கொடைக்கானல் சிறப்பு மிக்க 10 இடங்கள் எவை?

செப்டம்பர் 27 - உலக சுற்றுலா தினம்! கொடைக்கானல் டூர் ப்ளான் போடுறீங்களா? அப்படின்னா இந்த பத்து இடங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். கண்டிப்பாக காணத்தவறாதீர்கள்.
கொடைக்கானல் சிறப்பு மிக்க 10 இடங்கள் எவை?

1. 1.கொடைக்கானல் ஏரி

கொடைக்கானல் ஏரி, 1863-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால், உருவாக்கப்பட்டது. நட்சத்திரவடிவில் இந்த ஏரியை ஆங்கிலேயர்கள் அமைத்ததால், இதற்கு நட்சத்திர ஏரி என்ற பெயரும் உண்டு.

2. 2. பசுமை பள்ளத்தாக்கு

ஆங்கிலேயர்கள் கிரீன் வேலி வியூ பாயிண்ட் என பெயர் இட்டுள்ளனர்.   தற்கொலை முனை அதாவது சூயிசைட் பாயிண்ட் என இன்னொரு பெயரும் உண்டு.  பலரும் அவ்வாறே அழைத்து வருகின்றனர்.


3. 3. வெள்ளி நீர் வீழ்ச்சி

18 -அடி உயரமான பாறையில் இருந்து நீர்வீழ்ச்சி விழுவதால் நீர் உண்மையில் வெள்ளி நிறத்தில் தெரிகிறது. இதனால் சில்வர் கேஸ்கேட் என்று பெயர் பெற்றது.  


4. 4. கோக்கர்ஸ் வாக்

1872-ஆம் ஆண்டு இந்த இடத்தை கண்டுப்பிடித்த லெப்டினென்டு கோக்கரின் பெயராலேயே இவ்விடம் அழைக்கப்படுகிறது. கொடைக்கானல் ஏரியிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரம் தொலைவில் அமைந்துள்ளது. மேகங்களின் மீது நடப்பது போன்ற உணர்வை பெறுவீர்கள்.

5. 5. குறிஞ்சி ஆண்டவர் கோயில்

கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. 12 ஆண்டிற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்கள் இந்த இடத்தில் பூத்துக் குலுங்குகின்றன.  இக்கோயில் ஸ்ரீ குறிஞ்சி ஈஸ்வரன் என்றழைக்கப்படும் முருக கடவுளுக்காக அமைக்கப்பட்ட கோயில். 1936-ஆம் வருடம் கட்டப்பட்டது.

6. 6. தூண் பாறை

கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று தூண் பாறை. தூண் பாறைகள் இடையினில் தவிழ்ந்து செல்லும் மேகக்கூட்டங்களை ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுட‌ன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்வார்கள்.

7. 7. டால்பின் நோஸ்

மிக உயரமான பாறை பகுதி இது. இயற்கையின் அழகை இங்கு அருமையாக ரசிக்கலாம். பெரியபாறை ஒன்று டால்பின் மீனின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கீழே 6600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது.

8. 8. பேரிஜம் ஏரி

இந்த அழகான ஏரி பாதுகாக்கப்பட்ட பகுதியில், ஆழமான காடுகளுக்கு பின்னால் மறைந்துள்ளது. சில சமயங்களில் வனவிலங்குகளை கூட பார்த்து ரசிக்கலாம்.

9. 9. பிரையண்ட் பூங்கா

இந்த தாவரவியல் பூங்கா நூற்றுக்கணக்கான அழகான தாவரங்கள் மற்றும் மலர்களைக் கொண்டுள்ளது. இந்த பூங்காவை பார்வையிட சிறந்த நேரம் கோடைக்காலம், மே மாதத்தில், மிகப்  பெரிய தோட்டக்கலை கண்காட்சி இடம்பெறும். என்பதும் குறிப்பிடத்தக்கது.

10. 10. பைன் காடு

சுமார் 60 முதல் 80 அடி வரை வளரக்கூடிய இந்த மரங்கள் சூரிய ஒளி புக முடியாத அளவுக்கு அடர்த்தியாக இருக்கிறது.  தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளும் இப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com