
உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்க சுற்றுலா இன்றியமையாதது. பருவ காலங்களுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு சுற்றுலா தளமும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் நவம்பர் மாதம் சுற்றுலா செல்ல சிறந்த 6 இடங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்
உத்தரகண்ட் மாநிலத்தின் இமயமலையின் தாழ்வாரப் பகுதியில் காஷ்யப் மலைக்கு 5 கிலோமீட்டர் மேலே உயரமான முகட்டில் உள்ளது இந்த சிறிய மலைப்பிரதேசம். அதிக போக்குவரத்து இல்லாத இந்த சாலைகளில் நடந்து செல்வது மனநிம்மதியை அளிப்பதோடு நவம்பர் மாதத்திற்கு ஏற்ற சுற்றுலா தளமாக உள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள கொங்கன் பகுதியில் அமைந்துள்ள அழகான கடற்கரை நகரமான கணபதிபுலேவுக்கு தென்மேற்கு பருவ மழைக்காலம் முடிந்தபின் அதாவது நவம்பரில் செல்வது மிகவும் இதமான அனுபவமாக இருக்கும். மேலும் இங்கு உள்ள 400 வருட பழமையான கணபதி சிலையை வழிபட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து பக்தர்கள் இங்கு வருகை புரிகிறார்கள்.
நாகலாந்து மாநிலத்தின் தலைநகரமாகவும், அழகிய மலை நகரமாகவும் இருக்கும் கோஹிமா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த நகரம் கெவ்ஹிரா என்ற பெயரால் முன்னர் அழைக்கப்பட்டது. நவம்பர் மாதத்தில் இங்கு இதமான காலநிலை நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள கசௌலி மலைநகரத்தில் 7 டிகிரி செல்ஷியஸ் முதல் 14 டிகிரி செல்ஷியஸ் வரையே பொதுவாக வானிலை நிலவும் என்பதால் இது நவம்பர் மாதத்திற்கான சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெல்லியம்பதி சுற்றுலாத்தலம் நவம்பர் மாதத்தில் பசுமையாக காட்சி தரும். மேலும் இங்கு யானை, சிறுத்தை ,புலி ,மான் போன்ற உயிரினங்கள் இருப்பதால் வாய்ப்பிருந்தால் அவற்றையும் நீங்கள் கண்டு ரசிக்கலாம்.
நவம்பர் மாதத்தில் வானிலை கேரளாவின் கடற்கரை நகரமான வர்க்கலாவில் மேகமூட்டமாக காணப்படும் என்பதால் சுற்றுலாவிற்கு சிறந்த காலமாக அது இருப்பதோடு, கேரள உணவுகளையும் ருசித்து சாப்பிடலாம். அமைதியாக இயற்கையை ரசிக்க வேண்டும் என நினைப்பவர்கள் பொன்னும்துருத்து தீவுக்குச் செல்லலாம்.
மேற்கூறிய ஆறு இடங்களிலும் நவம்பர் மாதத்தில் சுற்றுலா செல்லும்போது வழக்கமான உற்சாகத்தைவிட சற்று அதிகமாக இருப்பதோடு இதமான காலநிலையை அனுபவிக்க முடியும்.