மனதை மயக்கும் பொள்ளாச்சிக்கு ஒரு ட்ரிப் அடிக்கலாமே!

Enchanting pollachi
Tourist places
Published on

பொள்ளாச்சி என்ற உடன் நம் நினைவுக்கு வருவது இரண்டுதான். ஒன்று இளநீர். இன்னொன்று சினிமா. ஏனென்றால் பொள்ளாச்சி ஒரு அழகான மனதை மயக்கும் இடங்கள் அதிகம் கொண்ட ஒரு ஊர். மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மிக அருகில் இருக்கும் சொர்க்க நகரம்தான் பொள்ளாச்சி. வருடந்தோறும் வானிலை சொல்லவே வேண்டாம். மிகவும்  ரம்மியமாக இருப்பதோடு, மனம் விட்டு ரசிக்கும்படி இயற்கை அழகுடன் இருக்கும் ஊர்தான் பொள்ளாச்சி.

பொழில்வாய்ச்சி என்று அழைக்கப்பட்ட ஊர் காலப்போக்கில் மாறி மருவி பொள்ளாச்சி என்று இப்போது அன்போடு அழைக்கிறார்கள். 
பொருள் ஆட்சி செய்யும் இந்த பொள்ளாச்சி சோழர் காலத்தில் முடிகொண்ட சோழநல்லூர்  அழைக்கப்பட்ட வளமான ஊராக இருந்தது.

சினிமாத்துறையை சேர்ந்தவர்கள்  விரும்பும் ஒரு இடம் உண்டு என்றால் அது நம்ம பொள்ளாச்சிதான். கடந்த சில வருடங்களில் மட்டும் சுமார் 1500 திரைப்படங்களை எடுத்துயிருக்கிறார்கள்.

பொள்ளாச்சி வெல்லச் சந்தைதான் ஆசியாவிலேயே மிகப்பெரிய வெல்லச் சந்தை. அதே போலதான் தென்தமிழகத்திலேயே மிகவும் பெரிய மாட்டுச் சந்தை நம் பொள்ளாச்சியில்தான் உள்ளது. இதன் பரப்பளவு சுமார் ஒரு ஏக்கர். இந்தச் சந்தையில் இருந்துதான் கேரளா மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு மாடுகளை கொண்டு சொல்கிறார்கள்.

பொள்ளச்சியின்  மற்றொரு சிறப்பு அங்கு உற்பத்தி செய்யும் பொருள் கருப்பட்டி. இந்த பகுதியில் பெரும்பாலான இடங்களில் தென்னை மரங்கள்தான் அதிக அளவு உள்ளது. 

பொள்ளாச்சி இளநீர் மற்ற பகுதிகளில் விளையும் இளநீரை விட கூடுதல் இனிப்பு சுவையானது. இதற்கு காரணம் இங்கு உள்ள மண், சீதோஷ்ண நிலை மற்றும் தண்ணீர்தான். பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவடடாரப்பகுதிகளில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தினமும் ஒரு லட்சம் இளநீர், லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அதிரப்பள்ளி சுற்றுலாவில் நடந்தது என்ன தெரியுமா?
Enchanting pollachi

சிக்காட்ட  கலை. பொள்ளாச்சி பகுதியில் மட்டுமே காணப்படும் தனிச்சிறப்பான கலை. இக்கலையை தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியா ஏன் உலகில் வேறு எந்த ஒரு பகுதியிலும் காணமுடியாத அற்புதமான கலையாகும்.

 தொழில் என்று பார்தால் பொள்­ளாச்சி தென்னை நார் மற்­றும் நார் சார்ந்த, 750க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் உள்ளது. இங்கு தயா­ரிக்­கப்­படும் கயிறு, தென்னை நார், நார் துகள்கட்­டி­கள் வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்யப்படுகிறது.

கி.பி.8 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுப்ரமண்யர் திருக்கோயில், மிகப் பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாகும். பொள்ளாச்சி மற்றும் அதன் அருகில் உள்ள அணைகள் நீரார் அணை, ஆழியார் அணை, மீன்கார அணை, சோழியார் அணை,  பெருவரிப்பள்ளம் அணை ஆகிய பிரபலமான அணைக்கட்டுகள் உள்ளது.

ஆழியார் சித்தாஷ்ரமம், ஆனைமலை வனவிலங்கு சரணாலையம், டாப் ஸ்லிப், குரங்கு நீர்வீழ்ச்சி இது எல்லாம் நீங்கள் பார்க்க வேண்டிய  சுற்றுலாத்தளங்கள் ஆகும். 

இனி எப்பொழுது சுற்றுலா செல்ல நினைத்தாலும் சரி முதலில் பொள்ளாச்சியை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்தானே..!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com