
''ஏங்க… இங்க சுட்டு வச்ச முறுக்கு எங்கங்க காணோம்?''
''அதைத்தான் நம்ம பையன் தரைச் சக்கரம்னு நினைச்சு, வெடிக்கக் கொண்டு போய்ட்டான்!''
– நளினி ராமச்சந்திரன், கோவை.
————————
தோழி : ''இது, உங்க வீட்டுக்காரருக்குத் தெரியாம தீபாவளிக்கு நீ எடுத்த சங்கிலியா?''
திருடனின் மனைவி : ''இது கடைக்காரருக்கே தெரியாம எங்க வீட்டுக்காரர் எடுத்த சங்கிலி!''
– ராதிகா ரவீந்திரன், மதுரை
————————
கணவர் : ''தம்பி, கொஞ்ச நாள் நம்ம வீட்டுக்கு பால் போட வேண்டாம்.''
பால் பையன் : ''ஏன் ஸார்… ஊருக்குப் போறீங்களா?''
கணவர் : ''இல்லை, வீட்டுல எல்லோரும் தீபாவளிக்குத் துணிமணி எடுக்கப் போறாங்க. எப்ப திரும்புவாங்கன்னு தெரியாது. வந்ததும் சொல்றேன்!''
– ராதிகா ரவீந்திரன், மதுரை.
————————
————————
மஞ்சு : ''சசி, எங்க குடும்பத்துல
ஆதியில இருந்தே
தீபாவளிக்கு அதிரசம்தான்
பண்ணுவோம்!''
சசி : ''அப்போ,
'ஆதி ரசம்'ன்னு சொல்லு!''
– என்.கோமதி, நெல்லை
————————
மஞ்சு : ''சசி, அலமேலு மாமி அலப்பறை கொஞ்சம் ஓவர்!''
சசி : ''ஏன் மஞ்சு, என்னாச்சு?''
மஞ்சு : ''அவங்க மருமகள் மைசூர்பாகு பண்ண மைசூர் போயிருக்காளாம். இவங்க காசி அல்வா பண்ண காசிக்கு ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணச் சொல்றாங்க!''
– என்.கோமதி, நெல்லை
————————
————————
மாமியார் (பக்கத்து வீட்டுப் பெண்ணிடம்) : ''என் மருமகள்கிட்ட தீபாவளிக்கு நாலு ஸ்வீட் பண்ணிடுன்னு சொன்னது தப்பா போச்சு!''
பக்கத்து வீட்டுப் பெண் : ''ஏன், என்னாச்சு?''
மாமியார் : ''ரெண்டு லட்டு, ரெண்டு மைசூர்பா செஞ்சு வச்சிட்டு போய்ட்டா!''
– ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்
————————
''என் மாமியார் ரொம்ப கஞ்சம்!''
''ஏன்?''
''நண்பர்கள்,சொந்தங்களிட
மிருந்து எவ்வளவு பட்சணம் வருதுன்னு பாத்துட்டு அதற்கேற்றாற்போல நாம பண்ணிக்கலாம் என்கிறார்!''
– ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்.
————————
————————
''என்ன மாலா,
இது தீபாவளி ஸ்பெஷல்
ஜாக்கெட்டா?''
''ஆமாம் வினி,
ஜாக்கெட் பூரா
கேப் வெடி ஒட்டியிருக்கும்!''
– பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி
————————
''என்ன டியர், உங்க ஆபீஸ்ல போனஸோட கொடுத்த லட்டு ரொம்ப சின்னதா இருக்கே!''
''போனஸ் மாதிரி லட்டும் சுருங்கிப்போச்சு டியர்!''
– பொ.பாலாஜிகணேஷ்,
கோவிலாம்பூண்டி