குழந்தைகளுடன் சுற்றுலா செல்லும் போது கவனிக்க வேண்டியவை!

Tour with Kids
Tour With Kids
Published on

சுற்றுலா செல்வது என்றால் அனைவருக்கும் மிகப் பிடித்தமான ஒன்று. அதிலும் குழந்தைகள் சுற்றுலா என்றவுடன் சுறுசுறுப்பாக கிளம்பி விடுவார்கள். ஆகையால் சுற்றுலாவிற்கு குழந்தைகளை உடன் அழைத்துச் செல்லும் போது நாம் பின்பற்ற வேண்டிய சில செயல்களை இந்தப் பதிவில் காண்போம்.

கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மலைப் பிரதேசம் மற்றும் நீர்வீழ்ச்சி போன்ற குளிர்ச்சியான இடங்களுக்கு பலரும் சுற்றுலா செல்வது வழக்கம். சிலர் நண்பர்களுடன் சுற்றுலா செல்வார்கள். சிலர் குடும்பத்துடன் சுற்றுலா செல்வார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் குழந்தைகளை நாம் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் போது சில யுக்திகளை கையாள வேண்டும். ஏனெனில், குழந்தைகளின் மனம் நம்மைப் போல் சிந்திக்காது அல்லவா! ஆகையால், இச்சமயத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது நல்லது.

சுற்றுலாவிற்கு குழந்தைகளுடன் செல்லும் போது இரவு நேரப் பயணம் மற்றும் அதிகாலையில் எழுந்து கிளம்புவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு மாதிரியான தூக்க இயல்புகள் இருக்கும். சில குழந்தைகள் பகலில் நன்றாக தூங்கும். சில குழந்தைகள் இரவில் நன்றாக தூங்கும். ஆகையால், குழந்தைகளின் தூக்க இயல்பைப் பொறுத்து பயணங்களைத் திட்டமிடுவது நல்லது. குழந்தைகளின் தூக்கத்தை நாம் தொந்தரவு செய்தால் நாள் முழுவதும் எரிச்சலுடன் இருப்பார்கள் என்று சொல்லவும் வேண்டுமா?

சுற்றுலாவிற்கு எங்கு செல்வதாக இருந்தாலும், பயணச் சீட்டு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

சுற்றுலா செல்லும் இடங்களில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகள் இருக்கும் இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். உணவகங்களில் சாப்பிடச் சென்றால் கூட, ஒரு சிறிய பூங்கா இருக்கும் உணவகமாக இருந்தால், அது குழந்தைகளுக்கு மிகப் பிடிக்கும்.

யண வாகனம் மற்றும் தங்குமிடம் என நாம் செல்லும் அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கான வசதிகள் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்குத் தேவைப்படும் சிறு பொம்மை முதல் பேம்பர்ஸ் வரை அனைத்தையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.‌

இதையும் படியுங்கள்:
சுற்றுலா செல்லப் போகிறீர்களா? இதைப் படித்துவிட்டுப் புறப்படுங்கள்!
Tour with Kids

ன்கு வளர்ந்த குழந்தைகள் எனில், அவர்களின் முதுகில் எடை குறைந்த சிறிய பேகை மாட்டி விடலாம். அதிக எடையில்லாத அவர்களின் பொருள்களை அவர்களே எடுத்து வரப் பழக்கி விடுங்கள்.

குழந்தைகளுக்கு மிகப் பிடித்த சில உணவு வகைகளை வாங்கிக் கொடுங்கள். இருப்பினும், அந்தந்த இடங்களின் காலநிலைக்கேற்ப உணவுகளை சாப்பிடுவது நன்மை தரும்‌.

சில குழந்தைகள் பார்ப்பது அனைத்தும் வேண்டும் என அடம் பிடிப்பார்கள். அந்நேரத்தில் குழந்தைகளை திட்டக் கூடாது. எடுத்துச் சொல்லுங்கள். திட்டினால், அவர்களின் மனநிலை மாறி, சுற்றுலாவை திருப்தியாக அனுபவிக்க முடியாத நிலை உண்டாகும்.

குழந்தைகளுடன் செல்லும் போது நாமும் அவர்களுடன் இணைந்து விளையாடினால், சுற்றுலாவில் அவர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

மேற்கூறிய தகவல்கள் உங்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும். அடுத்த முறை குழந்தைகளுடன் சுற்றுலாவிற்கு செல்லத் திட்டமிட்டால், இவற்றை மனதில் நிறுத்தி விவேகத்துடன் செயல்படுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com