உலகின் முதல் புராணக்கதை அடிப்படையிலான தீம் பார்க்... எங்குள்ளது தெரியுமா?

Theme Park
Theme Park
Published on

நாம் ஏராளமான தீம் பார்க் பார்த்திருப்போம். சென்றிருப்போம். ஆனால், புராணக்கதைகள் அடிப்படையிலும், அந்த கதாபாத்திரங்கள் அடிப்படையிலும் தீம் பார்க் இருப்பது தெரியுமா?

தெலுங்கானாவின் ஹைத்ராபாத்திலிருந்து சுமார் 59 கிமீ தொலைவில் அமைந்துள்ள சுரேந்திரபுரி தீம் பார்க்தான் உலகின் முதல் புராணக்கதைகள் அடிப்படையிலான தீம் பார்க்காகும். இந்த சுரேந்திரபுரி தீம்பார்க், ஸ்ரீ குந்தா சத்யநாராயணன் என்ற தனி ஒரு மனிதரின் முயற்சியால் உருவானது என்றே சொல்ல வேண்டும். இவர் தெலுங்கானாவின் கம்மம் அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறார்.

இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகள் மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பின் காரணமாக ஒரு புராண தீம் பார்க் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. அதுவே இந்த தீம் பார்க் உருவாக முக்கிய காரணம். இவர் பெயரிலேயே இந்த தீம் பார்க் "குந்தா சத்யநாராயணா மித்தாலாஜிக்கல் தீம் பார்க்" என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவின் மிகச்சிறந்த யாத்ரீக ஸ்தலங்கள் அனைத்தையும் இந்த ஒரே இடத்தில் உங்களால் பார்க்க முடியும். அதாவது அமிர்தசரஸ் பொற்கோயில்கள் முதல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் வரை, கொல்கத்தாவின் காளி கோவில் முதல் பூரி ஜகன்னாதர் கோவில் வரை, குஜராத்தின் சோம்நாத் கோவில் முதல் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் வரை, திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் வரை எண்ணற்ற பிரபலமான கோவில்களின் பிரதிகளை இங்கே நாம் காணலாம்.

இதையும் படியுங்கள்:
சர்தார் 2 ஷூட்டிங்கில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு! எப்படி?
Theme Park

இங்கு வெறும் 3கிமீ தூரத்தில் 3000க்கும் மேற்பட்ட சிற்பங்கள் மற்றும் சிலைகளை காணலாம். மேலும் இங்கு நீங்கள் பல்வேறு தெய்வங்களின் சன்னதிகளையும், ஓவியங்களையும் கண்டு களிக்கலாம்.

நீங்கள் ஹைத்ராபாத்தில் இருந்து டாக்ஸி அல்லது பேருந்து மூலம் சுரேந்திரபுரியை ஒன்றரை மணி நேரத்தில் அடைந்திடலாம். பெரியவர்களுக்கு ரூ. 350 , பத்து வயதிற்கு குறைவான சிறார்களுக்கு ரூ. 300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த தீம் பார்க் வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கிறது. ஆகையால், நீங்கள் ஹைத்ராபாத் செல்லும்போது கண்டிப்பாக இந்த தீம் பார்க் சென்று வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com