0,00 INR

No products in the cart.

குறிஞ்சிக் கடவுளாம் குமரன்!

தொகுப்பு: எம்.கோதண்டபாணி

ல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடி’
என்பது ஆன்றோர் வாக்கு.
அதன்படி மண் தோன்றுவதற்கு முன்பே முதலில் தோன்றியது கல்தான் என்பது புரியும். கல் என்பது மலைகளைக் குறிக்கும். ஐவகை நிலங்களில் முதலில் வரிசைப்படுவது குறிஞ்சியாகும்.

பிரளயத்துக்குப் பிறகு உலகில் எங்கும் தண்ணீர் நிரம்பி இருந்தது. நீர் கொஞ்சம் கொஞ்சமாக வற்றத் தொடங்கியதும் முதலில் தென்பட்டது மலைகள்தான். ஆக, நிலங்களின் வரிசையினால் மட்டுமல்ல, காலத்தினாலும் முதன்மையானது மலையும் மலை சார்ந்த இடமுமாகும். இந்த நிலப்பரப்பை மக்கள் குறிஞ்சி என அழைத்தனர்.

குறிஞ்சி நிலத்துக்குரிய தெய்வமாக வணங்கப்படுபவர் முருகப்பெருமான். அதனால் உலகத்தின் முதன்மையான தெய்வமாகவும் பழைமையான தெய்வமாகவும் இவர் வணங்கப்படுகிறார். இதிலிருந்து முருக வழிபாடு என்பது பழங்காலந்தொட்டு தமிழர்களின் வழக்கில் இருந்து வருகிறது என்பது புலனாகும்.

சேயோன் மேய மைவரை உலகமும்’ என்கிறது தொல்காப்பியம். ‘சேயோன்’ என்பதற்குச் சிவந்த நிறமுடையவன் என்று பொருள். முருகப்பெருமானின் மேனி மட்டுமல்ல, அவனது கண்களும் சிவந்த நிறமுடையவையாம். மலை கிராமங்களைச் சேர்ந்த மக்களின் கண்கள் எந்நேரமும் சிவந்து காணப்படுவதை இன்றும் நாம் காணலாம்.

குறிஞ்சி நிலத்தை தமது வாழ்விடமாகக் கொண்ட மக்கள், தாம் வணங்கும் தெய்வத்தை உயர்ந்த இடத்தில் வைத்து வணங்க வேண்டும் என்று எண்ணினர். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் மலையாகும். மரியாதைக்குரிய ஒருவர் நமது இல்லத்துக்கு வந்தால் அவருக்கு உயர்ந்த ஒரு ஆசனத்தைக் கொடுத்து அமரச் செய்வோம் அல்லவா? அதுபோல்தான் அவர்களின் மரியாதைக்குரிய தெய்வமாம் முருகப்பெருமானை உயர்ந்த இடமாகிய மலையின் மீது அமர்த்தி வழிபட்டனர்.

விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ…’ என்கிறது திருமுருகாற்றுப்படை. இதற்கு, ‘வானை முட்டும் உயர்ந்த மலைகளையுடைய குறிஞ்சி நிலத்துக்கு உரியவனே’ என்பது பொருள். நக்கீரர் கூட தமது பாடலின் இரண்டு இடங்களில் முருகனைக் கிழவன் என்று கூறிப்பிடுகிறார். இவ்விரு இடங்களிலும் கிழவன் என்பதற்கு, ‘உரியவன்’ என்றே நாம் பொருள் கொள்ள வேண்டும். இதனால்தான் குறமகள் வள்ளியை கரம்பற்ற, முருகப்பெருமான் கொண்ட மாயக் கோலமும் கிழ வடிவமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

முருகப்பெருமான் தாம் கோயில் கொண்ட அனைத்துத் தலங்களும் மலை வாசஸ்தலங்களாயிருக்க, சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர் மட்டும் வித்தியாசமாக கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலமாக அமைந்திருப்பது ஆச்சரியம்தான். பிறப்பிலேயே ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் கொடுத்தவன்தானே முருகப்பெருமான். ஐவகை நிலம் மட்டுமல்ல, அனைத்து லோகத்துக்கும் அருளையும் ஆசியையும் வழங்கும் குமரக் கடவுளை, சஷ்டி திருநாளாம் கந்த சஷ்டியன்று வழிபட்டு அருள் பெறுவோம்.

2 COMMENTS

  1. முருகப் பெருமானின் அருள் அளப்பறியது. நம் வேண்டுதலை ம்.. என்று சொல்லி முடிப்பதற்குள் ஓடி வந்து நிறைவேற்றி வைப்பவன். அதில் அவன் ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை. அதனால்தானே பழந்தமிழர்கள் முதல் இன்றைய சமுதாயத்தின் பெரும்பாலான மக்களின் இதயத்தில் உயர்ந்த இடத்தில் வைத்து வணங்கப்படுகிறான் முருகன். அழகன் முருகனின் அருமை பெருமைகளை மிக அழகாக தொகுத்து வழங்கிய
    எம். கோதண்டபாணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  2. குன்றுதோறும் குடிகொள்ளும் குமரனின் பெருமையை விளக்கிய விதம் அருமை. குறிஞ்சி நிலத்துக்குரிய தெய்வமான முருகன் (முருகு என்றால் அழகு) ,அந்த அழகனை இவ்வுலகில்
    வணங்காதோர் எவருமில்லை.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

ஏலேலோ ஏலகிரி எழில்மிகு ஐந்து இடங்கள்!

- மஞ்சுளா சுவாமிநாதன்  கொரோனா வந்தாலும் வந்தது, சுற்றுலா/ உல்லாசப் பயணம்/ விடுமுறை எல்லாம் தடைப்பட்டுப் போச்சு. கடந்த இரண்டு வருஷமா வீட்டுலயே  முடங்கிக் கிடந்த எங்களுக்கு சென்ற டிசம்பர் மாதம் ‘ஓமைக்ரான்' வருதே,...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன் சுதா ரகுநாதனுக்கு மத்திய அரசுப் பதவி மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சகம், பிரபல கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் அவர்களை, கலாசாரத்திற்கான ஆலோசனைக் குழு (Central Advisory Board...

முத்துக்கள் மூன்று

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன் ஆட்டோமொபைல் துறையில் சாதித்த சந்திரகலா மிகவும் சவாலான ஆட்டோமொபைல் துறையில் கடந்த 26 வருடங்களாக சாதனைகள் செய்து வருகிறார் சந்திரகலா. தூத்துக்குடியில் சாதாரண குடும்பத்தில் அதிகம் படிக்காத பெற்றோருக்கு மகளாகப் பிறந்தவர். பள்ளிப்...

எல்லாம் நாராயணன்!

0
தொகுப்பு: எஸ். சந்திர மௌலி படங்கள்: சேகர் இந்த ஆண்டு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஜெயந்தி தினம் மார்ச் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையின் பல தத்துவங்களையும், மிக எளிதில், அனைவருக்கும் புரியும் வகையில் குட்டிக் கதைகளாக...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டபிராமன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் சாதனை அண்மையில் நியூசிலாந்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, சுற்றுப் பயணம் செய்து நியூசிலாந்து மகளிர் அணியுடன் திறமையாக விளையாடினார்கள்....