இந்தியர்கள் விசா இல்லாமல் எந்தெந்த நாடுகளுக்கு செல்லலாம்?

இந்தியர்கள் விசா இல்லாமல் எந்தெந்த நாடுகளுக்கு செல்லலாம்?
Published on

வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே உடனடியாக பாஸ்போர்ட் விசா தான் நியாபகம் வரும். பாஸ்போர்ட் எளிதில் கிடைத்துவிடும். ஆனால் விசா கிடைப்பது சற்று கடினம் தான். ஆனால் பலர் வெளிநாடுகளுக்கு செல்ல ஆசையுடன் இருப்பார்கள்.

இந்த பதிவில் விசா இல்லாமல் இந்தியர்கள் எந்த நாடுகளுக்கு செல்லலாம் என பார்க்கலாம். விசா பற்றிய கவலையும் இல்லை, வெளிநாடுகளுக்கு சென்ற ஆசையும் நிறைவேறும்.

பூட்டான்:

பூட்டானுக்குச் செல்ல விரும்பும் இந்தியப் பயணிகள் இப்போது விசா தொந்தரவு இல்லாமல் செல்ல முடியும். இதற்காக என்ன செய்ய வேண்டும் என்றால், செல்லுபடியாகும் ஏதேனும் ஒரு பயண ஆவணத்தை கையோடு கொண்டு செல்ல வேண்டும். இதில் முதலாவது குறைந்தபட்சம் 6 செல்லுபடி மாதங்கள் கொண்ட இந்திய பாஸ்போர்ட். மற்றொன்று இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டை.

மாலத்தீவுகள் (VOA):

இந்த அழகியா தீவு நாடு இந்தியப் பயணிகளுக்கு VOA-வை (Visa on Arrival) இலவசமாக வழங்குகிறது. மாலத்தீவில் இந்தியர்களுக்கான ஆன்-அரைவல் டூரிஸ்ட் விசாக்கள், வரும் நாளிலிருந்து 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும், இது 90 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்தோனேஷியா:

அழகான நாடான இந்தோனேஷியாவிற்கு இந்தியப் பயணிகள் விசா இல்லாமல் செல்லலாம். ஆனால் உங்கள் பயண காலம் 30 நாட்களுக்குள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இமிக்ரேஷன் கவுண்டரில் விசா விலக்கு முத்திரையை (visa exemption stamp) பெற வேண்டும். இந்தோனேஷியாவில் 30 நாட்களுக்கு மேல் சுற்றுப்பயணம் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் அங்கு நுழையும் போது VOA-க்கு விண்ணப்பிக்கலாம்.

மகாவ்:

30 நாட்கள் மட்டுமே பயணம் செய்யத் திட்டமிடும் இந்தியப் பயணிகளுக்கு மகாவ் நாட்டிற்குச் செல்ல விசா தேவையில்லை. இந்நாட்டில் நுழையும் ஒருவர் நுழையும் தேதியில் குறைந்தது 6 மாதங்களுக்குச் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும்.

இலங்கை (VOA):

இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால் இலங்கை செல்லும் போது VOA பெற்றுக் கொள்ளலாம். எனினும் ஆவணத்தைப் பெற ஒருவர் நாட்டிற்குச் செல்லும் முன் இலங்கையின் Electronic Travel Authorisation-ல் (ETA) விண்ணப்பிக்க வேண்டும்.

தாய்லாந்து (VOA):

சுற்றுலா நோக்கங்களுக்காகத் தாய்லாந்து செல்லும் இந்தியர்கள் விசா ஆன் அரைவல் திட்டத்தின் கீழ் தாய்லாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் குறைந்தது 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை ஒருவர் வைத்திருக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com