துபாய் நகரின் பெருமிதம் – புர்ஜ் கலீஃபா - அப்படி என்னதான் சுவாரசியங்கள் இருக்கிறது இங்கே?

Burj Khalifa
Burj Khalifa

துபாய் நகரையே அலங்கரிக்கும் சின்னமாக விளங்கும் வானளாவிய(Skyscraper) புர்ஜ் கலீஃபாவின் கண்கவர் சுவாரசியங்கள் மற்றும் சாமானிய மக்கள் எவ்வாறு தங்களை அதனுடன் தொடர்பு படுத்திக்கொள்ளலாம் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

எட்டா உயரங்கள்:

புர்ஜ் கலீஃபா 828 மீட்டர் (2,716.5 அடி) உயரத்தில் உலகின் மிக உயரமான கட்டடமாக உள்ளது. மூன்று ஈபிள் கோபுரங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்ததாக கற்பனை செய்து பாருங்கள், அதன் மொத்த உயரத்தைப் பற்றி உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

அடுக்கடுக்கான மாடிகள்:

பிரமிக்க வைக்கும் 160 மாடிகளைக் கொண்ட ஒரே கட்டடமாக புர்ஜ் கலீஃபா இப்போதுவரை திகழ்கிறது. உலகில் வேறெந்த இடத்திலும் இப்படி ஒரு கட்டுமானம் உருவாக்கப்படவில்லை. இதைப் பார்ப்பவர்களுக்கு ஏதோ ஒரு செங்குத்தாக நகரத்தில் இருப்பதுபோல் தோன்றும். மயக்கம் தரும் 385 மீட்டர் உயரத்தில் இருக்கும் குடியிருப்புகளில் நாம் நினைத்தால் குடியேறலாம். கற்பனை செய்து பாருங்கள் காலையில் கண்விழித்தவுடன் ‘ஸ்கிரீனை விலகி நீங்கள் பார்த்தால், ஏதோ இந்த மொத்த உலகமும் நம் காலுக்கடியில் இருப்பது போன்ற உணர்வைப் பெறுவீர்கள்’.

வானத்தில் உணவருந்துதல்:

ஒரு விமானத்தில் பறந்துகொண்டே வட்ட மேசையில் குடும்பமாக அமர்ந்து உணவு அருந்துவதை கற்பனை செய்துபாருங்கள்! அதுபோல புர்ஜ் கலீஃபாவில் உலகின் மிக உயரமான உணவகம் 122 ஆம் மாடியில், அதாவது தரையில் இருந்து 441 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மேகக் கூட்டங்களோடு மிதப்பதுபோல ஓர் உணர்வை நீங்கள் பெறுவீர்கள். இதுபோன்ற அனுபவம் வேறு எங்கும் உங்களுக்குக் கிடைக்காது!

இதையும் படியுங்கள்:
பீரங்கிகளின் அளவிற்கு டைனோசார் முட்டைகளா? நம்ம நாட்டிலா? எங்கிருக்கிறது தெரியுமா?
Burj Khalifa

உயர்ந்த தளத்தின் அனுபவம்:

புர்ஜ் கலீஃபா உலகின் மிக உயரமான சர்வீஸ் லிஃப்ட் வைத்துள்ளது என்ற பெருமையைப் பெற்றுள்ளது. கூடவே உலகில் வேறெங்கும் இல்லாத ஒரு சிறப்பம்சத்தையும் கொண்டுள்ளது. அதாவது புர்ஜ் கலீஃபாவில் உள்ள லிப்ட்தான் உலகின் மிக வேகமான லிப்ட்டும்கூட. கீழ் தளத்தில் இருந்து 160 ஆவது தளத்திற்கு ஏதோ ராக்கெட் வேகத்தில் செல்வதுபோல் கண்டிப்பாக உணர்வீர்கள். உலகின் மிக உயர்ந்த கண்காணிப்பு தளத்திற்குச் சென்றவுடன் உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் ஒரே வேலை ‘வாயைப் பிளந்து மொத்த துபாயின் அழகையும் 360 டிகிரி சுத்தி ரசிப்பதுதான்’.

நடுத்தர வர்க்கத்தினருக்கு, புர்ஜ் கலீஃபாவைப் பார்த்து அவர்கள் முதலில் உணர்வது ‘நாமும் ஒரு நாள் இதனுள்ளே நுழைந்து மேல் தளம் வரை செல்ல வேண்டும்’ என்ற எண்ணம்தான், நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது எதுவும் சாத்தியம் என்பதே. காரணம் புர்ஜ் கலீஃபாவை யாரும் எடுத்து வந்து இங்கே ஒட்டி வைத்து விடவில்லை, ‘இதற்கும் தொடக்கத்தில் ஒரு அடித்தளம் உருவாக்கியதால்தான் இவ்வளவு உயரத்திற்கு கட்ட முடிந்தது’ என்பதை எல்லாரும் நினைவில்கொள்ள வேண்டும்.

புர்ஜ் கலீஃபாவின் நுழைவு கட்டணம் என்னதான் அதிகமாக இருந்தாலும் அதன் மேல்தளங்களைக் காட்டிலும், கீழ்தளம் சற்று விலை குறைவுதான். ஆகையால் நீங்கள் கீழ்தளத்தில் இருக்கும் நீரூற்றுகள் போன்ற கண் கவரும் விஷயங்களை ரசிக்க முடியும்.

ஆகையால் இதை ஒரு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக கருதி, வாழ்க்கையில் முன்னேறி நீங்களும் பல உயரங்களை அடையுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com