சென்னையிலிருந்து அந்தமான்! கடல்வழி பயணம்...!

அந்தமான்
அந்தமான்

‘சென்னையிலிருந்து அந்தமான் மிகவும் தூரம்’. ‘அதுவும் பயணக் கட்டணம் மிக மிக அதிகம்’ போன்ற பல யோசனைகள் அந்தமான் பயணம் என்று பெயரெடுத்தாலே வரும். ஆனால் உண்மையில் அப்படியில்லை. இனி அனைவரும் அந்தமான் செல்லலாம். கடல் அலைகளை ரசிக்க கட்டணத்திற்கு கவலைப்படுவதா? சென்னையிலிருந்து கடலை ரசித்துக்கொண்டே அந்தமான் செல்ல கிட்டத்தட்ட 60 மணி நேரம் ஆகும். கப்பல் பயணத்திற்கு முன்பதிவு செய்துக்கொள்வது நல்லது. முன்பதிவு செய்யாமலும் செல்லலாம் , ஆனால் அது  சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தும்.

சென்னையிலிருந்து அந்தமானுக்கு செல்லும் கப்பல் நேரங்கள்:

1. MV Nancowry

MV Nancowry
MV Nancowrywww.shipspotting.com

ந்த கப்பலில் செல்ல 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை கட்டணமாகும். கப்பல் சென்னையிலிருந்து திங்கட்கிழமை காலை 10 மணிக்கு  புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அந்தமான் கடற்கரைக்கு சென்றுவிடும்.

2. MV Swarajdweep

MV Swarajdweep
MV Swarajdweepwww.marinetraffic.com

ந்த கப்பல் சென்னையிலிருந்து புதன்கிழமை காலை 11 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அந்தமான் தீவின் கடற்கரைக்கு சென்றுவிடும். இந்த கப்பலில் ஒரு நபருக்கு 10,240 முதல் 12,000 வரை கட்டணம்.

3. MV Campbell Bay

MV Campbell Bay
MV Campbell Baywww.vesselfinder.com

ந்த கப்பலின் கட்டணம் 13,730 முதல் 15,000 வரை இருக்கும். இந்த கப்பல் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்குப் புறப்பட்டு செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிக்கு அந்தமான் தீவுக்கு சென்றுவிடும்.

4. MV Nicobar

MV Nicobar
MV Nicobarandamanholidays.com

தற்கான கட்டணம் 8,500 முதல் 10,000 வரையாகும். சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்கிழமை மதியம் 3 மணிக்கு சென்றுவிடும்.

5. MV Akbar

MV Akbar
MV Akbar

ந்த கப்பலில் ஒருவர் பயணிக்க 12,000 முதல் 13,000 ரூபாய் கட்டணமாகும். சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு புறப்பட்டு அந்தமான் கரைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சென்றுவிடும்.

6. MV Harsdhavardhan

MV Harsdhavardhan
MV Harsdhavardhanwww.marinetraffic.com

சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்குப் புறப்பட்டு அந்தமான் கரைக்கு திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு சென்றுவிடும். இந்த கப்பலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 9,000 முதல் 10,500 வரை கட்டணமாகும்.

7. MV Sindhu

MV Sindhu
MV Sindhuwww.andamansheekha.com/

து சென்னையிலிருந்து சனிக்கிழமை இரவு 9 மணிக்கு புறப்பட்டு அந்தமானுக்கு புதன்கிழமை இரவு 9 மணிக்கு சென்று விடும். இதற்கான கட்டணம் 7,500 முதல் 9,000 வரையாகும்.

8. MV Nalanda

MV Nalanda
MV Nalandawww.andamansheekha.com/

ந்த கப்பல் சென்னையிலிருந்து திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு அந்தமான் சென்றுவிடும். இதற்கான கட்டணம் 6,500 முதல் 8,000 வரையாகும்.

பதிவு செய்யும் வழிமுறைகள்:

1. முதலில் Shipping Corporation of India (SCI) என்ற வலைத்தளத்திற்குள் செல்லவும்.

2.  Book Tickets என்ற பதிவை க்ளிக் செய்யவும்.

3.  பயணத்தின் விளக்கங்களை அளிக்க வேண்டும். அதாவது எந்த கப்பல், எத்தனை மணி, எவ்வளவு கட்டணம் ஆகிய கேள்விகளுக்கு விடை அளிக்கவும்.

4.  பின் எந்த ரகமான பயணம் மேற்கொள்ள போகிறீர்கள் என்று பதிவிடவும். (High or Low class)

5.  அனைத்தையும் ஒருமுறை சரி பார்த்துக்கொள்ளவும்.

6.  கட்டணம் செலுத்திவிட்டு ரசீதை பெற்றுக்கொள்ளவும். அந்த ரசீதை ப்ரின்ட் எடுத்து பத்திரமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com