
திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைவாசஸ்தலம் பொன்முடி. மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒரு பகுதியான இது இயற்கை வனப்பும், எழிலும் நிறைந்த பகுதியாகும். கேரள மண்ணில் உள்ள இது கடல் மட்டத்திலிருந்து 1100மீ உயரம் உள்ளது.
நீங்கள் இந்த இடத்திற்குள் நுழைந்ததும், கவர்ச்சியான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை ரசிக்கலாம். உங்கள் வன வழிகாட்டியுடன் காட்டு சஃபாரிக்குச் செல்லலாம். கேப்பிங் மற்றும் மலையேற்றம் போன்ற கவர்ச்சிகரமான செயல்களிலும் நண்பர்களுடன் ஈடுபடலாம்.
இதமான வெப்ப நிலையால் சிறப்பான சுற்றுலா தலமாக குளிர்ச்சியாக இருக்கும். பொன்முடி என்றால் தங்கச் சிகரம் என்று சொல்வர். இது ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. டிரெக்கில், பைக்கில் ஆகியவற்றில் செல்ல ஏற்ற இடம். இங்கு பறவை இனங்கள் அதிகமாக இருக்கும். ஏரிகள், பள்ளத்தாக்குகள், தோட்டங்கள் எனச் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.
வனவிலங்குக் காப்பகம், மேற்கு தொடர்ச்சி மலைகளின் உயரமான சிகரங்களில் ஒன்றான அகஸ்தியர் கூடம் ஆகியவையும் பொன் முடிக்கு அருகில் அமைந்துள்ளன. பொன்முடிக்கு அருகில் அமைந்துள்ள கல்லார் ஆறும் பார்த்து ரசிக்க வேண்டிய இடமாகும்.
மேலும் பொன்முடியில் காணவேண்டிய இடங்களாக கோல்டன் பள்ளத்தாக்கு, மீன் முட்டி அருவி, அகஸ்தியர் மலை, மினி பூங்கா, பொன்முடி பிரெஸ்ட் போன்றவை. இங்கு நடைபெறும் ஆரன்முழா நீர்த்திருவிழா மிகவும் பிரசித்து பெற்றது. இதைக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் அதிகம் வருவர்.
பொன்முடி சென்னையிலிருந்து 775கி மீ தொலைவில் உள்ளது. ஆண்டு முழுவதும் இதமான வெப்பநிலை நிலவும் என்பதால் இங்கு எப்போதும் பயணிக்கலாம்.
அகஸ்டார் குடம் என்ற மலை உச்சியும் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும். இது மேற்கு தொடர்ச்சி மலைகளில் மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்று. 1868 மீ உயரம் கொண்டது. நாகார், பெப்பரா, எஷண்டேய் வனவிலங்கு காப்பகம், அச்சன் கோவில், தேன் மலை, புனலூர், திருவனந்தபுரம் ஆகியவற்றை உள்ளடக்கிய அகஸ்தியர் மலை உயிர்க்கோள பாதுகாப்பு இடமாகும். அற்புதமான இயற்கை அழகை நுகர உகந்த இடமாக நெய்யாறு அணைக்கட்டுகள், பொன்முடியும் விளங்குகிறது.
இந்த கோடைகாலத்தில் பொன்முடிக்கும் அதன் அருகில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளையும் பார்த்து, ரசித்து அந்த குளிர்ச்சியை அனுபவித்துவிட்டு வாருங்கள்.