இருப்பிடம்;
மன்ரோ தீவு கேரளாவில், கொல்லத்தில் அஷ்டமுடி ஏரி அரபிக் கடலில் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஆலப்புழையிலிருந்து படகுமூலம் இந்த தீவிற்கு செல்லலாம். இது 8 தீவுகளின் தொகுப்பாகும். அவை ஒவ்வொன்றும் சிறிய நீர் வழிகள் மற்றும் ஏரிகளால் பிரிக்கப்படுகின்றன
காயல் சுற்றுலா; இந்தத் தீவு அதன் அழகிய உப்பங்கழிகள், பசுமையான தென்னந்தோப்புகள் மற்றும் பாரம்பரிய படகு சவாரிகளுக்கு பெயர் பெற்றது. பயணிகள் கால்வாய்கள் வழியாக அழகான சுற்றுப்புறத்தை ரசித்தபடி அமைதியான படகு சவாரிகளை அனுபவிக்கலாம். திருவிதாங்கூரை ஆண்ட கர்னல் ஜான் மன்ரோவின் நினைவாக இந்த தீவு மன்ரோ தீவு என அழைக்கப்படுகிறது. பத்து நாள் ஓணம் பண்டிகையின்போது இங்கு நடைபெறும் புகழ்பெற்ற கல்லாடை படகுப்போட்டி தனித்துவம் வாய்ந்தது.
கலாச்சார பாரம்பரியம்; இந்த தீவு பாரம்பரிய கேரள வாழ்க்கையை வெளிப்படுத்துகிறது. இங்கு தென்னை நார், நெசவு மற்றும் மீன்பிடி தொழில் செய்யும் பல்வேறு சமூகத்தினர் வசிக்கின்றனர்.
இது பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், பறவை இனங்களுக்கு முக்கியமான வசிப்பிடமாக உள்ளதால் இயற்கை ஆர்வலர்களுக்கு சிறந்த இடமாக இருக்கிறது. இது கேரளாவின் உப்பங்கழிகளில் மறைக்கப்பட்ட ரத்தினமாக கருதப்படுகிறது.
டையூ தீவு குஜராத்தின் கத்தியவார் தீபகற்பத்தின் தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு தீவு ஆகும். 1967 வரை, 450 ஆண்டுகளுக்கும் மேலாக போர்த்துகீசிய காலனியாக இருந்த ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இந்த தீவின் கோட்டைகள் தேவாலயங்கள் மற்றும் வண்ணமயமான தெருக்கள் வரலாற்று ஆர்வலர்களுக்கு மனதுக்குகந்த இடமாக இருக்கும்.
பிரமிக்க வைக்கும் கடற்கரைகள்;
நாகோவா பீச், ஜாம்பூர் பீச் மற்றும் கோக்லா பீச் போன்ற அழகிய கடற்கரைகளுக்கு டையூ பெயர் பெற்றது. இந்த கடற்கரைகள் உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஓய்வெடுக்கவும், நீர் விளையாட்டு மற்றும் சூரிய குளியலுக்கும் பெயர் பெற்றது.
டையூ கோட்டை; அழகான சுவர்கள், மற்றும் கலங்கரை விளக்கம் ஆகியவை இந்த கோட்டையின் சிறப்பம்சங்கள். இது அரபிக்கடல் மற்றும் சுற்றியுள்ள கடற்கரையின் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது. காலனித்துவ காலத்தின் கட்டிடக்கலையின் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது.
கலாச்சார பன்முகத்தன்மை; டையூத்தீவு போர்த்துகீசியம் குஜராத்தி மற்றும் உள்ளூர் மரபுகள் உள்ளிட்ட கலாச்சாரங்களின் கலவையாகும். இங்கு கலகலப்பான திருவிழாக்கள் சுவையான உள்ளூர் உணவு முறைகள் போன்றவற்றை ரசிக்கலாம். இது இயற்கை அழகு, வளமான வரலாறு மற்றும் கலாச்சார பன்முகத் தன்மை ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. தனித்துவமான கடலோர அனுபவத்தை தேடும் பயணிகளுக்கு ஏற்றது.
இருப்பிடம்;
இது கர்நாடகாவின் முருதேஸ்வர் கடற்கரையில் இருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள சிறிய தீவு. இங்கு மக்கள் வசிப்பதில்லை. முருதேஸ்வரிலிருந்து படகு மூலம் செல்லலாம்.
டைவிங் பாரடைஸ்
புறா தீவு என்றும் அழைக்கப்படும் நேத்ராணி தீவு, அதன் படிகம் போன்ற தெளிவான நீர் மற்றும் துடிப்பான பவளப்பாறைகளுக்கு புகழ்பெற்றது. இது ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நோர்கெலிங்கிற்கான பிரபலமான இடமாக உள்ளது. வண்ணமயமான மீன்கள், கடல் ஆமைகள் மற்றும் சில நேரங்களில் டால்பின்கள் உட்பட பல்வேறு கடல் வாழ் உயிரினங்களை ரசிக்கலாம்.
இயற்கை அழகு
பாறைகள், மணல் நிறைந்த கடற்கரைகள் மற்றும் பசுமையான நிலப்பரப்புகளை கொண்டுள்ளது. இது பரபரப்பான சுற்றுலாத் தலங்களில் இருந்து மாறுபட்டு, இயற்கை ஆர்வலர்களுக்கும் தனிமையை நாடுபவர்களுக்கும் சிறந்த இடமாக அமைகிறது.