மறக்க முடியாத பயணம் அனுபவம் வேண்டுமா? அப்படியானால் 'பெரு' நாட்டிற்கு செல்லுங்கள்!

Peru
Peru

தென் அமெரிக்காவிற்கு அருகில் உள்ள புகழ்பெற்ற Peru நாட்டில் பார்ப்பதற்கு பலவகையான இடங்கள் கண்கவர் வகையில் உள்ளன. மேலும் இங்கு வளமான கலாச்சாரத்தையும் மாறுபட்ட சூழ்நிலைகளையும் தனித்துவமான உணவுவகைகளையும் நீங்கள் பார்க்கலாம். அந்தவகையில் பெருவிற்கு சென்றால் கட்டாயம் இந்த இடத்திற்கெல்லாம் செல்லுங்கள்.

மச்சு பிச்சு:

உலகின் மிகவும் பிரபலமான இந்த இடம், தொல்பொருள் தலங்களிலும் மிகவும் புகழ்பெற்றதாகும். இது ஆண்டிஸ் மலைகளில் உள்ள உயரமான இன்கான் பேரரசின் நகரமாகும். இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாகவும் உள்ளது. மேலும் இங்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகின்றனர்.

குஸ்கோ:

இன்கான் பேரரசின் வரலாற்று தலைநகரமான குஸ்கோ கட்டடக்கலையில் சிறந்து விளங்கும் ஒரு இடமாகும். இது மச்சு பிச்சுவிற்கான நுழைவாயிலாக செயல்படுகிறது மற்றும் ஸ்பானிஷ் கலவைகளின் கட்டடக்லைகளையும் இங்கு நீங்கள் பார்க்கலாம்.

லிமா:

பெருவின் தலைநகரமான லிமா, பெருவின் வரலாற்று உணவுகளுக்கும் நவீன உணவுகளுக்கும் பெயர் போனது. லிமா, மிராஃப்ளோரேஸ் மற்றும் பாரங்கோவின் ஆகிய இடங்கள் வரலாற்று சிறப்புகளில் தனித்துவம் கொண்டவை. ஆகையால் இந்த மூன்றையும் நீங்கள் கண்டிப்பாக பார்த்து ரசிக்கலாம்.

அரேகிபா:

இங்குள்ள கட்டடங்கள் வெள்ளை எரிமலை கற்களைப் பயன்படுத்தியே கட்டப்பட்டிருக்கும். ஆகையால் இதனை ‘வெள்ளை நகரம்’ என்றும் அழைப்பார்கள். இங்கு 'சாண்டா கேடலினோ மடலாயம்' மற்றும் 'கோல்கா கேன்யன்' ஆகியவை மிகவும் பிரபலமான இடங்களாகும்.

டிடிகாக்கா ஏரி:

பெருவிற்கும் பொலிவியாவிற்கும் எல்லையில் உள்ள இந்த ஏரி உலகின் மிக அதிக தூர அளவு பயணிக்கக்கூடிய ஒரு ஏரியாகும். மேலும் இந்த ஏரியில் தனித்துவமான கலாச்சாரத்தால் நம்மை ஆட்கொள்ளும் உரோஸ் தீவு மற்றும் டாகுயில் தீவு ஆகியவை உள்ளன.

நாஸ்கா கோடுகள்:

நாஸ்கா பாலைவனத்தில் அமைந்துள்ள இந்த ஜியோ மலையில் பல்வேறு விலங்குகள் மற்றும் நிலத்தில் வடிவமைக்கப்பட்ட மகத்தான அரிய வடிவமைப்புகளையும் நீங்கள் அதிகம் காணலாம். இங்கு சிறிய விமானம் மூலமும் சென்று மேலிருந்து அந்த இடத்தைப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
வேலன்டைன்ஸ் டேக்கு விசிட் பண்ணவேண்டிய இடங்கள்!
Peru

Huacachina:

இது பாலைவனத்தில் அமைந்துள்ள உள்ள ஒரு சிறு சோலைவனமாகும். இந்த வனத்தில் ஒரு அழகான குளமும் உள்ளது. அங்கு நீங்கள் ஓய்வெடுத்துக்கொண்டு பாலைவனத்தின் அழகையும் ரசிக்கலாம்.

இந்த இடங்களுக்கு சென்றப்பின் இன்காக்களின் புனித பள்ளத்தாக்கு, மனு தேசிய பூங்கா, கோல்கா கேன்யன் போன்ற இடங்களுக்கும் செல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com