உலகின் தூய்மையான காற்று வீசும் நகரம்: ஆஸ்திரேலியாவின் டஸ்மேனியா!

Tasmania
Tasmania
Published on

லகில் எத்தனையோ நாடுகள் இருக்கிறது. அதில் பல நகரங்கள் உள்ளன. ஆனால் இப்படி வித்தியாசமான நகரங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீறீர்களா?

சுத்தமான காற்று வீசும் நகரம்: ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த தீவு மாநிலம், டஸ்மேனியா. இம்மாநிலத்தின் வடமேற்கு முனையில் உள்ள தீபகற்ப பகுதி, கேப் க்ரிம் நகரம். இது "உலகின் முனை" (Edge of World) எனவும் அழைக்கப்படுகிறது.

அண்டார்டிகாவிலிருந்து எவ்விதத்திலும் அசுத்தமாகாத வேகமான காற்று, மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இங்கு வந்து சேருகிறது. உலகின் பிற பகுதிகளிலிருந்து தொலைதூரம் இருப்பதாலும், சுற்றுலா பயணிகள் அறவே செல்லாத இடமென்பதாலும், பனிமலைகள் நிறைந்த தெற்கு கடற்பகுதியின் மீது பயணித்து வரும் காற்று இங்கு வந்தடைவதாலும், இங்குள்ள காற்று உலகிலேயே தூய்மையானது என காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.

இந்த நகரில் எல்லாம் இரண்டு:  ஐரோப்பிய நாட்டில் உள்ள ஒரு நகரம் தான் பார்லே. இது பெல்ஜியம் மற்றும் ஹாலந்துக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் அழகாக விளங்கும் இங்கே  “நஸ்ஸாவ்” என்ற ஒரு பகுதி நெதர்லாந்து நாட்டில் அமைந்துள்ளது.மறுபாதி பெல்ஜியம் நாட்டில் அமைந்துள்ளது. பார்லே  நகரத்தில் கிட்டத்தட்ட 8,000 மக்கள் வசிக்கின்றனர். தெளிவாக சொல்லப்போனால் பெல்ஜியமின் 22 பகுதிகள் நெதர்லாந்தில் இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் நெதர்லாந்தின் 7 பகுதிகளும் பெல்ஜியமில் உள்ளன. இந்த நகரத்தில் எல்லாமே இரண்டாக இருக்கும். அதவாது, 2 விதமான காவல் படைகள், 2 தேவாலயங்கள், 2 அஞ்சல் நிலையங்கள், 2 மேயர்கள் என அனைத்துமே இந்நகரத்தில் இரண்டாக இருக்கும். மேலும் இந்த நகரத்தில் இருக்கும் சில வீடுகள் கூட இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன.

தீப்பிடிக்காத நகரம்: உலகிலேயே எளிதில் தீப் பிடிக்காத நகரம் என்ற சிறப்பை தென் அமெரிக்கா நாடான பொலிவியாவின் தலைநகரான லா பாஸ் பெறுகிறது.. உலகிலேயே கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் அதாவது சுமார் 4000 மீட்டர் உயரத்தில் இந்நகரம் அமைந்துள்ளதால் இங்கு பிராணவாயு குறைவாக காணப்படுகிறது. இதனால் இங்கு நெருப்பு எளிதில் பற்றிக் கொள்வதில்லை.

பாவங்களின் நகரம்: உலகிலேயே அதிக பாலங்கள் உள்ள நகரம் ஜெர்மன் நாட்டின் ஹாம்பர்க் நகரம் தான். இங்கு திரும்பிய பக்கமெல்லாம் பாலங்களை காணலாம். இங்கு 2500 க்கும் மேற்பட்ட பாலங்கள் உள்ளன. இந்த பாலங்களுக்கு பல உலக தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. அதில் இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பெயரும் ஒன்று.

Whittier
Whittier

ஒரே கட்டிடத்தில் ஒரு நகரம் :  அமெரிக்காவின் அலஸ்கா (Alaska) மாநிலத்தில் உள்ள ஒரு முழு நகரமே ஒரே கட்டிடத்தில் வசிக்கிறது. விட்டியர் (Whittier) என அழைக்கப்படும் இந்த நகரத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒரே கட்டிடத்தில் வசிக்கின்றனர்.கிட்டத்தட்ட 200 குடும்பங்கள் இந்த ஒரே கட்டிடத்தில் வசிக்கின்றனர். இவர்களுக்கு தேவையான அனைத்து விதமானவைகளும்  இந்த கட்டிடத்தில் கிடைக்கிறது.  குறித்த பகுதியில் அதிகளவான குளிர் உணரப்படுவதன் காரணமாக பொதுமக்களால் அடிக்கடி வெளியே சென்று வர முடியாத சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒரே கட்டிடத்தில் வசிக்கின்றனர்.

பூமியின் அடியில் ஒரு நகரம்: ஆப்பிரிக்காவில் ஒரு நகரம் பூமியின் அடியில் தான் உள்ளது.வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அரபு மொழி பேசும் பெர்பர் இ மக்கள் வாழும் சிறிய நகரம் ஒன்று உள்ளது. அதற்கு மட்மதா (matmata) என்று பெயர். தெற்கு துனிசியாவின் டிஜெபல் தஹார் பிராந்தியத்தின் வறண்ட பள்ளத் தாக்குகளில் அமைந்துள்ள நிலப்பரப்பில் இந்த நகரம் அமைந்துள்ளது.

தினமும் மழை பெய்யும் நகரம் : பெலேம் என்ற நகரத்தில்தான் இந்த அதிசயம் நடந்துக் கொண்டிருக்கிறது. பெலேம் என்பது பிரேசிலின் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றாகும். இங்கு தினமும் மதியம் 2 மணிக்கு மேல் மழை பொழிய தொடங்கிவிடுமாம். பெலேம் சிறிய தீவு ஒன்றில் அமைந்துள்ளது. 1616 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பெலேம், மில்லியன் கணக்கான மக்களை கொண்ட ஒரு பெரிய நகரமாகும்.

இதையும் படியுங்கள்:
ராணிபுரம் மலைகளின் இயற்கை அழகு: சுற்றுலா பயணிகளின் சொர்க்கம்!
Tasmania

உலகிலேயே மிகச்சிறிய நகரம் :  உலகிலேயே மிகச்சிறிய நகரம். மேற்கு குரோஷியாவின் இஸ்ட்ரியா பகுதியை அடிப்படையாகக் கொண்டுள்ள ஹம் (Hum) நகரம்தான். இங்கு, வெறும் 52 குடியிருப்பாளர்கள் தான் வசிக்கின்றனர்.இது, உலகின் மிகச்சிறிய நகரமாக அதன் அடையாளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இடம் சுற்றுலாப்பயணிகளுக்கு சரியான மற்றும் அமைதியான இடமாக உள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஹம் நகரம் அதன் சிறிய மக்கள்தொகை, வளமான கட்டிடக்கலை மற்றும் வரலாற்றுக்கு பிரபலமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com