சிலிர்க்க வைக்கும் சிவகங்கை மாவட்ட சுற்றுலாத் தலங்கள்!

சுற்றுலாத் தலங்கள்
சுற்றுலாத் தலங்கள்

தினேழாம் நூற்றாண்டில் சிவகங்கை பகுதி ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்டிருந்து. பின்பு வேலுநாச்சியாரின் ஆளுகைக்குள் வந்தது. தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இப்பகுதியில் இருக்கும் சுற்றுலாத் தலங்களை பார்ப்போம்.

1. கீழடி அருங்காட்சியகம்

கீழடி அருங்காட்சியகம்
கீழடி அருங்காட்சியகம்

இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் நடைபெறும் அகழாய்வானது சிந்து சமவெளி நாகரிகத்திற்கு உட்பட்ட ஆறாம் நூற்றாண்டிற்கும் ஐந்தாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலகட்டத்தை சேர்ந்த பண்டைய தமிழர்களின் நாகரிகங்களை எடுத்துக்காட்டும் விதமாக பல்வேறு அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் சிவகங்கையில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவிலும் மதுரையிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

2. சிவகங்கை அரண்மனை

சிவகங்கை அரண்மனை
சிவகங்கை அரண்மனை

கௌரி விலாசம் என்று அழைக்கப்படும் திருமலை நாயக்கர் கால கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டு இருக்கும்  அரண்மனையில்   அரசி வேலு நாச்சியார், வெள்ளச்சி நாச்சியார், இந்த அரண்மனையில் வசித்துள்ளதோடு ராஜராஜேஸ்வரி கோவிலும் உள்ளது. இந்த அரண்மனை சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து 800 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு: நமது நாட்டில் இந்த ரயிலில் மட்டும் இலவசமாக பயணிக்கலாம்…!
சுற்றுலாத் தலங்கள்

3. வேலு நாச்சியார் மணிமண்டபம்

வேலு நாச்சியார் மணிமண்டபம்
வேலு நாச்சியார் மணிமண்டபம்

ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட வீரமங்கை வேலுநாச்சியார் நினைவாக வேலு நாச்சியார் மணிமண்டபமும்,  சிவகங்கையை மீட்க உதவிய  குயிலின் தியாகத்தை போற்றும் வகையில் வேலு நாச்சியார் மணிமண்டபத்தில் குயிலிக்கும் நினைவுத்‌தூண் அமைக்கப்பட்டிருக்கிறது. இது சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

4. ஆயிரம் ஜன்னல் வீடு

ஆயிரம் ஜன்னல் வீடு
ஆயிரம் ஜன்னல் வீடு

சிமெண்ட் பயன்படுத்தாமல் சுண்ணாம்பு கற்களை பயன்படுத்தி 20,000 சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் இந்த வீட்டில் 25 பெரிய அறைகளும் 5 கூடங்களோடு  ஆயிரம் ஜன்னலுடன் கட்டப்பட்டிருக்கும் இந்த வீடு காரைக்குடி பாரம்பரிய முறையில் கட்டப்பட்டுள்ளது. இது காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது

5. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்

வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்

திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள இந்த வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் சுமார் 38 ஏக்கர் பரப்பளவு கொண்ட  பறவைகள் சரணாலயத்திற்கு செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை பல்வேறு வகையான பறவைகள்  வந்து செல்கின்றன. சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 41.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

6. கானாடுகாத்தான் அரண்மனை

கானாடுகாத்தான் அரண்மனை
கானாடுகாத்தான் அரண்மனை

1990 சதுர அடியில் கட்டப்பட்ட கானாடுகாத்தான் அரண்மனை செட்டிநாட்டின் பாரம்பரிய கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அலங்கார விளக்குகள், தேக்கு மர பொருட்கள், பளிங்கிக் கல், கண்ணாடிகள், போன்றவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். இந்த அரண்மனை சிவகங்கையில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும் காரைக்குடியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

7. சங்கரபதி கோட்டை

சங்கரபதி கோட்டை
சங்கரபதி கோட்டை

மருது பாண்டியரின் போர்பயிற்சி பாசறையாக திகழ்ந்த இந்த சங்கரபதிக் கோட்டை பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோட்டை வனப்பகுதியில் அமைந்துள்ளதால் இதனை சுற்றி நிறைய புள்ளி மான்கள் காணப்படுகின்றன. தமிழக வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோட்டை தற்பொழுது மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

8. பிள்ளையார்பட்டி கோவில்

மிகப் பழமையான குகைக் கோவில்களில் ஒன்றான கற்பக விநாயகர் கோவில் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ளது. இக்கோவில் காரைக்குடியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

9. கண்ணதாசன் மணிமண்டபம்

கண்ணதாசன் மணிமண்டபம்
கண்ணதாசன் மணிமண்டபம்

சாகா வரம் பெற்ற பாடல்களை தந்த கவியரசர் கண்ணதாசனுக்கு தமிழ்நாடு அரசு நூலகத்துடன் கூடிய மணி மண்டபத்தை கட்டியுள்ளது. இதுவும் சிவகங்கை மாவட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com