காஷ்மீரில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள் - 10

பூமியில் சொர்க்கம் என அழைக்கப்படும் நகரம் இது. பனி மூடிய சிகரங்கள், உயரமான பைன் மற்றும் தேவதாரு மரங்கள், அமைதியான அழகான ஏரிகள், பச்சை வண்ண பள்ளத்தாக்குகள், வண்ண மலர்கள் நிறைந்த தூலிப் தோட்டங்கள் என கண்ணுக்கு விருந்தாக அமையும் இந்த காஷ்மீரை சுற்றிப் பார்க்கலாம் வாருங்கள்.
காஷ்மீரில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள் - 10

1. ஸ்ரீநகர்

ழகாக ஓடும் ஜீலம் நதி, ஷாலிமார் எனப்படும் முஹல் கார்டன், நிஷாத் பாக், மிதக்கும் மலர் சந்தை, வண்ணமயமான ஷிகாராக்கள்,  கோபாத்திரி மலையில் அமைந்த ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சங்கராச்சாரியார் மலை. இது கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவில் ஆகும்.டால் லேக், மிதக்கும் தபால் நிலையம், மியூசியம் என அழகு கொஞ்சும் இயற்கை நிறைந்த இடம் இது.

2. குல்மார்க்

னி மூடிய சிகரங்கள், அழகிய ஏரிகள்,  ஆசியாவிலேயே பெரிய மற்றும் உலகத்திலேயே இரண்டாவது பெரிய highest and longest Cable Car (gondola ride), உயரமான கோல்ஃப் மைதானம் ,அபர்வத் சிகரம், மகாராணி கோவில் ஸ்ட்ராபெரி பள்ளத்தாக்கு என அட்டகாசமான பார்க்க வேண்டிய இடம்.

3. Sonamarg (தங்க புல்வெளி)

Meadow of gold (தங்கப் புல்வெளி என புகழப்படும் சோனா மார்க் உயரமான பள்ளத்தாக்குக்கு மத்தியில் அமைந்துள்ளது. பனிப்பாறை,பாய்ந்து செல்லும் நீரோடைகள் ,பைன் மரங்கள், ஆறுகள் நிறைந்த இடம். பார்க்க வேண்டிய இடங்கள்:

கங்கபால் ஏரி, பால்டால் பள்ளத்தாக்கு, தாஜிவாஸ் (Thajiwas Glacier) பனிப்பாறை, ஜோஜிலா பாஸ் (Zojila Pass).

சோன்மார்க்கிலிருந்து இமயமலையின் 5 000 மீட்டர் உயரமுடைய அமர்நாத் peak, Machoi peak பனிப்போர்த்திய சிகரங்களை காண முடிகிறது. ஜீலமாற்றின் துணை ஆறான நல்லா சிந்து ஆற்றின் கரையில் உள்ளது இந்த சோனா மார்க். 60 மைல் நீளம் கொண்ட பசுமையான புல்வெளிகள் நிறைந்த இடம் இது. ஏப்ரல் மாதத்தின் கடைசிியில் தான் சோனா மார்க் செல்வதற்கான சாலை திறந்து விடப்படுகிறது. இங்கிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் அமர்நாத் கோவிலுடைய அடிவார முகாம் உள்ளது.

4. கார்கில் 

பார்க்க வேண்டிய இடங்கள்: கார்கில் போர் நினைவுச் சின்னம், சுரு பள்ளத்தாக்கு, கார்கில் பென்சிலா ஏரி, முல்பெக்  மடாலயம் போன்றவை.

5. கோக்கர்நாக்

பிருங்கி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இங்கு பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் தாவரவியல் பூங்கா, கோக்கர் நாக் ரோஸ் கார்டன், நீர்வீழ்ச்சி போன்றவை.

6. பஹல்காம்

ளபதி விஜயுடைய லியோ சூட்டிங் நடந்த இடம் தற்போது முக்கிய டூரிஸ்ட் ஸ்பாட்டாக காட்டப்படுகிறது.Mini Switzerland என அழைக்கப்படும் நகரம் இது.  இங்கு லிடர் ஆறும் (Lidder River), ஓடைகளும் ,பனி படர்ந்த மலைகளும் உள்ளன. கிரிக்கெட் பேட் தயாரிக்கின்ற ஃபேக்டரிகள் அதிகம் உள்ளது. ஆப்பிள் தோட்டங்களும் நிறைய உள்ளன. இங்கு மலை அருவிகள் அதிகம் உள்ளது.

பஹல்காமில் ABC Valleyகள் கட்டாயம் பார்க்க வேண்டியவை - Aru Valley, Betaab Valley & Chandanwari Valley.

7. ஜம்மு

கோயில்களின் நகரம் என்றே சொல்லலாம். புகழ்பெற்ற வைஷ்ணவ் தேவி கோவில் இங்கு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான யாத்திரைகள் இங்கு வருகிறார்கள்.

8. அனந்நாக் (Anantnag)

காஷ்மீர மொழியில் இதற்கு நீரூற்றுகள் மற்றும் ஏரிகளின் உறைவிடம் எனப் பொருள். மார்த்தாண்ட சூரியன் கோவில்:

கார்கோட மன்னர்களால் கிபி 650 ல் கட்டப்பட்டது இக்கோவில். மிகப் பழமையான இக்கோவிலை இந்திய  தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. மார்த்தாண்ட சூரியன் கோவில், அமர்நாத் குகை ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள்.

9. Tulip Garden:

Indira Gandhi memorial Tulip Garden: ஆசியாவின் மிகப்பெரிய தூலிப் தோட்டம். இது 2007ல் திறக்கப்பட்டது. இங்கு 74 ஏக்கர் பரப்பளவில் 65 வகையான தூலிப் மலர்கள் உள்ளன. மார்ச் மாதத்தில் மலரும் இப் பூக்கள் ஏப்ரல் இறுதிவரை அழகாக மலர்ந்து இருப்பதை காணலாம். காலை 9  மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

10. Shikara Ride in Dal Lake

சிக்காரா என்பது ஒரு விதமான மரப்படகுகள். இது பலவிதமாக உபயோகப்படுத்தப்படுகிறது. 6 இருக்கைகள் அமைக்கப்பட்டு, அழகாக அலங்காரம் செய்யப்பட்டு, குஷன்கள் எல்லாம் வைத்து decorative வாக இருக்கும். இந்தப் படகில் பயணம் செய்ய ஒரு மணி நேரத்திற்கு 700 ரூபாய் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாங்கப்படுகிறது. இதில் பயணம் செய்யும்போது மிதக்கும் தோட்டங்கள் (floating garden), மிதக்கும் ஆம்புலன்ஸ், மிதக்கும் பழக்கடைகள் என பார்க்கலாம். இந்த உல்லாச படகில் பயணம் செய்வது மிகவும் ஆனந்தமான ஒரு அனுபவம். இது காஷ்மீர் உடைய கல்சுரல் சிம்பலாக கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com