இலங்கைக்கு சுற்றுலா செல்லும்போது, கட்டாயம் இந்த இடங்களைச் சென்று பாருங்கள்!

இலங்கைக்கு சுற்றுலா செல்லும்போது
இலங்கைக்கு சுற்றுலா செல்லும்போது

உங்களுக்காக ஒரு ஐந்து நாள் ஒதுக்கி இலங்கை சுற்றுலா மேற்கொள்ளுங்கள். ஆம்! இலங்கையில் நாம் சஃபாரி செய்ய கடற்கரைகளும் தியானம் செய்ய கோயில்களும் பல உயிரினங்களை பார்த்து ரசிக்க எண்ணற்ற மிருகங்களும் உள்ளன. அவை அனைத்திற்கும் ஒரு ஐந்து நாள் நிச்சயம் போதும். மேலும், இலங்கையை சுற்றிப்பார்ப்பதற்கு ஜனவரி முதல் மார்ச் மாதங்களில் செல்லலாம்.

1. கண்டி

கண்டி
கண்டி

முதல் நாள் முழுவதும் கண்டி சென்று சுற்றிப்பார்க்கலாம். இதற்கு இலங்கையின் கலாசார தலைநகரம் என்று UNESCOவே பெயரிட்டது. இந்த இடம் ஒரு நாள் மட்டும் அல்ல ஐந்து நாட்களுமே சுற்றிப் பார்க்க ஏற்ற இடம்தான். இங்கிருக்கும் காடுகளில் பல வகையான மிருகங்களைப் பார்க்கலாம். அதேபோல் காண்டியில் போகம்பர ஏரி, பின்னவாலா யானை சத்திரம், ராயல் பொட்டானிக்கல் கார்டன், பஹிரவக்காண்டா கோயில், நியூ ரான்வெலி ஸ்பைஸ் பூங்கா மற்றும் தேநீர் அருங்காட்சியகம் ஆகியவற்றைப் பார்க்கலாம்.

2. பென்டோட்டா

பென்டோட்டா
பென்டோட்டா

டற்கரைகளை விரும்புவர்கள் கட்டாயம் இரண்டாம் நாள் முழுவதும் பென்டோட்டா நகரம் செல்வதற்கு ஒதுக்கிக்கொள்ளுங்கள். இது இலங்கையில் கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய ஓர் இடம். பென்டோட்டாவில் கோஸ்கோடா ஆமை பாதுக்காப்பு மையம், சேப்லான் தேநீர் மையம், ப்ரீஃப் பூங்கா, கலபத்தா ராஜமஹா விஹாரே புத்தர் கோயில் ஆகிய இடங்களுக்குச் செல்லலாம்.

3. கொலம்போ

கொலம்போ
கொலம்போ

லங்கையில் மிகவும் அழகான ஒரு இடமென்றால் அது இலங்கையின் தலைநகரம் ’கொலம்போ’ தான். முன்னோர் காலத்தில் கொலம்போவில் டச்சு, போர்ச்சுகள், பிரிட்டிஷ் ஆகியோர் ஆட்சிப் புரிந்ததால் இங்கு  பலதரப்பட்ட கலாசாரங்களைக் காண முடியும். இங்கு நீங்கள் கல்லீ ஃபேஸ் க்ரீன், கங்கராமாயா கோயில், பெய்ரா ஏரி மற்றும் தெஹிவாலா உயிரியல் பூங்கா ஆகிய இடங்களுக்குச் செல்லலாம்.

4. திருகோணமலை

திருகோணமலை
திருகோணமலை

நீர் விளையாட்டுகளை அதிகம் விரும்புபவர்கள் நிச்சயம் இந்த இடத்திற்குச் செல்லலாம். ஸ்கூபா டைவிங்கிலிருந்து பழங்கால கோயில்கள் வரை இங்கு பார்க்க அதிகம் உள்ளன. மேலும் கேனேஷ்வர கோயில், ஃப்ரெடெரிக் கோட்டை, பத்திரக்காளி அம்மன் கோயில், மார்பில் பீச், திருக்கோணமலை பீச் ஆகியவைப் பார்க்கலாம். ஆகையால் அந்த ஐந்து நாட்களில் கடற்கரை பிரியர்கள் இந்த இடத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த ஐந்து நாள் பயணம் இல்லாமல் இலங்கையில் கூடுதலாகப் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றிப் பார்ப்போம்.

5. பட்டிக்கோலா

பட்டிக்கோலா
பட்டிக்கோலா

ந்த இடம் கடற்கரைகள், அழகான மற்றும் கலை மிகுந்த கட்டிடங்கள் நிரம்பிய இடம். இந்த இடத்திற்கே சென்றாலே ஒரு அமைதியும் புத்துணர்வும் கிடைக்கும். இங்கு ஒருநாள் பயணம் மேற்கொள்ளலாம்.

6. ஜஃப்னா

ஜஃப்னா
ஜஃப்னா

ந்த இடம் கலாசாரமும் பக்தி மையமும் நிறைந்த இடம். இங்குள்ள இயற்கையை ரசிக்க ஒருநாள் பத்தாது என்றே கூறலாம்.

7. உனவடுனா

உனவடுனா
உனவடுனா

இது கடற்கரைகள் நிறைந்த இடமென்றாலும் அதிக மக்கள் வராத இடம். ஆகையால் மிகவும் அமைதியாக இருக்கும். பனை மரங்கள், தங்க மணல்கள், நீல நிறத்தில் கடல்நீர் என இயற்கையின் அற்புத அழகைப் பார்த்து அமைதியாக ரசிக்கலாம். மேலும், தலவாலா பீச், ஜப்பானிஸ் அமைதி பகோதா, ஜங்கில் பீச், ரம்சாலா சரணாலயம், யத்தகாலா ராஜமஹா விஹாராயா, மிஹிரிபென்னா பீச், கடலாமை பாதுகாப்பு மையம் ஆகிய இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம்.

8. திஸ்ஸமஹாராம

திஸ்ஸமஹாராம
திஸ்ஸமஹாராம

ங்குள்ள கட்டடகலைகள் கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் பழமையானவை. இங்கு திஸ்ஸா ஏரி, யாதலா விஹாராவின் வெள்ளை ஸ்டூபா, விர்வாலா திஸ்ஸா சரணாலயம், மற்றும் யோதா ஏரி ஆகியவற்றைப் பார்க்கலாம்.

9. கல்லே

கல்லே
கல்லே

ங்கு நீங்கள் கல்லே டச்சு கோட்டை, தேசிய மாரிடைம் அருங்காட்சியகம், லைட்ஹவுஸ் தெரு ஆகியவற்றைச் சுற்றிப்பார்க்க சிறந்த இடம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com