மங்களூரில் சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்க வேண்டிய முக்கியமான 10 இடங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். மங்களூர் அருமையான கடற்கரை நகரம். நீங்களும் ஒருமுறை சுற்றுலா சென்று வாருங்கள்.
இங்கு குடியிருக்கும் மங்களாதேவியின் பெயராலேயே மங்களூர் என்ற பெயர் இந்த ஊருக்கு ஏற்பட்டது. இங்கு 9ம் நூற்றாண்டில் கேரள பாணியில் கட்டப்பட்ட கோவில் உள்ளது. இங்கு மங்களாதேவி அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
1912ம் ஆண்டு, ஞானி நாராயண குருவினால் கட்டப்பட்ட குட்ரோலி கோகர்நாத் சிவன் கோயில், பிரசித்தி பெற்றது. இது பில்லவா சமூகத்தின் முக்கிய கோவிலாக உள்ளது. பில்லவா சமூகத்தின் தலைவராக இருந்த கோரகப்பா, தனது குரு நாராயண குருவின் துணையுடன் இந்தக் கோவிலைக் கட்டினார். பிரம்மாண்டமான கோபுரத்துடன், அழகிய வேலைப்பாடுகளை உடைய கோவில்.
துலு மொழியில், கட்டீல் என்ற கடலுக்கும், ஆற்றுக்கும் நடுவில் அமைந்துள்ள நிலம் என்று பொருள். இங்கு அமைந்துள்ள துர்கை அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு கிடைக்கும் அன்னதானம் பிரபலமானது.
இது 10 ஆம் அல்லது 11 ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையாக கோவில். இங்குள்ள பஞ்சலோக பிரம்மா சிலை, தென் இந்தியாவிலேயே பழமையானதாகக் கருதப்படுகிறது. இங்குள்ள சிவன், பிரசித்தி பெற்றவர். இவர் பரசுராமரின் பிரார்த்தனையால், இங்கு கோவில் கொண்டதாக கருதப்படுகிறது.
அரபிக்கடலினைக் கண்டுகளிக்க இந்தக் கடற்கரைகள் பிரபலமாக உள்ளன. இங்கு பல்வேறு விளையாட்டு அம்சங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் இருந்து, மக்களுக்கு நல்லதொரு அனுபவத்தை தருகின்றன.மாலை, கதிரவனின் அஸ்தமனத்தைக் கண்டுகளிக்க அருமையான கடற்கரைகள்.
திப்புசுல்தான் காலத்தில், சுல்தான் பேட்டரி என்ற ஒரு கண்காணிப்பு மேடை கட்டப்பட்டது. இங்கிருந்து, கடல்வழியாக வரும் எதிரிக் கப்பல்களைக் கண்காணிப்பதற்கு, இது 1784ம் ஆண்டு திப்புசுல்தானால் கட்டப்பட்டது. இங்கு, கீழே உள்ள அறையில் வெடிமருந்துகள் வைக்கப்பட்டதால், இது சுல்தான் பேட்டரி என்று அழைக்கப்படுகிறது. இங்கிருந்து தண்ணீர் பாவி கடற்கரைக்கு, பெரிய சுற்றுலாப் படகுகள் செல்கின்றன.
18ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கோவிலில் , வெங்கடநாராயணர் குடி கொண்டுள்ளார். இந்தக் கோவில் அருமையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு மங்களூரில் பப்பாஸ் ஐஸ்கிரிம் கடையில் , கட்பட்(gudbad) என்ற ஐஸ்கிரீம் மிகவும் பிரபலமாக உள்ளது. எப்போதும், கடையில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்தக் கட்பட் ஐஸ்கிரீமில், அடுக்கடுக்காக பழத்துண்டு, கொட்டைகள் போன்று பல்வேறு பொருட்களைப் போட்டு, மிகவும் சுவையாக ஐஸ்கிரீம் செய்கின்றனர்.
19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தேவாலயம், இதிலுள்ள ஓவியங்களுக்குப் பிரசித்தி பெற்றது. பொதுவாக, மற்ற தேவாலயங்களில் இல்லாதபடிக்கு, சுவரெல்லாம், ஓவியங்கள் வரையப்பட்டு, அருமையாக அமைக்கப்பட்டுள்ளது.
மங்களூர் துறைமுகத்தில் உள்ள கப்பல்களைக் கண்டுகளிக்க, மங்களூர் துறைமுகம் செல்லலாம்.