ரிஷிகேஷில் நீங்கள் காணவேண்டிய அதிசயங்கள்!

Payanam articles
Rishikesh Payanam articles

ரிஷிகேஷ் இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும் கட்டிடக்கலை அதிசயங்கள் பிரம்மாண்ட கோவில்கள் சாகச விளையாட்டுக்கள் இவற்றின் புகலிடமாக உள்ளது. ரிஷிகேஷ் மாறுபட்ட உலகங்கள் அதிசயங்கள் நிறைந்த இடமாகும். உலகின் பயணத் திட்டங்களில் பார்க்க வண்டிய இடம் ஆகும்.

1. ரிஷிகேஷ்

Payanam articles
ரிஷிகேஷ்

உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள புனிதமான இடமாக உள்ளது. டேராடூனில் இருந்து 21 கிலோமீட்டர் ஹரித்துவார் ரயில் நிலையத்திலிருந்து 21 கிலோமீட்டர்  தொலைவில் உள்ளது. பேருந்துகள் மற்றும் டாக்ஸி மூலம் ரிஷிகேஷ் செல்லலாம். இங்கு செல்லக்கூடிய யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய இடங்களை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

2. திரிவேணி காட்

Payanam articles
திரிவேணி காட்

ரிஷிகேசில் அமைந்துள்ள புனிதமான காட் பகுதி ஆகும். இந்த இடம் ஆர்த்தி விழாவிற்கு பிரபலமானது. நறுமணத்திற்கு பெயர் பெற்ற முக்கிய மலைப்பகுதி ஆகும் திரி என்றால் மூன்று வேணி என்றால் சங்கமம் என்பதை குறிக்கும். கங்கை யமுனா சரஸ்வதி சங்கமிக்கும் இடமாகும். ராமாயணம் மகாபாரதத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

3. ரிவர் ராப்டிங்

Payanam articles
ரிவர் ராப்டிங்

இங்கு வரும் வாடிக்கையாளர்கள் சுற்றுலா பயணிகள் தேவைக்கேற்ப கேம்பிங் ராப்டிங் போன்ற பேக்கேஜ்களை வழங்குகிறது. உணவு தண்ணீர் இவற்றை ராப்டிங் ஆப்ரேட்டர்கள் பார்த்துக் கொள்வார்கள். இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும் ரிவர் ராப்டிங் மிகவும் விசேஷமானது.

4. லக்ஷ்மன் ஜூலா

Payanam articles
லக்ஷ்மன் ஜூலா

கங்கையின் குறுக்கே ஒரு சின்னமான தொங்கு பாலம் ஆகும். இந்த பாலம் தபோவனம் இணைக்கிறது. இந்த இரும்பு பாலம் 450 அடி நீளம் உள்ளது. 70 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. ராமாயணத்தில் லட்சுமணன் இந்த இடத்தில்தான் கங்கையை கடந்ததாக கூறப்படுகிறது. தற்போது இதன் அருகே புதிதாக கண்ணாடி பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் வழியாக பாதசாரிகள் கடந்து செல்லலாம். பைக்குகள் செல்ல அனுமதி இல்லை.

5. ராம் ஜூலா

Payanam articles
ராம் ஜூலா

சிவானந்தா நகரை இணைக்கும் ஒரு நினைவுச் சின்னமாகும். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. 750 அடி நீளமுள்ள பாலம் ஆகும். இந்தப் பாலத்தை கங்கை நதியை ரசித்துக்கொண்டே செல்லலாம். இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் ஏராளமாக உள்ளது. சிறந்த கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது. இந்தப் பாலத்தில் இருந்தே இருபுறமும் இயற்கை அழகை ரசித்துக்கொண்டே செல்லலாம்.

இதையும் படியுங்கள்:
இளைஞர்களிடையே டிரெண்டிங்கில் இருக்கும் டாப் 6 பயண இடங்கள்!
Payanam articles

6. பறக்கும் நரி

Payanam articles
பறக்கும் நரி

ரிஷிகேசில் பார்க்க வேண்டிய இடமாகும். அற்புதமான சாகச விளையாட்டுக்கள் நிறைந்த பகுதி. உங்களை ஒரு கயிற்றின் மூலம் கட்டி பின்னர் மின்சார கேபிள் மூலம் உங்களை அந்தரத்தில் பறக்கவிடுவார்கள். கங்கை நதி மீது மிக உயரமான இடத்தில் பறந்து இமயமலை அடிவாரத்தை அடையலாம். இது ஒரு திரில்லிங்கான அனுபவமாக இருக்கும்.

7. பீட்டில்ஸ் ஆசிரமம்

Payanam articles
பீட்டில்ஸ் ஆசிரமம்

இது ஒரு அமைதியான மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய ஆசிரமம். மகரிஷி மகேஷ் யோகியோடு சம்பந்தப்பட்ட ஆசிரமம் ஆகும். உலகளாவிய அங்கீகாரம் பெற்றது. சிறந்த சுற்றுலா தளம் ஆகும். இங்குள்ள சுவர் ஓவியங்களை கண்டு ரசிக்கலாம். ஆன்மீக வாழ்க்கைக்கும் அழகை ரசிப்பதற்கும் சிறந்த இடமாக உள்ளது.

8. சிவபுரி

Payanam articles
சிவபுரி

ரிஷிகேஷ் இல் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கங்கையின் பல்வேறு சாகச விளையாட்டுகளை இங்கு பார்க்கலாம். இங்குள்ள நதிக்கரையில் நிறைய முகாம்கள் உள்ளது. ரிவர் ராப்டிங் படகு சவாரி மலை ஏற்றம் இவற்றிற்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது.

9. கௌடிலியா

Payanam articles
கௌடிலியா

கௌடிலியா கிராமம் ரிஷிகேஷ் இல் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பத்ரிநாத் போகும் பாதையில் உள்ளது . ரிவர் ராப்டிங் செய்ய புகழ்பெற்ற இடம் ஆகும். மிகவும் சவாலான மண்டலமாக உள்ளது. சாகச விளையாட்டுக்கள் அதிகம் உள்ள இடமாகும்

10. நீலகண்ட மகாதேவ கோவில்

Payanam articles
நீலகண்ட மகாதேவ கோவில்

ரிஷிகேஷ் இல் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து 1670 மீட்டர் தொலைவில் பசுமை நிற காடுகள் உள்ளது. இந்த இடத்தில் பெரிய சிவன் கோவில் உள்ளது. கோவிலில் நன்னீர் ஊற்றுகள் உள்ளது. இந்தக்கோவில் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் இங்கு உள்ள நீரில் குளித்துவிட்டு சிவனை வழிபட்டு செல்கின்றனர்.

11. கிளிப் ஜம்பிங்

Payanam articles
கிளிப் ஜம்பிங்

இந்த இடம் குன்றின் தாண்டுதலை குறிக்கும் இடமாகும். கணிசமான உயரத்திலிருந்து ஆற்றில் குதிப்பதையும் ஒரு குன்றில் இருந்து மற்றொரு குன்றுக்கு கேபிள் மூலம் செல்ல முடியும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நீர் வழியாகவும் செல்லலாம். குன்றின் மீது இருந்து நீரில் குதித்து விளையாடுகிறார்கள் இது ஒரு புது அனுபவமாக இருக்கும். இந்த இடம் லட்சுமன் ஜூலா என்ற இடத்திற்கு முன்னதாக உள்ளது.

12. ஜத் கங்கா மலை ஏற்றம்

Payanam articles
ஜத் கங்கா மலை ஏற்றம்

உத்தரகாண்டில் மிகவும் சவாலான மலையற்ற பகுதியாகும். அக்லர் பள்ளத்தாக்கில் இருந்து தொடங்குகிறது. நாக் திப்பா மலை மீது ஏறி இறுதியாக கங்கையில் உள்ள நிலாங்கு பகுதியை அடைகிறது. கடைசியாக பத்ரிநாத் சென்றடைகிறது

13. குவாரி பாஸ்

Payanam articles
குவாரி பாஸ்

இந்த இடம் அல்பைன் புல்வெளி என்று அழைக்கப்படுகிறது. மலை ஏற்றத்திற்கு சிறந்த இடமாகும். இங்கு மூன்று மைதானங்கள் மிகவும் அழகாக காணப்படும். பணி நிறைந்த அல்பைன் பயணம் மெய்சிலிர்க்க வைக்கும்.

14. நிர் கார் நீர்வீழ்ச்சி

Payanam articles
நிர் கார் நீர்வீழ்ச்சி

லக்ஷ்மண ஜூலா என் இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி பிரமிக்க வைக்கும் விதத்தில் உள்ளது. ஓய்வெடுக்க சிறந்த இடமாகும். புகைப்படக் கலைஞர்களை ஈர்க்கக்கூடிய இடங்களில் ஒன்று. மிகச்சிறந்த சுற்றுலா தளமக கருதப்படுகிறது. இங்கு நிறைய ஓய்வு விடுதிகள் உணவகங்கள் உள்ளன.

15. முனிகி ரெட்டி

Payanam articles
முனிகி ரெட்டி

ரிஷிகேஷ் க்கு மிக அருகில் உள்ளது. சர்தம் யாத்திரையின் நுழைவு வாயில் பகுதியாகும். யாத்திரிகர்கள் செல்லக்கூடிய புனித இடமாகும். இந்த இடத்தில் ஓய்வு இல்லங்கள் நிறைய உள்ளது.

16. கீதா பவன்

Payanam articles
கீதா பவன்

கங்கை கரையில் உள்ள அழகான ஆசிரமம் ஆகும். இந்தக் கீதை பவன் இதிகாசங்களில் பெயர் பெற்ற இடம் ஆகும். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கீதா பவனுக்கு வருகை தருகிறார்கள். ராமாயணம் மகாபாரதத்தோடு தொடர்புடைய இடமாகும்.

17. பங்கி ஜம்பிங்

Payanam articles
பங்கி ஜம்பிங்

சாகச விளையாட்டுக்களுக்கு பெயர் பெற்ற இடம் ஆகும். உயரமான இடத்தில் இருந்து சூடான காற்று பலூன் மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்யலாம். ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்றும் பார்வையிடலாம்.

18. ரிஷி குண்டு

Payanam articles
ரிஷி குண்டு

ரிஷி குண்டு என்பது இந்துக்களின் புனித இடமாக கருதப்படுகிறது. இந்த இடத்தில் வெந்நீர் ஊற்று குளம் உள்ளது. ராமர் வனவாசத்தின்போது இந்த வெந்நீர் ஊற்றில் குளித்ததாக ஐதீகம். கங்கை யமுனை இந்த இடத்தில் சந்திக்கிறது. இதிகாச காலத்தோடு தொடர்புடைய இடமாக உள்ளது.

19. பாரத மந்திர்

Payanam articles
பாரத மந்திர்

பாரத மந்திரி பனிரெண்டாம் நூற்றாண்டில் ஆதிகுரு சங்கராச்சாரியாரால் கட்டப்பட்ட கோவிலாகும். இங்கு விஷ்ணு பகவான் சாலிகிராமர் கல்லில் செய்யப்பட்டு அருள் பாலிக்கிறார் இந்த கோவிலுக்கு எண்ணற்ற பக்தர்கள் வருகை தருகிறார்கள்.  இந்தக் கோவில் பிரம்மாண்டமான ஸ்ரீ எந்திரம் உள்ளது.

20. பயசி

Payanam articles
பயசி

ரிஷிகேஷ் இல் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தில் நீர் விளையாட்டுகள் சாகச விளையாட்டுக்கள் அதிகம் உள்ளது கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பகுதி ஆகும். சுத்தமான வெள்ளை மணல் இங்கு அதிகமாக காணப்படுகிறது. இந்த இடத்தில் நிறைய முகாம்கள் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com