சேலத்துக்கு போறீங்களா? இதோ அசத்தலான டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்!

Tourist spots
Tourist spotsIntel

விடுமுறை விட்டாலே போதும் எங்கேயாவது கிளம்பலாமா என்ற எண்ணம் வந்துவிடும். தற்போது இருக்கும் நெருக்கடியான சூழலில், கடினமாக வேலை பளுவில் வெளியில் சென்று வந்தால் தான் நிம்மதியாகவே இருக்கும். ஆனால் எங்கே போவது என்று தானே யோசித்து கொண்டிருக்கிறீர்கள். உடனே போங்க சேலத்திற்கு.

சேலம் ஒரு அழகிய டூரிஸ்ட் ஸ்பாட்டாகும். வெயிலுக்கு இதமாக ஆங்காங்கே குளுமையான இடங்களை சுற்றி பார்த்தால் கண்களுக்கு மட்டுமில்லை, மனதிற்கும் இனிமையாகவே இருக்கும். அப்படி சேலத்தில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலை பார்க்கலாம்.

ஏற்காடு

சேலம் மாவட்டத்தில் உள்ள எழில் மிகுந்த மலைப்பகுதிதான் ஏற்காடு. சேலம் செல்பவர்கள் ஏற்காடு மலை ஏறாமல் ஊர் திரும்ப மாட்டார்கள். ஆகஸ்ட் மாதம் முதல் இங்கு குளிரும் பனியும் வாட்டி வதைக்கும். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இந்த ஊரில் ஏகப்பட்ட சுற்றுலா ஸ்பாட்டுகள் உள்ளன.

நாமக்கல்

பல சிறப்புகளுக்கு பெயர் போன நாமக்கல் இயற்கை எழில் கொஞ்சும் நகரம் ஆகும். இங்குள்ள ஆஞ்சனேயர் கோவில் தொடங்கி மலை ஏறுதல், குடிசை உணவு, அணைக்கட்டு என ரசித்து பார்க்க பல ஸ்பெஷல் ஸ்பார்ர்டுகள் உள்ளன.

சேர்வராயன் கோவில்

சேலத்தில் உள்ள சேர்வராயன் கோவில் புகழ் பெற்ற ஒன்றாகும் இங்கு வரும் மக்கள், இந்த கோயிலில் நடைபெறும் திருவிழாவிலும் கலந்து கொள்கின்றனர். மே மாதத்தில் இங்கு நடைபெறும் திருவிழா மிகவும் வித்தியாசனமானது.

ஒகேனக்கல்

சேலம் சுற்றுலாவில் மிக மிக முக்கியமான ஸ்பாட் ஓகேனக்கல் சேலத்திலிருந்து 114 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூரிலிருந்து 133 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள இந்த ஒகேனக்கல் மிகச் சிறப்பு வாய்ந்த சுற்றுலா ஸ்தலமாகும். சீசன் டைமில் இங்கு மக்களின் கூட்டம் அலைமோதும். தொங்கும் பாலம் தொடங்கி படிசல் சவாரி, ஆயில் மசாஜ் என இங்கு ரசிக்க பல விஷயங்கள் உள்ளன.

மேட்டூர்

1934 ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த மேட்டூர் அணையின் நீளம் 1700 மீட்டராகும். இதை பார்க்க பல மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகை தருகின்றனர். சேலம் செல்பவர்கள் கட்டாயம் இந்த இடங்களை மிஸ் செய்யக்கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com