
சுவிஸ் விசாவில் உள்ள ஒரு வசதி என்னவென்றால், ஐரோப்பாவின் 25 நாடுகளுக்கு மேல் அந்த விசாவை வைத்துக் கொண்டே பயணம் செய்து வரலாம். பக்கத்திலுள்ள இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு, அடிக்கடி கூட சென்று வரலாம். ஆனால் ஒரு முறை உள்ளே வந்தால், 90 நாட்களுக்குள்ளாக இடத்தைக் காலி செய்து விட வேண்டும். சேர்ந்தாற்போல் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதியில்லை! அதிலும் ‘காஸ்ட் ஆப் லிவிங்’ (cost of living) என்றழைக்கப்படும் ‘வாழ்க்கைச் செலவு’ அதிகமாகவுள்ள நகரங்களில் சூரிக் முக்கியமானது!
பனி படர்ந்த மலைகள் ஆண்டு முழுவதும் இங்குண்டு. பால் பொருட்கள், சாக்லேட்டுகள், அதிகமாகத் தயாரிக்கப்படுகின்றன. சோளம், பெர்ரி வகைகள், ஆப்பிள் போன்றவையும் பயிர் செய்யப்படுகின்றன.
சாலை விபத்துக்கள் மிகவும் குறைவு! சாலையைப் பாதசாரிகள் கடக்க மூன்று விதமான முறைகள் பின்பற்றப்படுகின்றன.
அதிகப் போக்குவரத்து இல்லாத கிராமச் சாலைகளில் மஞ்சள் கோடுகள் உள்ள இடங்களில் பாதசாரிகளே பட்டம் சூட்டா மன்னர்கள் (Pedestrians are Kings).