இயற்கையோடு ஒரு 'டேட்': மிஸ் பண்ணக்கூடாத 5 இடங்கள்!

Payanam Articles
tamilnadu-summer-trip

டேய் ரவி, இந்த சம்மர் ட்ரிப்புக்கு என்னடா பிளான் பண்ணி இருக்கீங்க? எங்கடா போறது?

நோ லோக்கல் ப்ளேசஸ்… எங்காவது அவுட்சைடு போடுறா? வெளிநாடு போலாம்!

எதுக்குடா வெளிநாடெல்லாம்? தமிழ்நாட்டுக்குள்ளேயே சூப்பரான ப்ளேஸ்ஸை நான் செலக்ட் பண்ணி வைத்திருக்கேன்.

என்னடா அந்த ப்ளேசஸ்? எனக்கே தெரியாமல் சொல்லேண்டா, அதைப் பற்றி!

ரவி, கண்டினியூவா லீவு இருக்கு. அதனால கூட்டம் தமிழ்நாட்டுக்குள்ள ரொம்ப ஜாஸ்தியா இருக்கும். எதுவும் proper ஆ பார்க்க முடியாது. ப்ளீஸ், வெளிய நாடே போலாம்!

கூட்டம் கம்மியாகவும் இருக்கும், ஜாலியா ஃப்ரீயா இருந்து எல்லாம் சுத்திப் பார்த்துட்டு வரலாம். சரியா? அந்த ப்ளேசஸ் இங்க நம்ம தமிழ்நாட்டுக்குள்ளதான் இருக்குடா… அதுவும் வேற லெவல் இருக்கும்!

1. கேர்ன் ஹில் - Cairn Hill – Ooty

Payanam Articles
Cairn Hill – Ooty

ஊட்டியில் இருக்கும் இந்த இடம் அடர்ந்த காடுகள் மற்றும் இயற்கை சூழலில் அமைந்த அமைதியான சுற்றுலாத் தளம். மரங்களுக்கு நடுவே அமைக்கப்பட்ட தொங்கும் பாலம் வித்தியாசமான அனுபவத்தை தரும். இயற்கையின் அழகு நிறைந்த இந்த இடத்தில் நடந்து சென்று அமைதியாக ரசிக்கலாம்.

2. வால்பாறை - Valparai

Payanam Articles
Valparai

பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆனைமலை மலைத்தொடரில் அமைந்துள்ள வால்பாறை பசுமை நிறைந்த இடம். தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் நிறைந்த இந்த மலைப்பகுதியில் 40 கொண்டை ஊசி வளைவுகள் (hairpin bends) உள்ள சாலை பயணம் செம்ம interesting-ஆ இருக்கும்.

கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் இருப்பதால் வருடம் முழுவதும் கிளைமேட் சூப்பராக இருக்கும். வனப்பகுதி என்பதால் வனவிலங்குகளை இயற்கையாக காணும் வாய்ப்பும் கிடைக்கும்.

3. பூம்பாறை - Poombarai

Payanam Articles
Poombarai

கொடைக்கானலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த மலை கிராமம் இயற்கை எழிலால் மெய்சிலிர்க்க வைக்கும். கூட்ட நெரிசல் குறைவாக இருப்பதால் அமைதியாக சுற்றிப் பார்க்க விரும்புபவர்களுக்கு இது மிகச்சிறந்த இடம்.பசுமை மலைகள், மேகங்கள், வியூ பாயிண்ட்கள் என எங்க பார்த்தாலும் அழகு தான். புகைப்பட ஆர்வலர்களுக்கும் செல்ஃபி லவர்ஸ்க்கும் இது perfect spot.

4. மசினகுடி - Masinagudi

Payanam Articles
Masinagudi

நீலகிரி மாவட்டத்தில், ஊட்டிக்கு அருகில் உள்ள அமைதியான வனவிலங்கு சுற்றுலாத் தளம். இது முதுமலை புலிகள் காப்பகத்தின் எல்லையில் உள்ளது.

இயற்கை ஆர்வலர்கள், wildlife photographers மற்றும் trekking lovers-க்கு இது மிகவும் ஏற்ற இடம். ஜீப் சவாரி, பறவைகள் பார்ப்பது, யானை சவாரி போன்றவை இங்கு பிரபலமானவை. சாலை பயணத்தின்போது வனவிலங்குகளை காணும் வாய்ப்பும் கிடைக்கும்.

5. சிறுமலை - Sirumalai

Payanam Articles
Sirumalai

நத்தம் சாலையில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதி கோடைக்காலத்தில் குளிர்ச்சியான சூழலை தரும் ஒரு hidden gem. கூட்டம் குறைவாக இருப்பது இதன் பெரிய plus point. மழைக்காலங்களில் இது இன்னும் பசுமையாக மாறி கண்களை கவரும். பேருந்து வசதி இருந்தாலும், நம்ம காரில் போனால் முழு அழகையும் ரசிக்க முடியும்.

தமிழ்நாட்டில் பல சுற்றுலா தலங்கள் இருந்தாலும், கேர்ன் ஹில், சிறுமலை போன்ற hidden places போனால் கூட்ட நெரிசல் இல்லாமல் நிம்மதியாக விடுமுறையை அனுபவிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com