
வாழ்க்கையின் இறுதி நாட்களை 1950 ஆம் வருடத்துடன் ஒப்பிடும்போது பலரும் வெளிநாடுகளில் செலவழிக்க விரும்புகின்றனர். ஆனால் இதற்கு திட்டமிடல் மிகவும் அவசியம். International Living மாத இதழ் உலகின் சிறந்த ஓய்வு வாழ்க்கை நாடுகளை மதிப்பீடு செய்யும் Global Retirement Index பட்டியலை நாட்டின் வாழ்க்கை செலவு, மருத்துவ வசதிகள், வீட்டு வசதி, விசா நடைமுறைகள், காலநிலை மற்றும் சமூகத்தில் எளிதாக இணையும் வாய்ப்பு போன்ற அம்சங்களை அடிப்படையாக வைத்து வெளியிட்டுள்ளது. அத்தகைய நாடுகளை பற்றி இப்பதிவில் காண்போம்.
ஆயிரக்கணக்கான அழகிய தீவுகளால் சுற்றுலா பயணிகளிடையே ஏற்கனவே பிரபலமாக உள்ள நாடாகவும் ,நிரந்தரமாக குடியேற விரும்புவோருக்கு அனைத்து வசதிகளையும் வழங்கும் நாடாகவும் கிரீஸ் இருப்பதாக இன்டர்நேஷனல் லிவிங் குறிப்பிடுகிறது. வெளிநாட்டினர் குறைந்தபட்சம் 2,50,000 (சுமார் 2.9 லட்சம் அமெரிக்க டாலர்) மதிப்பிற்கு நிலம் அல்லது வீடு வைத்திருந்தாலே குடியிருப்பிற்கு அனுமதி வழங்கும் கோல்டன் விசாவை எளிதாக இந்த நாட்டில் பெறலாம். மேலும் இங்கு இதமான கால நிலையும், மருத்துவ வசதிகளும் வீட்டு வசதிகளும் உயர்வாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஓய்வு பெற்றவர்களை நீண்ட காலமாக ஈர்த்து வரும் பனாமா வாழ்க்கையின் ஓய்வு நாட்களை கழிக்க விரும்பும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இந்த நாடு Pensionado Program மூலம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு 50%, போக்குவரத்துக்கு 30% விமான கட்டணத்தில் 25% மருத்துவ செலவுகளில் 15% தள்ளுபடியோடு, மின்சாரம் முதல் உணவக செலவுகள் வரை பல்வேறு சலுகைகளையும் வழங்குகிறது.
இங்கு அமெரிக்காவிற்கு இணையானதாக மருத்துவ சேவையின் தரம் இருந்தாலும் செலவு மிகவும் குறைவாக இருப்பதாக International Living அறிக்கை தெரிவிக்கிறது. மியாமியில் 30,000 டாலராக இருக்கும் மருத்துவச் செலவு பனாமாவில் சுமார் 3,200 டாலரிலேயே CT ஸ்கேன் மற்றும் மருந்துகளோடு சேர்ந்து முடிவடையும்.
மொத்த நிலப்பரப்பில் சுமார் 25 % பகுதி பாதுகாக்கப்பட்ட மழைக்காடுகளைக் கொண்டுள்ள கோஸ்டாரிகா சுற்றுச்சூழல் பாதுகாப்பை மிகவும் முக்கியமாக கருதுவதால் உலகிலேயே ஓய்வெடுக்க சிறந்த நாடுகளின் வரிசையில் இடம் பிடித்துள்ளது. இங்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் 99 % மின்சார உற்பத்தி பெறப்படுவதோடு, அழிந்த காடுகளை மாற்றி மீண்டும் காடுகளை வளர்த்த மிகச் சில நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. சுமார் 10,000 தாவர இனங்களும் 850 வகையான பறவைகளும் தற்போது வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் ஓய்வெடுக்க விரும்பும் நாடுகளின் பட்டியலில் அடுத்தடுத்து போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளும் இடம் பெற்றிருந்தாலும் தாய் நாடான இந்தியாவே இந்தியர் அனைவருக்கும் முதல் சாய்ஸ் ஆக இருக்கவேண்டும்.