சிறுமலை திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ, மதுரையிலிருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் பல உயரமான மலைகள் உள்ளன.
இது கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆண்டு முழுவதும் மிதமான தட்ப வெப்ப நிலையிலும், அடர்ந்த வனப்பகுதியும், 18 ஹேர்பின் வளைவுகள் உள்ளன.
சிறுமலை மலைகள் பல இயற்கை எழில் கொஞ்சும் இடங்களைக் கொண்டுள்ளது. மலைத்தொடர்கள், பசுமை சூழ காட்சிகளுடன் பார்வையாளர்களை கவரும்.
17வது ஹேர் பின்னில் ஒரு கண்காணிப்பு கோபுரம் உள்ளது. இங்கு காணவேண்டிய இடங்கள், அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், வெள்ளிமலை முருகன் கோவில். இயற்கை சூழலில் அரிய தாவரங்கள் 60,000 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளது.
இங்கு விலங்கினங்கள் அதிகமாக உள்ளது. சிறுமலையில் மலை வாழை வகை மலை உச்சியில் பயிரிடப்படுகிறது. இப்பழம் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு பஞ்சாமிர்தம் செய்ய அனுப்பபடுகிறது.
இங்குள்ள சிறுமலை ஏரி 2010ல் கட்டப்பட்டது. இங்கு படகு வசதிகள் உள்ளன. சஞ்சீவனி மலை, சிறுமலையின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இந்த மலை புராண முக்கியத்துவம் வாய்ந்தது. லக்ஷ்மணனை குணப்படுத்த அனுமன் சுமந்ததாக சொல்லப்படும் சஞ்சீவனி மலை ஒரு துண்டு விழுந்ததாக கருதப்படுகிறது
செல்வி கோவில் நீள் வட்ட வடிவில் இயற்கை எழில் கொஞ்சும் தோற்றத்துடன் அமைந்துள்ளது.
அகஸ்தியர்புரம்
அகஸ்தியர் என அழைக்கப்பட்ட சித்தர் இங்கு தங்கியிருந்ததால் இப்பகுதி அகஸ்தியர்புரம் என அழைக்கப்படுகிறது.
பழங்காலம் முதல் பல்வேறு சித்தர்கள் வசித்த இடமாக கருதப்படுகிறது. இங்கு 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம் காணப்படுகிறது.
வெள்ளிமலை
அகஸ்தியர்புரத்தில் வெள்ளிமலை காணப்படுகிறது. மிக உயர்ந்த மலை இதுவாகும். ஒரு காலத்தில் மலையின் உச்சி முழுவதும் வெள்ளியாக இருந்தது. களவுகத்தில் இது மக்களால் திருடப்படும் என்பதால் அகஸ்தியர் இதனை பாறைக் கல்லாக மாற்றி விட்டதாக கூறப்படுகிறது. சிவன் கோயிலின் பின்புறம் தீபகோபுரம் உள்ளது.
இது சிவராத்திரி அன்று திருவண்ணாமலை தீபம் ஏற்றுவதுபோல மகாதீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
இந்த இடத்துக்கு சென்று ஒரு பயணத்தை தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள். மூலிகை நறுமணத்துடன், இயற்கை வனப்பகுதிகளையும் கண்டுகளியுங்கள்.