World Cancer Day 2024: அச்சுறுத்தும் கர்பப்பை வாய் புற்றுநோய்.. தடுப்பது எப்படி?

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் தடுப்பு, கண்டறிதல் மற்றும் சிகிச்சையை ஊக்குவிக்கவும் பிப்ரவரி 4 அன்று உலக புற்றுநோய் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பு (WHO) 2020 ஆம் ஆண்டில் உலகளவில் 3,42,000 இறப்புகள் மற்றும் 6,04,000 புதிய கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் என்று கணித்துள்ளது, இது பெண்களிடையே நான்காவது மிகவும் பொதுவான வீரியம் மிக்க நோயாக உள்ளது.

பொதுவாக புற்றுநோய்க்கு மத்தியில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு அதிகமாக இருப்பதில்லை. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டில் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி குறித்து அறிவித்தார். இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பிரபலமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தான் இறந்துவிட்டதாக அறிவித்து சர்ச்சையை கிளப்பினார்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது கருப்பை வாயை பாதிக்கும் ஒரு வகை புற்று நோயாகும். இது யோனியுடன் இணையும் கருப்பையின் கீழ் பகுதியில் உருவாகும். உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு இந்த புற்றுநோய் குறிப்பிடத்தக்க அச்சத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும். இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்ப்பப்பை வாயில் உள்ள செல்கள் அசாதாரணமாக வளர்ந்து கட்டுப்பாடில்லாமல் கட்டிகளை உருவாக்கும். பெரும்பாலான சமயங்களில் இந்த புற்றுநோயானது Human Papilloma Virus (HPV) எனப்படும் ஆபத்தான வைரஸ் மூலமாக ஏற்படும் தொற்று நோய்களால் உருவாகிறது. இது ஒரு பொதுவான பாலியல் நோய்த்தொற்று. இந்த வகை நோய்த்தொற்றுகள் பெரும்பாலான சமயங்களில் தானாகவே சரியானாலும், காலப்போக்கில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது.

தடுக்கும் வழிகள்:

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரு பயனுள்ள முறை HPV தடுப்பூசி ஆகும்.

HPV சோதனைகள் மற்றும் Pap ஸ்மியர் போன்ற வழக்கமான சோதனைகளை செய்ய வேண்டும், முன்கூட்டியே கண்டறிவதற்கு அவசியம். 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மருத்துவ அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்டபடி, ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும்.

புகைப்பிடிப்பது, மது அருந்துவது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கு வழிவகுக்கும். இதில் உள்ள கெமிக்கல்கள் நேரடியாக கர்ப்பப்பை வாய் செல்களை சேதப்படுத்தும். இதனால் போதை பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

இறுதியில் முக்கியமாக பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வது அவசியமாகும். சரியான ஆணுறைகளை பயன்படுத்தாமல் இருப்பதாலும் இந்த நோய் வருவதற்கு அதிக அபாயம் உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com