
பொதுவாகவே மக்கள் சுற்றுலா செல்வதை அதிகமாக விரும்புவார்கள். சுற்றுலா தலம் என்றாலே நமக்கு முதலில் கண்ணுக்கு தெரிவது ஊட்டியும், கொடைக்கானலும் தான். ஏனென்றால் அங்குதான் எப்போதும் ஜில்லென்ற உணர்வு ஏற்படுகிறது. ஊட்டியை சுற்றி பார்க்க நினைப்பவர்கள் நிச்சயம் மசினகுடி செல்ல வேண்டும் என நினைப்பார்கள். மசினகுடியில் வெறும் யானையை மட்டும் தானே பார்க்க வேண்டும் என பலரும் விரும்புவீர்கள். ஆனால் மசினகுடியில் சுற்றி பார்க்க பல இடங்கள் உள்ளது. மசினகுடியில் உள்ள பேமஸான இடங்களை பார்த்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும். என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க..
மசினகுடியில் மிஸ் செய்யக்கூடாத விஷயம் ஜங்கிள் ரைடு. மொத்த காடுகளை இந்த ஜங்கிள் ரைடில் சுற்றி பார்க்கலாம். இதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காடுகள், மலைகள் நிறைந்த மசினகுடி ட்ரெக்கிங் செல்ல ஏற்ற இடமாகவும் உள்ளது. தகுந்த பாதுகாப்புகளுடன் இங்கு ட்ரெக்கிங் செல்ல முடியும். மசினகுடியில் இருக்கும் தெப்பாக்காடு யானைகள் முகாம் மிகவும் முக்கியமான ஸ்பாட். யானைகளை குளிக்க வைக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது.
இங்கு இருக்கும் தேயிலை தோட்ட எஸ்டேட்டுகளி பார்வையிடவும் அனுமதி உண்டு. அதே போல் டீ தூள் தயாரிப்பு முறைகளையும் அருகில் இருந்து பார்க்கலாம். மசினகுடியில் இருக்கும் கோபாலசுவாமி பெட்டா கோவில் மிகவும் புகழ்பெற்ற இடமாகும். மசினகுடியில் வரும் சுற்றுலா வாசிகள் கட்டாயம் இந்த கோயிலுக்கு செல்வார்கள்.