உலகிலேயே 7 வண்ணமயமான இடங்கள் எவை தெரியுமா?

உலகிலேயே 7 வண்ணமயமான இடங்கள் எவை தெரியுமா?
Imge credit: Intermiles

சிலருக்கு எப்படி இயற்கை நிறைந்த இடங்களில் வாழ வேண்டும் என்று ஆசை இருக்குமோ, அதேபோல் சிலருக்கு வண்ணமயமான இடங்களில் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். வண்ணங்கள் மனதுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அள்ளிக் கொடுக்கும் தன்மையுடையவை. அதற்காகவே சிலர் தங்களின் வீடுகளை வண்ணமயமாக வைத்துக்கொள்வார்கள். இப்படி வண்ணங்களால் ஈர்க்கப்படுபவர்கள் சுற்றுலா செல்ல வேண்டுமென்றால், இந்த 7 வண்ணமயமான இடங்களுக்குச் செல்லலாம்.

1. Gamla Stan, Stockholm, Sweden:

Gamla Stan, Stockholm, Sweden
Gamla Stan, Stockholm, SwedenImge credit: Hotels.com Phillipines

இது ஸ்வீடனில் 12ம் நூற்றாண்டில் வண்ணமயமாக உருவாக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க இடம். ஸ்வீடனின் தலைநகரமான இங்கு அருங்காட்சியகம், வீடு, அகாடமி போன்றவற்றிற்கு பளிச்சென்ற வெவ்வேறு நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

2. Balat, Istanbul, Turkey:

Balat, Istanbul, Turkey
Balat, Istanbul, TurkeyImge credit: Tripadvisor

பழமையான யூதர்களின் கட்டடமான இது ஐரோப்பாவின் துருக்கி நகரத்தில் உள்ளது. இந்த பழமைவாய்ந்த இடத்தில் ஹூ (சாதாரண நிறத்தில் கருப்பு / வெள்ளை நிறங்கள் கலந்து பயன்படுத்துவது) நிறங்களை பயன்படுத்தி இருப்பார்கள்.

3. Wroclaw, Poland:

Wroclaw, Poland
Wroclaw, PolandImge credit: escape2poland

போலந்து நாட்டின் பழமை வாயந்த ஆறுகளைச் சுற்றி வீடு, உணவகம், அலுவலகம் என அனைத்துமே வண்ணமயமாகத்தான் இருக்கும். ஆற்றின் அழகும் கட்டடங்களின் அழகும் போட்டிப் போட்டுக்கொண்டு ஜொலிக்கும்.

4. Grand Prismatic Spring, Wyoming

Grand Prismatic Spring, Wyoming
Grand Prismatic Spring, Wyoming

இதுவரை பார்த்த இடங்கள் எல்லாம் மனிதர்களின் கலை. ஆனால் இந்த இடத்தில் இயற்கையே ஓவியம் தீட்டியது போல் இருக்கும். இந்த இடத்தில் இலையுதிர்க்காலம் சற்று அதிக காலம் இருக்கும். மேலும் அறிவியல் பூர்வமாகப் பார்த்தால், மைக்ரோப்ஸ் மற்றும் தாதுக்கள் இணைந்து, கோடைக்காலங்களில் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறங்களிலும் குளிர்க்காலங்களில் பச்சை நிறத்திலும் இருக்கும்.

5. Vinicunca, Peru:

Vinicunca, Peru
Vinicunca, PeruImge credit: Free Walking Tours Peru

வானவில் மலை என்றழைக்கப்படும் இந்த மலை இளஞ்சிவப்பு, பர்பிள், நீலம் மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களைக் கொண்டிருக்கும். இதற்கும் தாதுக்களின் கலவையே காரணம்.

6.  Chefchaouen, Morocco:

Chefchaouen, Morocco
Chefchaouen, MoroccoImge credit: Travel Talk Tours

மொரோக்கோவில் உள்ள இந்த நீல நகரம் Tangier – Tetouan என்ற பகுதியில் உள்ளது. இங்குள்ள அனைத்து கட்டடங்களும், பொருட்களும் அடர்ந்த நீல நிறத்தில்தான் இருக்கும். கட்டடங்களும் பல டிசைன்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

7. Colmar, France

Colmar, France
Colmar, FranceImge credit: French Moments

ஜெர்மன் எல்லையில் உள்ள இந்த இடம் பிரெஞ்சுடைய குட்டி வெனிஸ் என்றழைக்கப்படுகிறது. கற்பனை கதைகளில் வரும் கனவு உலகம் போல்தான் இந்த இடமும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com