சென்னையிலிருந்து 2 நாள் டூர் பிளான் பண்றீங்களா?அப்போ இந்த மூன்று இடங்களுக்கு கண்டிப்பா போங்க!

வாரம் முழுவதும் வேலைப் பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் விடுமுறை என்றால் அதனைப் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் அல்லவா? இவ்வளவு குறைந்த நாட்களில் எங்கே செல்வது என்று அனைவருக்குமே ஒரு சந்தேகம் இருக்கும். சிலர் அருகே இருக்கும் சென்னை கடற்கரைக்கே செல்வார்கள். சிலர் கடைவீதிகளுக்கு சென்று வேடிக்கைப் பார்த்துவிட்டு வருவார்கள். சிலர் மால் (Mall) சென்று வருவார்கள். ஆனால் அந்த இடங்கள் இல்லாமல் இரண்டு நாட்களில் வேறு எங்கெல்லாம் செல்லலாம் என்பதைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
2 day trip from Chennai
2 day trip from Chennai

1. சென்னையிலிருந்து பாண்டிச்சேரி:

சுன்னம்பார் படகு இல்லம் 2 day trip from Chennai
சுன்னம்பார் படகு இல்லம் 2 day trip from Chennai

இது எப்போதுமே சிறப்பான ஒரு பயணமாகத்தான் இருக்கும். பாண்டிச்சேரியில் இரண்டு நாட்களிலேயே நாம் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகம் உள்ளன. இரவு பாண்டிச்சேரிக்கு சென்று அடுத்த நாள் காலை 6 மணியிலிருந்து வெளியே சென்று சுற்றிப் பார்க்கலாம். முதல் நாள் மணக்குள வினாயகர் கோவில்,ஸ்ரீ அரபிந்தோ ஆசிரமம், பாரதி பூங்கா, மகாத்மா காந்தி சிலை, பாண்டிச்சேரி கடற்கரை ஆகிய இடங்களுக்கு செல்லலாம்.

இரண்டாம் நாள் காலை 9 மணியிலிருந்து பொட்டானிக்கல் கார்டன், சுன்னாம்பர் போட் ஹவுஸ்,பேரடைஸ் கடற்கரை ஆகிய இடங்களுக்கு செல்லாம். இதனால் அதிக இடங்களுக்கு சென்று, இரண்டாம் நாள் சுற்றுலாவை அழகாக கழிக்கலாம். இதனால் அடுத்த நாள் வேலைக்கு செல்வதிலும் எந்த சோர்வும் இருக்காது.

2. சென்னையிலிருந்து ஏலகிரி:

ஏலகிரி 2 day trip from Chennai
ஏலகிரி 2 day trip from Chennaiwww.outlookindia.com

ஏலகிரி ஒரு மலைகள், ஏரிகள் நிறைந்த இயற்கை நிறைந்த இடம் என்பதால் அதிக இடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதல் நாள் புங்கனூர் ஏரி, வேலவன் கோவில், நிலவூர் ஏரி, இயற்கை பூங்கா (Nature park) ஆகிய இடங்களுக்கு செல்லலாம். அடுத்த நாள் ஜலகாம்பரை அருவிக்கு மட்டும் சென்றாலே போதும் . அதுவே அவ்வளவு அழகானதாகவும் சுற்றிப் பார்க்க அதிக இடங்களும் இருக்கும். மீண்டும் இரவு 10 மணிக்கெல்லாம் நீங்கள் சென்னைக்கு திரும்பிவிடலாம்.

3. சென்னையிலிருந்து மகாபலிபுரம்::

2 day trip from Chennai மகாபலிபுரம்::
2 day trip from Chennai மகாபலிபுரம்::

இது ஒரு கோவில்கள் நிறைந்த இடம் என்பதால் அதிக இடங்களுக்கு செல்லலாம். மூன்று நாட்கள் விடுமுறை என்றால் இரண்டு நாட்கள் பயணம் செய்துவிட்டு மூன்றாம் நாள் நன்றாக ஓய்வெடுக்கலாம். அல்லது உங்களுக்கு ஓய்வெல்லாம் தேவையில்லை என்றால் தாராலமாக மகாபல்லிபுரம் செல்லலாம்.

முதல் நாள் காஞ்சிபுரத்தில் உள்ள காமாக்ஷி அம்மன் கோவில், ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில், கைலாசநாதர் கோவில், வரதராஜ் ஸ்வாமி கோவில், வைகுண்ட பெருமாள் கோவில் ஆகிய இடங்களுக்கு செல்லலாம்.

இரண்டாம் நாள் மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், சிற்பம் அருங்காட்சியகம், அர்ஜுனாஸ் பெனன்ஸ், குகை கோவில்கள், பஞ்ச ரதாஸ், கனேஷன் ரதா, கிருஷ்ணன் பட்டர்பால், மகாபல்லிபுரம் கடற்கரை ஆகிய இடங்களுக்கு செல்லலாம்.

கடற்கரை விரும்புவோர் பாண்டிச்சேரி பயணம் தேர்ந்தெடுக்கலாம். இயற்கை விரும்புவோர் ஏலகிரிக்கு செல்லலாம். அல்லது கோவில்களுக்கு செல்ல விரும்புவோர்கள் மகாபல்லிபுரம் பயணத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com