Sri lanka famous train journey
Sri lanka famous train journeyImage Credits: Tripadvisor

ஸ்ரீலங்காவின் மிக அழகிய ரயில் பயணம்... சேர்ந்து பயணிக்கலாம் வாங்க!

Published on

ஸ்ரீலங்காவிற்கு செல்லும் நிறைய சுற்றுலாப் பயணிகளின் பாக்கெட் லிஸ்டில் கண்டிப்பாக இந்த ரயில் பயணம் இடம் பெற்றிருக்கும். இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் பதிவிடப்படும் நீலநிறத்திலான ரயிலில் தொங்கிக்கொண்டே எடுக்கப்படும் பிரபலமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் இந்த ரயில் பயணத்தில்தான் எடுக்கப்பட்டதாகும். அத்தகைய பிரபலமான ரயில் பயணத்தை பற்றித் தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

இந்த ரயில் பயணம் மலை பாதை வழியாக செல்கிறது. கண்டியில் தொடங்கி எலா என்னும் இடத்தில் சென்று முடிகிறது. ரயில் செல்லும் வழி முழுக்க இருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் அழகை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். ரயில் போகிற வழியில் அருவிகள், தேயிலை தோட்டம், ஆறுகள், Tunnels போன்றவற்றை காணலாம்.

இந்த ரயில் பயணத்தில் 6 மணி நேரம் தொடர்ந்து பயணிக்க வேண்டும். எனினும், இந்த பயணம் மதிப்புமிக்கதாகவே கருதப்படுகிறது. இந்த ரயில் Nine Arch bridge ஐ தாண்டுவதை பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.

ஒருநாளைக்கு மூன்று முறைதான் இந்த வழியாக ரயில் போகும். எனவே, கண்டிப்பாக முன்கூட்டியே டிக்கெட்டை புக் செய்ய வேண்டும். வார இறுதி நாட்களில் டிக்கெட் கிடைப்பது கடினம்தான். இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் விலை ரூபாய் 75 முதல் தொடங்கி ரூபாய் 240 வரை உள்ளது.

இதையும் படியுங்கள்:
மக்களை மயக்கும் மகாராஷ்டிராவின் 6 அருவிகள்!
Sri lanka famous train journey

ஒருவேளை இந்த ரயிலை தவறவிட்டு விட்டால் இந்த Nine Arch bridge ஐ சின்ன Jungle trek வழியாக சென்று பார்க்கலாம். இந்த ரயிலில் சுற்றுலாப்பயணிகள் பெரும்பாலும் பயணம் செய்வதற்கு காரணமே ரயிலிருந்து தொங்கிக்கொண்டு எடுக்கப்படும் புகைப்படும் மற்றும் வீடியோக்களுக்காகவேயாகும். எனவே, இங்கே நிறைய மொபைல் போன்கள் இதுபோன்ற சாகசம் செய்யும்போது தொலைந்து போயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயணத்தில் நீலநிற ரயிலே மிகவும் பிரபலமாகும். எனினும், மெரூன் நிற ரயிலையும் அவ்வப்போது காணமுடியும்.  இங்கே தொங்கிக்கொண்டே சாகசம் செய்வது பிரபலமாக இருந்தாலும் ஜாக்கிரதையாக இருப்பது சிறந்தது. ஏனெனில், ஆங்காங்கே ரயில் Tunnel கள் வழியாக அடிக்கடி செல்லும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியமாகும்.

logo
Kalki Online
kalkionline.com