாமலை
நார்த்தாமலை

புதுக்கோட்டை திருச்சி சாலையில் உள்ளது. இது சமண முனிவர்களின் உறைவிடமாக இருந்துள்ளது. மேல மலையில் காணப்படும் விஜயாலய சோழேச்சீரம் முத்தரையர்களால் கட்டப்பட்டது. 

நார்த்தாமலை மேல் மலை குன்றில் முகமது மஸ்தான் என்னும் துறவியின் சமாதி அமைந்துள்ளது. இது இயற்கையான குகை அமைப்பைக் கொண்டது. இந்துக்களும் முஸ்லிம்களும் இவரது நினைவு நாளை பக்தியுடன் கொண்டாடுகிறார்கள். 

9. திருமயம் கோட்டை

திருமயம் கோட்டை
திருமயம் கோட்டை

ங்குள்ள கோட்டை வரலாற்று சிறப்புமிக்கதாகும். கட்டிடக்கலை இலக்கணத்தோடு அமைந்துள்ளது. இக்கோட்டை வட்ட வடிவமாக அமைந்துள்ளது. கோட்டை அமைந்துள்ள குன்றின் தென்பகுதியில் சிவனும், நாராயணனும் ஒரே குன்றில் இரு பெருங்குடைவரை கோயில்களில் எழுந்தருளி இருப்பது திருமெய்யம் திருக்கோயிலின் தனிச்சிறப்பு. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com