

அகமதாபாத் குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய பாரம்பரியமிக்க நகரமாகும். பழமையும் புதுமையும் நிறைந்த பொக்கிஷமாக கருதப்படுகிறது. கலாச்சார மையங்களை கொண்டுள்ளது.
சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இந்த அகமதாபாத். 1411 இல் சுல்தான் அகமது ஷா என்பவரால் நிறுவப்பட்டது முக்கிய வர்த்தமாக செயல்பட்டு வருகிறது.
பாய் ஹரின் வாவ்
1499இல் கட்டப்பட்ட பழமையான படிக்கிணறுகள் உள்ள இடமாகும் செழுமைக்கும் வளமைக்கும் பெயர் பெற்றது. அகமதாபாத் குஜராத் தலைநகரமாக இருந்தது பின்னர் காந்திநகர் என மாற்றம் செய்யப்பட்டது. இங்கு நிறைய கலாச்சார மையங்கள் ஷாப்பிங் மால்கள் அருங்காட்சியகங்கள் கோவில்கள் ஆகியன அழகுற அமைந்துள்ளது.
சபர்மதி ஆசிரமம்
சபர்மதி ஆசிரமம் சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய இடமாகும். மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு நினைவுச் சின்னங்கள் கலைப்பொருட்கள் ஓவியங்கள் புகைப்படங்கள் நூலகங்கள் என இதில் அடங்கியுள்ளது. காந்தியும் கஸ்தூரிபா காந்தியும் 12 ஆண்டுகள் இந்த ஆசிரமத்தில் தங்கியிருந்தனர்.
சன்செட் டிரைவ் திரைப்படங்கள்
இது ஒரு டிரைவ் இன் தியேட்டர் ஆகும். சமீபத்திய பிளாக்பஸ்டர் படங்கள் பெரிய திரைகளில் திரையிடப்படுகிறது. ஒவ்வொரு வாகனத்திலும் ஒலி கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவின் புதுமையான அனுபவமாக கருதப்படுகிறது.
ஆட்டோ வேர்ல்ட் கார் மியூசியம்
ஆட்டோ வேர்ல்ட் விண்டேஜ் கார் மியூசியம் பார்க்க தகுந்த இடமாகும். இந்த இடத்தில் இல்லாத கார்களே இல்லை எனலாம். ரோல்ஸ் ராய்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் கெடிலாக் பே கார்டு லிங்கன் மே பேக் போன்ற விதவிதமான கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. பழங்கால கார்களில் சவாரி செய்வது புதிய அனுபவமாக இருக்கும்.
கண்காரியா ஏரி
இந்த ஏரி அழகிய சூழ்நிலையில் அமைந்துள்ளது சிறப்பானதாகும். இந்த இடத்தை சுற்றி வனவிலங்கு சரணாலயம் கிட்ஸ் சிட்டி பூங்கா தியேட்டர் ஐஸ்கிரீம் தொழிற்சாலை என நிறைய பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இடமாகும். இந்த ஏரியில் படகு சவாரி செய்வது சிறப்பாக உள்ளது. இந்த இடத்தில் பாரம்பரிய கொண்டாட்டம் நடைபெறுகிறது. கர்பா நடனம் தாண்டியா நடனம் ஆகியவை இந்த மைதானத்தில் நடைபெறும்.
ஜமா மஸ்ஜித்
15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அகமதாபாத் நகரின் முதன்மை சின்னமாக உள்ளது. கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது கலை அழகு மிக்கது. அக்கால அரசர்களின் கல்லறை உள்ள பகுதியாகும்.
லா கார்டனின் இரவு சந்தை
இந்தச் சந்தையில் குஜராத் ஆடைகள் அணிகலன்கள் கைவினைப் பொருட்கள் நகைகள் வாங்குவதற்கு சிறந்த இடமாகும். ஷாப்பிங் சொர்க்கம் என அழைக்கப்படுகிறது. நிறைய அலங்கார பொருட்கள் வகை வகையாக கிடைக்கும். இந்த சந்தையில் நிறைய உணவு சிற்றுண்டிகள் உள்ளது.
மானக் சவுக்கு
குஜராத்தில் பாரம்பரிய உணவுகள் கிடைக்கும் பகுதியாகும். இங்கு சாப்பிடுவது சுவையான அனுபவமாக இருக்கும். இங்குள்ள அனைத்து தெருக்களிலும் தரமான சுவையான உணவுகள் கிடைக்கும். சைவ உணவிற்கு மிகச்சிறந்த இடமாகும்
அடாலஜி டெப் வெல்
இது ஐந்து அடுக்கு கொண்ட கிணற்று பகுதியாகும். கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
கிணற்றின் ஒவ்வொரு மூலையிலும் பாரசீக மலர் வடிவங்களை கொண்டது. 15 ஆம் நூற்றாண்டில் குடிநீருக்காக கட்டப்பட்ட கிணற்று பகுதியாகும். தற்போது ஆன்மீக செயல்பாட்டிற்கு உகந்த இடமாக உள்ளது. இதன் உள்பகுதி மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.
அக்ஷர்தாம் கோவில்
காந்தி நகரில் உள்ள அக்ஷர்தாம் கோவில் பார்க்க வண்டிய இடமாகும். கடவுளின் தெய்வீக இருப்பிடம் என பொருள் படும். சுவாமி நாராயணருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இங்குள்ள நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலம். நீர்வீழ்ச்சி லைட்ஷோ கண்ணை கவரும் விதத்தில் உள்ளது.
ஜான் சாரி நீர்வீழ்ச்சி
குஜராத் மாநிலத்தின் மிகவும் பிரபலமான நீர்வீழ்ச்சியாக உள்ளது. சுமார் 25 அடி உயரம் கொண்டது. சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமாக உள்ளது சிறப்பானதாகும். இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பது சுகமான அனுபவமாக இருக்கும். இந்த இடத்தில் நிறைய சிற்றுண்டி மையங்கள் உள்ளது.
குஜராத் அறிவியல் நகரம்
இங்குள்ள சயின்டிபிக் சிட்டி பார்க்க வேண்டிய இடமாகும். ஆடியோ விஷுவல் தொழில்நுட்பத்தை பயன் படுத்துகிறார்கள். 3டி தியேட்டர் நீரூற்றுகள் இசை பூங்கா அறிவியல் பூங்கா ஆம்பி தியேட்டர்
ஆகியவை அடங்கிய பகுதியாகும். சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடங்களில் இதுவும் ஒன்று. இந்த இடம் அறுகோண வடிவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது சிறப்பாக உள்ளது.
ஹதீஸ் சிங் ஜெயின் கோவில்
இந்தக் கோவில் முழுவதும் வெள்ளை நிற பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது கண்ணை கவரும் விதத்தில் அமைந்துள்ளது. 1848 ல் கட்டப்பட்ட கோவில் ஆகும். அந்தகாலத்தில் 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பளிங்கு கோவில். இதில் 52 சிறிய ஆலயங்கள் உள்ளது.
கடல் விமான சவாரி
கடல் நீரில் விமானத்தில் பயணம் செய்வது இறங்குவது புதிய அனுபவமாக இருக்கும். கடலில் பறந்து 30 நிமிடத்தில் கேவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையை காணலாம். இந்த நீர்வழி விமானத்தில் 15 பேர் பயணம் செய்யலாம்.
2017-இல் அகமதாபாத் நகரம் யுனஸ்கோவின் பாரம்பரிய நகரம் என அறிவிக்கப்பட்டது. மேலே கண்ட இடங்களை சுற்றிப் பார்ப்பது சிறந்த அனுபவமாக இருக்கும்.