

தென்னிந்தியாவில் ஜனவரி மாதத்தில் அதிக வெப்பமோ கனமழையோ, ஈரப்பதமோ இருக்காது என்பதால் சுற்றுலா செல்ல ஏற்ற தருணமாக உள்ளது. அந்த வகையில் தென்னிந்தியாவில் 2026 ஆம் ஆண்டு பார்க்க வேண்டிய பசுமை, மலைகள், கடல் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பத்து இடங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
தேக்கடி, கேரளா
கேரளாவில் உள்ள தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் மற்றும் வனவிலங்கு சரணாலயத்தில், படகு சவாரி மூலமாக யானைகள் , மான்கள், காட்டெருமைகளை ஜனவரி மாதத்தில் நெருக்கமாக காண்பதோடு இங்குள்ள அடர்ந்த காடு மற்றும் புல்வெளிகளையும் ரசிக்கலாம்.
வேலூர், தமிழ்நாடு
தமிழ்நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள வேலூர் நகரத்தின் மையத்தில் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அழகுக்கு பெயர் பெற்ற வேலூர் கோட்டை மற்றும் தங்க கோயிலை இதமான கால நிலையில் கண்டு ரசிக்கலாம்.
நாகர்ஹோல் தேசிய பூங்கா, கர்நாடகா
கர்நாடகாவில் அமைந்துள்ள இராஜீவ் காந்தி தேசியப் பூங்கா என்றும் அழைக்கப்படும் நாகர்ஹோல் தேசிய பூங்கா நீலகிரி பையோஸ்பியர் காப்பகத்தின் ஒரு பகுதியாக இருப்பதோடு, வனவிலங்குகளின் இருப்பிடமாகத் திகழ்வதால் ஜனவரி மாதத்திற்கான சுற்றுலா இடமாக உள்ளது.
கபினி, கர்நாடகா
கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் வனவிலங்கு சரணாலயமாகவும் இருக்கும் கபினியில் யானைகள், புலிகள் மற்றும் சிறுத்தைகளை ஜனவரியில் நேரில் காணலாம்.
கன்னியாகுமரி, தமிழ்நாடு
இந்தியாவின் தெற்கு எல்லையாக இருக்கும் கன்னியாகுமரியில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் இரண்டையும் கண்டு ரசிப்பதோடு, விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை போன்ற சுற்றுலாத் தலங்களையும் காணலாம்.
திருச்சூர், கேரளா
கேரளாவில் பண்டைய கோவில்கள், கலாச்சார மையங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் கொண்டுள்ள திருச்சூரில் வடக்குநாதன் கோயில் மற்றும் பரமேக்காவு பகவதி அம்மன் கோயில் ஆகியவை கண்டு தரிசிக்க ஏற்ற இடங்களாக உள்ளன.
மதுரை, தமிழ்நாடு
கலாச்சார மற்றும் பழமையான தமிழ்நாட்டின் நகரங்களில் ஒன்றான வைகை கரையில் அமைந்திருக்கும் மதுரை, உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் மற்றும் பிற வரலாற்று சிறப்புள்ள இடங்களைக் கொண்டுள்ளது.
ராமேஸ்வரம், தமிழ்நாடு
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புனித தீவு நகரமான ராமேஸ்வரம் யாத்திரை தலமாக இருப்பதோடு அமைதியான கடற்கரைகள் மற்றும் கடலோரப் பகுதிகளை கொண்டுள்ளது.
பேக்கல், கேரளா
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கடற்கரை நகரமான பேக்கல் அரபிக்கடலின் பின்னணியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான கோட்டை, அழகான கடற்கரைகள், உப்பங்கழிகள் மற்றும் இயற்கை அழகுக்காகப் பெயர் பெற்றது.
குன்னூர், தமிழ்நாடு
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோடை வாசஸ்தலமான குன்னூர் நீலகிரி மலை ரயில் பள்ளத்தாக்குகள் நீர்வீழ்ச்சிகள் எழில் கொஞ்சும் இடங்கள் போன்றவற்றின் சொர்க்கமாக திகழ்கிறது .
தென்னிந்தியாவின் மேற்கூறிய 10 இடங்களை 2026 ஆம் ஆண்டில் கண்டு களித்து புத்தாண்டை புதுவிதமாக வரவேற்போம்.