சுற்றுலா வருமானத்தைப் பல மடங்காக்கும் ‘டோல்கியன் டூரிஸம்’ – ஆக்கமா? அச்சுறுத்தலா?

பசுமையான இடங்கள்...
பசுமையான இடங்கள்...
ஜி.எஸ்.எஸ்.

G.S.SUBRAMANIAN (ஜி.எஸ்.எஸ்.) A postgraduate in Economics, Business Management, Personnel Management and a graduate in law. More than 18,000 articles published in various magazines/newspapers in Tamil and English. More than 250 short stories published under the pen name Arun Charanya. A popular quizmaster and an effective HR trainer for corporates. Author of more than 80 books.

Updated on

நியூசிலாந்தில் தொடங்கியது இதற்கான அஸ்திவாரம். சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கவலைப்பட வைத்திருக்கிறது இந்த வகை சுற்றுலாக்கள்.

பசுமைகள் நிறைந்த நாடு நியூசிலாந்து. இவற்றைக் கண்டு ரசிப்பதற்காக அங்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் உ​ண்டு. சமீபகாலமாக இவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. காரணம் இவர்கள் காண்பதற்கான ‘சுற்றுலாத் தலங்கள்’ அங்கு அதிகமாகி விட்டதுதான்.

எப்படி இவற்றின் எண்ணிக்கை அதிகமானது? புதிய அற்புதக் கட்டுமானங்களா? ச​மீபத்தில் திறக்கப்பட்ட சரணாலயங்களா? இல்லை. ஓர் ஆங்கிலத் திரைப்படம் தொடக்கி வைத்த விந்​தை இது.

‘தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு எங்கெல்லாம் அந்தப் படப்பிடிப்பு நடந்தனவோ, அங்கெல்லாம் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரத் தொடங்கினர். உதாரணத்திற்கு மெளன்ட் ஒலிம்பஸ் என்ற இடம். நியூசிலாந்தின் தெற்குப் பகுதியில் ஒரு மூலையில்​ இருக்கும் இந்த மலையின் ஒரு பகுதி கஹுரங்கி தேசிய பூங்காவில் உள்ளது. இயற்கையானது, அங்குள்ள பாறைகளில் அற்புதமான வடிவங்களைச் செதுக்கியுள்ளது. இதைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ‘தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ்’ திரைப்படம் வெளியான பிறகு பல மடங்கு அதிகரித்தது.

அதேபோல் அந்தப் படத்தில் வரும் குள்ளர்கள் தங்கும் காடாக க்வின்ஸ் டவுனில் உள்ள ஒரு கடற்கரையை ஒட்டிய காடு சித்தரிக்கப்பட்டது. இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாக, வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகச் சொற்பம். ஆனால், மேற்படி திரைப்படம் வெளியான பிறகு அந்த வனப்பகுதிக்கு நிறைய பேர் வரத் தொடங்கி விட்டனர்.

மாசுபடாத இயற்கைச் சூழல் மனிதர்களால் மாசுபடத் தொடங்கிவிட்டது என்பது மட்டுமல்ல; வேறொரு காரணமும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கவலைப்பட வைத்திருக்கிறது.

பொதுவாக பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தினால், படக்குழுவினர் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும். ’படப்புடிப்பு முடிந்ததும் அந்த இடத்தை முன்பு போலவே ஆக்கிச் செல்ல வேண்டும்’ என்னும் நிபந்தனை அதில் இடம் பெற்றிருக்கும். ஆனால், இப்போதெல்லாம் படப்பிடிப்புக்குப் பிறகு அங்கு போடப்பட்ட செட், பூங்காவில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றை நீக்கி பழைய நிலைக்குக் கொண்டு வராமல் அப்படியே விட்டுச் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதை அந்த அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்பதை விட மறைமுகமாக ​ ஊக்குவிக்கிறது என்றே சொல்லலாம். காரணம் அவை நீக்கப்படாமல் இருந்தால், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது. அரசுக்கு வருமானமும் கொழிக்கிறது.

தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ் திரைப்படம்...
தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ் திரைப்படம்...

‘தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ் தலச் சுற்றுலாக்கள்’ என்றே டிராவல் நிறுவனங்கள் சுற்றுலாக்களை நடத்தத் தொடங்கிவிட்டன. படப்பிடிப்பு நடந்த பகுதிகளில் அந்தக் கதாபாத்திரங்கள் அணிந்த உடையைப் போன்றே உடைகள் வாடகைக்கு கிடைக்கின்றன. அவற்றை அணிந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

சமீபத்தில் திரையை எட்டிய ‘தி ஹாப்பிட்’ (The Hobbit) திரைப்படத்தின் பல காட்சிகளும் கூட​ நியூசிலாந்தில் படமாக்கப்பட்டுள்ளன. இதனால் தனது சுற்றுலா வருமானம் மேலும் அதிகரிக்குமென்று கருத்து தெரிவித்திருக்கின்றனர் நியூசிலாந்தின் பொருளாதார நிபுணர்கள்.

இதையும் படியுங்கள்:
ரயில் பயணமா? முதல்ல இதையெல்லாம் தெரிஞ்சுக்கங்க!
பசுமையான இடங்கள்...

ராமோஜிராவ் திரைப்பட நகரம் ஹைதராபாதில் உள்ளது. அதன் ஒரு பகுதியில் பாகுபலி திரைப்படத்துக்காக போடப்பட்ட ‘செட்’களை வைத்திருக்கிறார்கள். அதைப் பார்த்து வியப்பவர்கள் ஏராளம்.

அதுசரி, இதுபோன்ற சுற்றுலாக்களை டோல்கியன்​ டூரிஸம் என்று ஏன் கூற வேண்டும்? ‘தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ்’ கதையை எழுதியவரின்​ பெயர் டோல்கியன் (இதுதான் பின்னர் திரைப்படமானது). எனவேதான் அந்தப் பெயர்.

logo
Kalki Online
kalkionline.com