இந்தியாவின் வடகிழக்கில் அமைந்திருக்கும் மாநிலமே சிக்கிம் ஆகும். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிக்கிம் இரண்டாவது சிறிய மாநிலம். சிக்கிம் அதன் பல்லுயிரியலுக்கு (biodiversity) பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவின் உயரமான மலையான காஞ்செஞ்சுங்கா (kangchenjunga) இங்கேதான் உள்ளது. சிக்கிமுடைய தலைநகரம், காங்தாக் (Gangtok) ஆகும். இன்று நாம் சிக்கிமில் உள்ள சிறந்த 5 இடங்களை சுற்றி பார்க்கலாம்.
சோம்கோ ஏரியை சங்கு ஏரி என்றும் அழைப்பார்கள். இது தலைநகரான காங்தாக்கிலிருந்து 40 கிலோ மீட்டர் கிழக்கு சிக்கிமில் அமைந்துள்ளது. இந்த ஏரி 12,313 அடி உயரத்தில் இருக்கிறது. குளிர்காலத்தில் இந்த ஏரி உறைந்திருக்கும் போது ஒவ்வொரு பருவத்திலும் அதன் நிறம் மாறும் என்று கூறப்படுகிறது. இந்த ஏரியை அங்கிருக்கும் மக்கள் மிகவும் மரியாதைக்குரிய, புனிதமான ஏரியாக கருதுகிறார்கள். சோம்கோ ஏரியை பார்வையிட சிறந்த மாதம் அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களாகும். புத்த துறவிகள் இந்த ஏரியின் நிறத்தை வைத்து எதிர்காலத்தை கணித்ததாக கூறப்படுகிறது.
அனுமன் டாக் சிக்கிமின் தலைநகரான காங்டாக்கில் அமைந்துள்ளது. இக்கோவில் அனுமனுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும். இக்கோவில் 1952ல் கட்டப்பட்டது. ஆஞ்சநேயர் லக்ஷ்மனருக்காக சஞ்சீவினி மலை எடுத்து கொண்டு செல்லும் போது இங்கே சற்று அமர்ந்து ஓய்வெடுத்தார் என்பது வரலாறு. அங்கேயே அனுமன் டாக் கோவில் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தி புத்தா பார்க் அப் ரங்லா தெற்கு சிக்கிமில் ரவாங்லாவில் அமைந்துள்ளது. இந்த புத்தர் சிலை 130 அடி உயரம் கொண்டது. இந்த சிலையை 2006-2013 க்குள் கட்டினார்கள். இந்த புத்தர் சிலையை கௌதம புத்தரின் 2550 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கட்டப்பட்டது. 60 டன் செம்பை பயன்படுத்தி இந்த சிலை கட்டி முடிக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது. இச்சிலைக்கு பின்னால் நார்சிங் மலை (Mount Narsing) அமைந்துள்ளது மேலும் இந்த இடத்திற்கு அழகு சேர்க்கிறது.
காங்டாக் சிக்கிமின் தலைநகரம் மற்றும் மிகவும் பிரசித்தி பெற்ற நகரமுமாகும். 1840ல் புத்த யாத்திரை இங்கு கட்டிய பிறகே இவ்விடம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கே சுற்றி பார்ப்பதற்கான இடங்கள் நிறையவே உள்ளது, சோம்கோ ஏரி (Tsomgo lake) பன் ஜாக்ரி அருவி (Ban Jhakri falls), டாஸ்ஸி வீவ் பாயின்ட் (Tashi view point) ஆகியன உள்ளது. உலகிலேயே மூன்றாவது உயரமான மலையான கஞ்சன்ஜங்காவின் அழகை இங்கிருந்து ரசிக்கலாம். காங்டாக்கை செப்டம்பர் முதல் நவம்பர் வரை சுற்றி பார்க்க சிறந்த மாதமாகும். சுற்றுலாப்பயணிகள் காங்டாக்கின் அழகை ரசிக்கலாம். தேன்நிலவுக்கு செல்பவர்களுக்கு காங்டாக் தனித்துவமான, சிறந்த இடமாக கருதப்படுகிறது.
கஞ்சன்ஜங்கா அருவி சிக்கிமில் உள்ள நேபால் மங்கன் மாவட்டத்தில் உள்ளது. இது சிக்கிமில் உள்ள பெரிய அருவிகளுள் ஒன்றாகும். கஞ்சன்ஜங்கா மலையிலிருந்து இந்த அருவி உருவாவதாக நம்பப்படுகிறது. இந்த அருவியை 1990ல் பயண முகவர் ஒருவரால் கண்டு பிடிக்கப்பட்டு உடனேயே மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக மாறிவிட்டது. 50 படிகளை ஏறி சென்றே இந்த அருவியை அடைய முடியும். கஞ்சன்ஜங்கா அருவி 100அடி உயரத்தை கொண்டது. இந்த அருவியை பார்வையிட 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்கிம் சுற்றுலாத்தலமாக மட்டுமில்லாமல், ஆன்மிகத் தலமாகவும் இருப்பதால், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாகவே வருவதுண்டு.
சிக்கிமிற்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளும் போது கண்டிப்பாக இந்த 5 இடங்களையும் சுற்றிப்பார்த்து விட்டு வருவது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.