சிற்பக்கலையின் ஆச்சர்யம்… இந்திய கோவில்களில் காணலாம் வாங்க!

ஹரிஹரேஸ்வரர் கோவில்
ஹரிஹரேஸ்வரர் கோவில்

சில சமயங்களில், கோவில்களில் வடிவமைக்கப் பட்டிருக்கும் சிலைகளைக் காணும் போது, சிற்பிகள் வடித்தது சிலையா இல்லை உயிர் உள்ள மனிதர்களா? என்று தோன்றும் அளவிற்கு  அவ்வளவு தத்ரூபமாக இருக்கும். அப்படி நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடிய சில சிலைகளை பற்றி இன்றைய பதிவில் காணலாம்.

‘காலத்திற்கேற்ப மாற்றம்’ என்று சொல்லப்படுவது போல நம்முடைய ஆடை, அணிகலன், தொழில்நுட்பம் என்று நம் வாழ்வில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் பெண்களுக்கும் பொருந்தும். எல்லாவற்றிலும் மார்டனாக மாறிய பெண்கள் முடியையும் ஃபெதர் கட், லேயர் கட் என்று வெட்டிக்கொண்டார்கள். இருப்பினும் தலைப்பின்னி பூ வைத்து பாரம்பரியமாக இருக்க பிடிக்காத பெண்கள்  உண்டா என்ன? எந்த காலக்கட்டமாக இருந்தாலும், நிறைய முடி இருக்கும் பெண்களை பார்த்தால் சற்று பொறாமை வரத்தான் செய்யும்.

இப்படி பெண்களை பார்த்து பெண்களே பொறாமை படக்கூடிய விஷயத்தை சிற்பமாக வடித்து வைத்திருக்கிறார்கள் தமிழக சிற்பிகள்.

எத்தனை கலைநயம், எத்தகைய நேர்த்தி, பார்த்து கொண்டேயிருக்கலாம் என்று தோன்றும் அழகு, இடுப்புக்கு கீழ் வரை செல்லும் கூந்தல், அதை பின்னி போட்டிருக்கும் அழகு. அத்துடன் தலையிலே இருக்கும் அணிகலன்கள் என்று ஒரு சிற்பமே உயிர்பெற்று பெண்ணாக நிற்பது போல தோன்றுகிறது.

பூவரக சுவாமி கோவில்
பூவரக சுவாமி கோவில்

இந்த சிற்பம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பூவரக சுவாமி கோவிலிலே தான் உள்ளது.

இதற்கே இப்படி அதிசயித்தால் எப்படி? அடுத்து பார்க்கவிருக்கும் ஆப்டிக்கல் இலூசன் சிற்பம் உங்களை நிச்சயமாக பிரமிப்பில் ஆழ்த்தும் என்பதில்  சந்தேகமில்லை. கர்நாடக மாநிலத்தில் ஹரிஹரேஸ்வரர் கோவிலில் உள்ள ஒரு சிற்பம் தான் நம்மை ஆச்சர்யப்படுத்தியது, இந்த சிற்பத்திற்கு தலை ஒன்று தான். ஆனால் உடல்கள் 5 உள்ளது. இது கிருஷ்ணரின் சிலை என்று கூறப்படுகிறது. ஒரு தலைக்கு ஐந்து உடல்கள் இருந்தாலும், தலையை எந்த உடலுடன் பொருத்தி பார்த்தாலும் சரியாகவேயிருக்கும். இத்தனைக்கும் ஐந்து உடல்களும் வெவ்வேறு நிலையில் இருக்கும். எனினும் சரியாக பொருந்துவது போல வடிவமைத்த சிற்பியை நினைத்து வியந்து போவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? இக்கோவில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
இயற்கையாக கூந்தல் பராமரிப்பு மற்றும் கலரிங் செய்முறைகள்!
ஹரிஹரேஸ்வரர் கோவில்

இதுபோன்ற எண்ணற்ற அதிசய சிற்பங்கள் இந்தியா முழுதும் உள்ள கோவில்களில் அமைந்திருக்கிறது. இவற்றையெல்லாம் பொறுமையாகவும், நிதானமாகவும் ரசிக்க நேரமிருப்பவர்கள் கண்டிப்பாக இதுபோன்ற சிற்பங்களை ரசிப்பதற்கென்றே ஒரு பயணம் மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com