வியட்நாமின் பிரமிக்க வைக்கும் சுண்ணாம்பு பாறைக் குகைகள்!

payanam articles
caves of Vietnam

வியட்நாம் அதன் அழகிய கடற்கரைகளுக்கு மட்டுமின்றி கண்கவர் சுண்ணாம்பு பாறை குகைகளுக்கும் (limestone Caves) பெயர் பெற்றது. வியட்நாமில் சுண்ணாம்பு பாறை குகைகள் பிரபலமான சுற்றுலா தலங்களாகும். குறிப்பாக ஹாலோங் விரிகுடா மற்றும் ஃபோங் நஹா-கே பாங் தேசிய பூங்கா ஆகியவை சுண்ணாம்பு பாறை குகைகளுக்கு மிகவும் பிரபலமான இடங்களாகும். இந்த குகைகள் மில்லியன் கணக்கான ஆண்டுகளில் உருவானவை.

மேலும் வியக்க வைக்கும் ஸ்டாலாக்டைட் மற்றும் ஸ்டாலாக்மைட் வடிவங்களைக் கொண்டுள்ளன. இந்த சுண்ணாம்பு பாறை குகைகள் பார்ப்பதற்கு பிரமிக்க வைக்கும் தோற்றத்தையும்,  அமைதியான சூழலையும் கொண்டுள்ளன. இந்த குகைகள் வியட்நாமின் இயற்கை அழகை ரசிக்கவும், சாகசப் பயணங்களை மேற்கொள்ளவும் சிறந்த இடங்களாகும்.

1. ஹாலோங் விரிகுடா - Ha Long Bay

caves of Vietnam
Ha Long Bay

வியட்நாமில் உள்ள ஹாலோங்  விரிகுடா ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். இது அதன் அழகிய  சுண்ணாம்பு பாறைகளாலான ஆயிரக்கணக்கான தீவுகள் மற்றும் பவளப்பாறைகளுக்கு பெயர் பெற்றது. வியட்நாமின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த தீவுகளில் பல சுவாரஸ்யமான குகைகள் உள்ளன. அவற்றில் சில தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த தீவுகளில் உள்ள குகைகள் படகு பயணம் மற்றும் கயாகிங் போன்ற செயல்களுக்கு பிரபலமானது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இதில் மிதக்கும் கிராமங்கள் உள்ளன. அங்கு மீனவர்கள் வாழ்கின்றனர்.

2. லுவான் குகை - Luon Cave

caves of Vietnam
Luon Cave

ஹாலோங் விரிகுடாவில் உள்ள போ ஹாம் (Bo Hon) தீவில் அமைந்துள்ள ஒரு சிறிய குகை. இது ஹாலோங்  விரிகுடாவின் இயற்கை அழகின் ஒரு பகுதியாகும். கயாக் அல்லது சிறிய படகு மூலம் மட்டுமே இதனை அணுக முடியும். இது நீலமான நீரைக் கொண்ட ஒரு வினோதமான சூழலை வழங்குகிறது. குகை பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்டுள்ளது.  இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த இடமாக இந்த லுவான் குகை உள்ளது.

3. சன் டூங் குகை - Son Doong Cave

caves of Vietnam
Son Doong Cave

போங் ந-கே பேங் தேசிய பூங்காவில் அமைந்துள்ள சன் டூங், உலகின் மிகப்பெரிய குகையாகும். இது கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் நீளமும், 38.5 மில்லியன் கன மீட்டர் கொள்ளளவும் கொண்டது. இது மகத்தான ஒரு நிலத்தடி நதிக்கு பிரபலமானது. வரலாற்றுக்கு முந்தைய மழைக்காடுகள் மற்றும் தனித்துவமான தாவரங்கள் மற்றும் விலங்குகளைக் கொண்டுள்ளது. இது சுமார் 400-450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவின் பழமையான காார்ஸ்ட் மலைத்தொடரின் பிளவுக் கோட்டில் உருவாக்கப்பட்டது. வானிலை காரணமாக பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை மட்டுமே இந்த குகையை அணுக முடியும்.

4. ஃபோங் நஹா-கே பாங் - Phong Nha Ke Bang Cave

caves of Vietnam
Phong Nha Ke Bang Cave

ஃபோகஸ் நா-கே பாங் தேசிய பூங்கா போ டிராச் மற்றும் மின் ஹோவா (Bo Trach & Minh Hoa district) மாவட்டங்களில் அமைந்துள்ளது. இது 2003 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்ற பூங்காவாகும். இது உலகின் மிகப்பெரிய குகைகளில் ஒன்றாகும். தேசிய பூங்காவில் அமைந்துள்ள இந்த குகை, சுண்ணாம்பு மலைகள் மற்றும் நிலத்தடி ஆறுகளால் ஆனது. இது 300க்கும் மேற்பட்ட குகைகளைக் கொண்டுள்ளது. இங்கு உலகின் மிக நீளமான நிலத்தடி நதி உள்ள ஃபோங் நஹா குகை உள்ளது. படகு சுற்றுலாக்களுக்கு பிரபலமான இடமாகும். இது சோன் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.

5. டார்க் கேவ் - Dark Cave

caves of Vietnam
Dark Cave

போங் நாவில் அமைந்துள்ள இந்த ஈரமான குகை ஒரு தனித்துவமான சாகசத்தை வழங்குகிறது. அதன் இருண்ட அறைகளை தலை டார்ச்சுடன் ஆராய்ந்து மண்குளியல்களையும் அனுபவிக்கலாம். வெளிச்சம் இல்லாத குகைக்குள் நுழைந்து, ஒரு பெரிய மண் குவியலில் நீந்தும் சுகமான அனுபவத்தை வழங்கும் இந்த குகை சுண்ணாம்பு மற்றும் பாசால்ட் பாறைகளால் ஆனது. இவை ஆய்வு மற்றும் சாகசத்திற்கான தனித்துவமான வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த குகையை படகு மூலம் அணுகலாம். குகைக்குள் படகு சவாரி மற்றும் சாய் நதி ஜிப்லைனில் சவாரி செய்வதற்கு கட்டணங்கள் உண்டு. இந்த ஜிப்லைன் 2014 இல் திறக்கப்பட்ட மிகவும் நீளமான ஜிப்லைன் ஆகும். பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இங்கு வருவதற்கு ஏற்ற காலமாகும்.

6. பாரடைஸ் குகை - Paradise Cave

caves of Vietnam
Paradise Cave

யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ள போங் நா-கே பேங் தேசிய பூங்காவில் உள்ள மற்றொரு பிரமிக்க வைக்கும் குகையாகும். பாரடைஸ் குகை அதன் அற்புதமான ஸ்டாலாக்டைட்டுகள் மற்றும் ஸ்டாலாக்மிட்டுகளுக்குப் பெயர் பெற்றது. இதனால் தான் இதற்கு 'நிலத்தடி அரண்மனை' என்ற புனைப்பெயர் உள்ளது. இந்த குகை 31 கிலோமீட்டர் நீளம் கொண்டு 300 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலானது.

பாரடைஸ் குகை என்பது போங் நாவிலிருந்து 20 நிமிட பயண தூரத்தில் உள்ளது. குகைக்குள் பொதுவாக 10C குளிராக இருப்பதால் சூடான ஆடைகளை எடுத்துச் செல்ல மறக்க வேண்டாம்.

வியட்நாமின் குகைகள் பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகள் வழியாக நிதானமான படகு சவாரிகள் முதல் மறைக்கப்பட்ட உலகங்களில் சவாலான சாகசங்கள் வரை பல்வேறு அனுபவங்களை வழங்குகின்றன.

7. பார்வையிட சிறந்த நேரம்

caves of Vietnam
Best time to visit

அக்டோபர் முதல் ஏப்ரல் வரை மிதமான மற்றும் வறண்ட கால நிலை நிலவுவதால் குகைகளுக்குள் பயணிக்கவும், படகு சவாரி செய்யவும், இயற்கையை ரசிக்கவும் ஏற்றதாக இருக்கும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சில நேரங்களில் வெள்ளம் காரணமாக குகைகள் மூடப்படலாம். எனவே இந்த மாதங்களில் செல்வதை தவிர்த்துவிடுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com