meta property="og:ttl" content="2419200" />

வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது கவனிக்க வேண்டியவை!

Tourist places...
Tourist places...
Published on

விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்ல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவோம். கொரோனாவிற்குப் பின் வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததை விட அதிகமாகி கொண்டு வருகிறது. இன்று இருக்கக்கூடிய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில் சுற்றுலா போன்றவை நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.

மேலும் மனதளவிலும், அறிவுப்பூர்வமாகவும் பல நன்மைகளைப் பெறுகிறோம். புதிய புதிய மனிதர் களுடன் உரையாடுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இதனால் வேறு நாடுகளில் வசிக்கும் மனிதர்களின் இயல்புகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். பல புதிய இடங்களுக்குச் செல்வதும், பல்வேறு மக்களை காண்பதும் நம் உணர்வை மட்டுமில்லாது உடலுக்கும் புத்துணர்ச்சி தரும்

மேலும் சுற்றுலாக்கள் செல்லும்போது இயற்கை அழகுகள், உயிரினங்கள், பாய்ந்து செல்லும் ஆறுகள்,  விரிந்த கடல்கள், மலைகள், அருவிகள்,  குகைகள் போன்றவற்றைக் கண்டு ரசித்து நம்மையே மறந்து இயற்கை காட்சிகளில் லயித்து விடுவோம். அதை தவிர நவீன அறிவியல் முன்னேற்றத்தையும், தொழில் வளர்ச்சியையும்  அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அமையும்.

சுற்றுலா பயணம் கிளம்பும் முன் நாம் சிலவற்றில்  கவனம் செலுத்தினால் நம்  பயணத்தை இனிமையாக அனுபவிக்க முடியும். பேக்கேஜ் டூரில் செல்லும்போது அதை நடத்துபவரைப் பற்றி நன்கு விசாரித்து அறிவது முக்கியம். வெளி நாட்டுப் பயணம் திட்டமிடும்போது நன்கு தெரிந்த பயண நிறுவனத்தை தேர்வு செய்து பின் தேதி, புறப்படும் நேரத்தை பல முறை சரி பார்த்து. பயண விவரங்கள் அனைத்தையும் முழுவதுமாக படித்து தெரிந்து கொண்டு பயணம் செய்வது நல்லது.

சில சமயங்களில் பயணத்தின்போது பண நஷ்டத்துடன் மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடலாம். சில விஷயங்கள் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் வெளி நாட்டு பயணங்களின் போது புறப்படும் நேரத்தைக் கூட (ZERO HOURS) குழப்பத்தால் சரியாக கவனிக்காமல் விமானத்தையே தவற விட்டவர்கள் உள்ளனர். அதேபோல் வெளிநாடுகளில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு விமானத்தில் (domestic flight) செல்லும்  முன் அனுமதிக்கப்பட்ட லக்கேஜ் எடையை தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் எடுத்துச் சென்றால் விமான நிலையத்தில் அதிக எடைக்கான கட்டணம் செலுத்துவதை தவிர்க்கலாம். வெவ்வேறு நாடுகளில் உள் நாட்டு விமானப் பயண அனுமதிக்கப்பட்ட லக்கேஜ் எடை வேறுபடலாம்.

Tourist places...
Tourist places...

இம்மிகிரேஷன் (Immigration) சரிபார்ப்புகள் முடிந்த பிறகு பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களை  அங்கேயே தவற விட்டு விடாமல் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் கூட்டம் அதிகமாக இருக்கக் கூடும். அங்கு தரப்படும் சிறு காகித விவரங்களை கூட நாம் திரும்பி வரும் போது கொடுக்க வேண்டி வரலாம். பாஸ்போர்ட்டின் சில பிரதிகள் எடுத்து நம் பெட்டிகளில் வைத்துக் கொள்வது நல்லது.

இதையும் படியுங்கள்:
புன்னகைத்துப் பாருங்கள் மகிழ்ச்சி மலரும்!
Tourist places...

சில நாடுகளில் சில பொருட்கள் தடை செய்யப் பட்டிருக்கும். அதையும் கவனித்தில் கொள்ள வேண்டும். பேக்கேஜ் பயணங்களில் குழுவாக சென்றாலும் கூட அந்த ஊரில் நாம் தங்குமிடம் / ஹோட்டல் முகவரியை கைவசம் வைத்திருந்தால் பயணத்தின் போது நம் குழுவை தவற விட்டாலும் தங்குமிடத்துக்கு வந்து விடலாம். ஜப்பான், ஜெர்மனி போன்ற இடங்களில்  பெரும்பாலும் அந்த நாட்டு மொழிகளில் தான் பேசுவார்கள்.

அதனால் வெளிநாட்டுப் பயணத்தின்போது சிறு சிறு விஷயங்களில் கூட கவனம் செலுத்தி பயண விவரங்கள் அனைத்தையும் முழுவதும்  தெரிந்து கொண்டு பயணம் செல்வது நலம். இதனால் நம் பயணத்தையும் டென்ஷன் இல்லாமல் நன்கு அனுபவிக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com